திருமதி ஞானு மோனிகா முக நூலில் இருந்து :

தோழர்களே...

படித்ததில் ரசித்த சில ஜோக்குககள்....

உங்களின் பார்வைக்கு

ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:

"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்:

"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"


தாய் - ஜோசியரே, எவ்வளவு பரிகாரம் செய்தும், என் பையன் வெளிநாடு செல்வது தடைபட்டே வருதே..?

ஜோசியர் - பெயரை மோடின்னு மாத்திப் பாருங்களேன்..

( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)

"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"

"வீட்லதான்டா இருக்கேன்..."

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."

அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு

மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!

நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…

“ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”
“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”

பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”

“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”

“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு
வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”

*ஜக்கு:* என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?

*மக்கு:* ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!

*ஜக்கு:* பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?

*மக்கு:* இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு.
---------------------------------------------------
*மக்கு:* இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!

*ஜக்கு:* ஏன் என்ன தப்பு செஞ்ச?

*மக்கு:* 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு

*ஜக்கு:* இது கூடதெரியலையா?

*மக்கு :* ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்!
---------------------------------------------------
*மக்கு:* என் பையன் தங்கமானவன்டா!

*ஜக்கு:* எப்படி சொல்ற?

*மக்கு:* சிகரெட், தண்ணி, பொம்பள... எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.

*ஜக்கு:* உன் பையனுக்கு என்ன வயசு?

*மக்கு :* ஒரு வயசு.
---------------------------------------------------
*மனைவி :* - உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

*கணவன் :* - சொன்னேனே... மறந்துட்டியா...

*மனைவி :* - எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

*கணவன் :* - உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

*மனைவி :* -????????
---------------------------------------------------
*மனைவி :* நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

*கணவன் :* அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!
---------------------------------------------------
*ஹோட்டல் ஓனர்:* "சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?"

*sir:"மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!"
---------------------------------------------------
*TTR:* "எண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேரியா சென்னை வரைக்கும் வந்தே?"
*ஒருவன்*: "சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது.. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நெனச்சுத்தான் ஏறினேன்.."
---------------------------------------------------
*வாத்தியார்:* "ஏன்டா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடுற?"
*மாணவன்:* "நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் ஸ்டெப்ஸ்க்கு மார்க் போடுவேன்னு.. அதான் சார்.."
*வாத்தியார்:* ….!!!!!