Get Adobe Flash player
Madha TV
இன்றைய புனிதர்

2016-07-31
புனித லயோலா இஞ்ஞாசியார் (St.Ignatius Loyola)
சேசு சபை மறைபணியாளர்
St Ignacy

பிறப்பு  1491 காண்டாபிரியா, ஸ்பெயின்
இறப்பு 
31 ஜூலை 1559 உரோம்

இவர் ஓர் உயர் குலத்தில் பிறந்தவர். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார். இவர் பல ஆண்டுகள் படைவீரராக பணியாற்றினார். ஒருமுறை போரிடும்போது, அவரின் காலில் பலமாக அடிபட்டது. இதனால் தொடர்ந்து பலநாட்கள்

மருத்துவமனையில் தங்கி, சிகிச்சைப் பெற்று வந்தார்.

அப்போது ஒருநாள் கிறிஸ்துவைப்பற்றிய புத்தகம் ஒன்று இவருக்கு கிடைத்தது. அப்புத்தகத்தை மிக ஆர்வமாக படித்தார். இயேசுவின் வாழ்க்கை இவரை கவர்ந்திடவே, அவரைப்போல தானும் வாழ வேண்டுமென்று முடிவெடுத்தார். செபவாழ்வில் ஈடுபட்டார். அன்னை மரியின்மேல் ஆழ்ந்த பக்திகொண்டார். எச்சூழ்நிலையிலும் அன்னையைப் பற்றிக்கொண்டு வாழ்ந்தார். ஓர் நாள் அன்னையின் தரிசனத்தையும் காட்சியாக பெற்றார். அதன்பின் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று, பாவமன்னிப்புப்பெற்றார். கடுந்தவம் புரிந்தார். இடைவிடாமல் பல மணிநேரம் தொடர்ந்து தியானம் செய்தார்.

பின்னர் பாரீஸ் நகர் சென்று இறையியல் படித்தார். தன்னுடன் பயின்ற சில நண்பர்களையும் தன்னுடன் சேர்த்தார். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, உரோம் நகரில் ஒரு சபையைத் தோற்றுவித்தனர். இச்சபையே "இயேசு சபை" என்று பெயர் பெற்றது. 1534 ஆம் ஆண்டு கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்னும் வார்த்தைப்பாடுகளைப்பெற்று குருவானார்கள். இவர்கள் சிறந்தமுறையில் பணி செய்தார்கள். 1552 ஆம் ஆண்டு இஞ்ஞாசியார் இயேசு சபையின் முதல் தலைவராக தேர்ந்துக் கொள்ளப்பட்டார். இஞ்ஞாசியார் பல புத்தகங்களை எழுதி அதன் வழியாகவும் மறைப்பணியை ஆற்றினார். இவரும், இவரின் சபைக் குருக்களும் திருச்சபையின் சீரமைப்பில் சிறப்பான பங்கெடுத்தனர். இன்று இவரால் உருவாக்கப்பட்ட இயேசு சபை உலகெங்கும் பரவியுள்ளது.

செபம்:
என்றும் வாழ்பவரே எம் தந்தையே! புனித இஞ்ஞாசியாரின் வழியாக நீர் இயேசு சபையை உருவாக்கினீர். இதோ உம் பாதத்தில் அச்சபை சகோதரர்கள் அனைவரையும் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org