*தோமை புனிதருக்கு....* 
கஸ்மீர் ரோச்,
  **புனித தோமை திருத்தலம்,* 
 *சின்னமலை* .*


 
அஞ்சாநெஞ்சரே...
அக்கறையானவரே....
அறவழி கண்டவரே....
ஆற்றல் மிக்கவரே...
ஆழ்கடலை கடந்தவரே...
ஆண்டவரின் மெய்சீடரே....
 
இந்தியாவின் பாதுகாவலரே...
இந்திய கிறிஸ்தவ வேரே....
இன்றும் எம் அரணே.....
 
ஈன்ற தாயின் நல்மகனே....
ஈதலின் மகத்துவம் அறிந்தவரே.....
ஈனக் குரலோரைக் காத்தவரே...
 
உண்மை இயேசுவின் பக்தரே....
உயர் இலட்சிய வேங்கையே....
உண்ணா கொள்கை  பற்றாளரே...
 
ஊர்ஊராய் அலைந்த காவலரே...
ஊண் உறக்கம் தொலைத்தவரே....
ஊக்கம் பெற செபித்தவரே.....
 
எடுத்த செயலின் வெற்றியாளரே....
எம்முன்னோரின் வலுவே...
எள்ளளவும் கலங்கா இறை வீரரே...
 
ஏசு பரனின் தளபதியே...
ஏழைக் குரலை அறிந்தவரே...
ஏதும் அறியாமல் வந்தவரே....
 
ஐயங்களை புறம்பே தள்ளியவரே...
ஐயன் யேசுவை தொட்டவரே ..
ஐயரும் உணர்ந்த நற்செய்தியே...
 
ஒற்றுமையின் மூலக் காரணியே...
ஒரே கொள்கை பற்றாளரே ...
ஒதுக்கப்பட்டோரின் நம்பிக்கையே...
 
ஓயா பிசாசின் கொலைஞரே...
ஓரிடத்தில் நில்லா ஊழியரே....
ஓங்காமல் போதித்த மறைசாட்சியே
 
ஔடத நல்வார்த்தை பகர்ந்தவரே...
 
 *புனித தோமையார் திருநாள் நல்வாழ்த்துகள்* .