Get Adobe Flash player

*பாலேஸ்வரம் அழுகிறது...* 

கஸ்மீர் ரோச், சின்ன மலை


weeping eyes

அய்யோ..

ஈ மொய்த்த உடலாக

நாய் சுற்றி வரும் பிணமாக

கேட்க நாதியற்ற மனிதமாக

உதறித் தொலைத்த எச்சில் இலைகளாக

(Lire la suite பட்டனை அழுத்தவும்)

 

மனத்தை தொலைத்த

மரங்களாக

துர் நாற்றமடித்த

துணிப் பொட்டலமாக

தெருவிலும்

சாலையிலும்

குப்பையிலும்

கிடந்தவற்றை

குளிப்பாட்டி

பசியாற்றி

நோய் நீக்கி

துயர் போக்கி

மனிதராக்கி

வாழ வழி செய்த

அருட் தந்தையே

நீர் கைகட்டி

ஊடகத்தின் முன்

நிற்கையிலே.....

பாலேஸ்வரம் அழுகிறது..

எம் மனம் உமக்காக செபிக்கிறது...

வேதனைப்பட்டு,

அவமானப்பட்டு,

மரணித்து,

மாட்சியுடன் 

உயிர்த்த

உத்தமர்

துணை என்றும்

உம்மோடு....

செபங்களுடன்,

கஸ்மீர் ரோச்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org