Get Adobe Flash player

கதம்பம்

சென்னையின் முதல் கிறிஸ்துவ போதகர்
தந்தை எப்ரேம் தெ நெவேர்


அருள் சகோதரி ஜெனி - பனித அன்னாள் சபை -திருச்சி

நன்றி - நம்வாழ்வு

திருத்தூதர் புனித தோமாவுக்குப் பின் பலர் சென்னையில் கிறிஸ்தவத்தைப் பரப்பியுள்ளனர். எனினும் நினைவில் நிற்கக்கூடியவர் தந்தை எப்ரேம்தெநெவேர். இவர் 1603ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். செல்வச் செழிப்புடன் பிரபுக்களின் குடும்பத்தில்பிறந்த இவர், புனிதபிரான்சிஸ் அசிசி வழியில் தானும் வாழ ஆசைக்கொண்டார்.

Lire la suite...

புனித நதிகள் பாவத்தைக் கழுவாது  
நன்றி ; வத்திக்கான் வானொலி

கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார் ஒரு குரு. அவருடைய சீடர்களாக, மூன்று இளையோர், அந்த ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தனர். அம்மூன்று சீடர்களும் ஒருநாள் அவரிடம் சென்று, "குருவே, கடந்த ஓராண்டளவாய், நாங்கள் ஒவ்வொரு நாளும் இந்த நதியின் புனித நீரில் மூழ்கி எழுந்துள்ளோம். தற்போது, இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் மூழ்கி எழுவதற்கு விரும்புகிறோம்" என்று சொன்னார்கள்.

Lire la suite...

அளவற்ற அன்பு செய்யும் இயேசுவின் திரு இருதயம்
ஷாமினி சிமியோன்...
நன்றி : தினகரன்

நாளை  08.06.2018 திருஇருதய திருவிழா

அகில உலக திருச்சபை நாளை  08.06.2018 இயேசுவின் திரு இருதய திருநாளைக் கொண்டாடுகின்றது. ஜூன் மாதம் இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகும். கனிவும் மனத்தாழ்மையும் கொண்ட ஆண்டவர் இயேசுவின் திரு இருதயத்தை போல நமது இருதயமும் மாறவேண்டும் என்பதுதான் திரு இருதய பக்தியின் மையக்கருத்து, ஆண்டவர் விரும்புவதும் அதைத்தான்.

Lire la suite...

இதய ஆண்டவரின் வாக்குறுதிகள்

திரு இதய ஆண்டவர் புனித மார்கரீத்து மரியா வழியாக தம் பக்தர்களுக்கு 12 சிறப்பான வாக்குறதிகளை அருளியுள்ளார்

1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.
2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.
3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறதலாக இருப்போம்.

Lire la suite...

 

திவ்ய திருப்பலி எப்படி கொண்டாட்டமாக இருக்கமுடியும்?
அருள்பணி மரிய  அந்தோனிராசு பாளயங்கோட்டை

  1. கல்வாரிப் பலியை எப்படி கொண்டாட முடியும்?
  1. கோதுமை அப்பத்தை தன் உடலாகவும், திராட்சை இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றி இதை வாங்கி உண்ணுங்கள், இதை வாங்கிப் பருகுங்கள் என்று திவ்ய திருப்பலியை ஏற்படுத்தினார். அதை எப்படிக் கொண்டாட முடியும்?

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org