Get Adobe Flash player

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு.

2017.12.17

"ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது!"

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! விடுதலை, நேர்மை என்னும் ஆடையை நமக்கு அணிவித்து, நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்யும்  நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் திருவருகைக் கால மூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். 

கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் எது என்பது பற்றிய தெளிவான செய்தியினை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அதாவது, தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் என்பதே அச் செய்தியாகும்.

தூய பவுலடியார் வழியாக நமக்கு வழங்கப்படும் இச் செய்தியை நமது உள்ளத்தில் பதித்தவர்களாக, அவற்றை வாழ்வாக்கிச் செயற்பட அருள் வரம் கேட்டு இத் திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org