Get Adobe Flash player

அளவற்ற அன்பு செய்யும் இயேசுவின் திரு இருதயம்
ஷாமினி சிமியோன்...
நன்றி : தினகரன்

நாளை  08.06.2018 திருஇருதய திருவிழா

அகில உலக திருச்சபை நாளை  08.06.2018 இயேசுவின் திரு இருதய திருநாளைக் கொண்டாடுகின்றது. ஜூன் மாதம் இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகும். கனிவும் மனத்தாழ்மையும் கொண்ட ஆண்டவர் இயேசுவின் திரு இருதயத்தை போல நமது இருதயமும் மாறவேண்டும் என்பதுதான் திரு இருதய பக்தியின் மையக்கருத்து, ஆண்டவர் விரும்புவதும் அதைத்தான்.

தமது மலைப்பொழிவில் (மத்தேயு 5:8) தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் என்று ஆண்டவர் கூறுகிறார். அன்பிற்கு அடையாளமாக திகழுவது இதயம். இறை அன்பின் அடையாளம் தான் இயேசுவின் திரு இருதயம். இறைவனின் அளவற்ற அன்பின் அடையாளமாகவும். மீட்பு வரலாற்றின் எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளதுதான் திரு இருதயம். தன் ஒரேமகனையே அளிக்கும் அளவுக்குக் இறைவன் உலகின் மேல் அன்பு கூர்ந்தார் (யோவான் 3:16) இவ்வசனத்தின் மூலம் இறைதந்தையின் அளவற்ற அன்பை காணக்கூடியதாக இருக்கிறது.

“நான் உங்களுக்கு புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லான இதயத்தை எடுத்து விட்டு சதையிலான இதயத்தை பொருத்துவேன்” எசேக்கியல் 36:25, 27) பழைய ஏற்பாட்டில் ஆண்டவரின் கட்டளைகள் கற்பனைகளில் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டில் அவை மனித இதயங்களில் எழுதப்படுகின்றன. இதைப்பற்றி திருத்தூதர் பவுல் கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே.

அது மையினால் எழுதப்பட்டதல்ல மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது என்று கூறுகிறார்” (2 கொரிந்தியர் 3:3) யேசுவின் திரு இருதயத்திற்கு விழா எடுக்கும் நாம் நமது இருதயமும் யேசுகிறிஸ்துவின் திரு இருதயத்தைப் போல் பிரகாசிப்பதற்காகவும் குத்தி திறக்கப்படுவதற்காகவும் மன்றாடுவோம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org