Get Adobe Flash player

இடைவிடாது செபிக்க இயலுமா?

ஒரு முறை 45 வயதான போதகர்கள்👴🏼🧔🏼 அனைவரும் வேதத்தில்📕 உள்ள கடினமான காரியங்களுக்கு பொருளை அறியும்படி ஒன்றுகூடி வந்தார்கள். அப்பொழுது அவர்களில் ஒருவர்🧔🏼 அப்.பவுல் எழுதிய இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்🙌🏼 எனும் பகுதியை சுட்டிக்காட்டி இதை நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியுமா..எவ்வாறு ஒருவரால் இடைவிடாமல் ஜெபிக்க முடியும் என்று கேட்டார். வெகு நேரம்⏰ இதைக்குறித்து விவாதித்த போதகர்கள் இறுதியில் நாளைக்கு நாம் கூடும்போது ஒவ்வொருவரும் இந்த வசனத்தைக் குறித்த கட்டுரையை எழுதி கொண்டு✍🏻 வரவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

இவர்கள் பேசுவதைக் 👂🏼கேட்டுக்கொண்டிருந்த வேலைக்காரப் பெண்மணி🙎🏻♀ ஒருவர்," இந்த சின்ன விசயத்துக்கு ஏன் இவர்கள் இவ்வளவு தடுமாறுகிறார்கள்.இதற்கு ஏன் ஒருநாள் அவகாசம் தேவை" என்று அவர்கள் காதில்👂🏼 விழும்படி சத்தமாக🗣 கூறிவிட்டாள்.

அவள் கூறியதைக் கேட்ட போதகர்கள்🧔🏼👴🏼 அந்த பெண்மணியிடம்," என்னமா நீ, இவ்வளவு எளிதாக சொல்லிவிட்டாய். இடைவிடாமல் ஒருவரால் எவ்வாறு ஜெபிக்க🛐 முடியும், நடைமுறைக்கு இது சாத்தியமா! உன்னால் அப்படி ஜெபிக்க முடியுமா!" என்று கேட்டார்.

அதற்கு 🙎🏻♀அவள்," ஆம்! ஐயா, என்னால் முடியும். நான் அதை அனுதினமும் கடைபிடிக்கிறேன்" என்றாள். ஆச்சரியமடைந்த போதகர்கள், " எப்படி?" என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த வேலைக்கார பெண்🙎🏻♀ கூறினாள்," நான் தூங்கி எழுந்து🛌🏻 முதலில் கண்விழித்ததும்,👀 "ஆண்டவரே! இந்த நாளில் உம்மை முழுமையாய் அறிந்துக்கொள்ள என் மணக்கண்களை👀 திறந்தருளும், இன்னும் உம்மை அறியாத மக்களின் மனக்கண்ணையும் திறந்தருளும்" என்று 🛐ஜெபிப்பேன். பின்பு

பல் விலக்கி முகம் 🚿கழுவும்போது," ஆண்டவரே! என் பாவஅழுக்கை முற்றிலும் உமது இரத்ததினால் கழுவி என்னை சுத்திகரியும்" என்று கேட்பேன். வீட்டைப்🏡 பெருக்கி சுத்தம் செய்யும்போது,"ஆண்டவரே! என் இருதயத்தில்❤ மறைந்திருக்கும் வேண்டாத குப்பைகளை நீக்கிவிடும்" என்பேன்.

குளித்து🛀🏼 உடை👗 மாற்றும்போது,"ஆண்டவரே! அநுதினமும் என்னை உமது இரட்சிப்பின் வஸ்திரத்தினாலும், நீதியின்⚖ உடையினாலும், துதியின்👩🏻👩🏻👩🏻🎤 ஆடையினாலும் என்னை அலங்கரித்து உடுத்தும்" என்பேன்.

பிறகு அடுப்பைப் பற்றவைக்கும்போது,"ஆண்டவரே! இந்த தீ🔥 கொழுந்துவிட்டு எரிவதுபோல என் ஆத்துமா உமது பரிசுத்த ஆவியினால்🕊 கொழுந்துவிட்டு எரியும்படி🔥 கிருபை தாரும்" என வேண்டுவேன்.🙌🏼 விளக்கை💡 போடும்போது," ஆண்டவரே! இந்த விளக்கின் பிரகாசம்போல்💡 நானும் உமக்கு சாட்சியாய் உலகில் பிரகாசிக்கும்படி🕯 செய்யும்" என கேட்பேன்.

உணவை🍜 அருந்தும்போது,"ஆண்டவரே! ஜீவஅப்பமாகிய🍞 உம்மையும் உமது பரிசுத்த வார்த்தையாகிய பாலையும்🥛எனக்குத் தரவேண்டும்" என்பேன். பிள்ளைகளை👦🏻👧🏻 பள்ளிக்கு அனுப்பும்போது," ஆண்டவரே! நானும் இந்த சிறுபிள்ளைகளைப்👦🏻👧🏻 போல கள்ளம் கபடில்லாமல் வாழ உதவி செய்யும்" என்று கேட்பேன்.

எஞ்சிருக்கும் பணிகளைச் செய்ய,"ஆண்டவரே! இந்த நாளில் நான் செய்ய வேண்டிய வேலைகளுக்கு எனக்கு போதுமான சரீரசுகத்தையும் பெலனையும் தாரும்" என ஜெபிப்பேன்.🛐 இப்படி இடைவிடாமல் நான் ஆண்டவரோடு பேசிக்கொண்டே🗣 இருப்பேன் என்றாள்.

அவள் கூறியதைக் கேட்ட போதகர்கள் மகிழ்ச்சியினால்😇 நிரம்பி நன்றியோடு🙏🏼 அவளை நோக்கி, "ஆம்! மகளே, இப்பொழுதுதான் புரிகிறது இடைவிடாமல் ஜெபிப்பதின்🙌🏼 அர்த்தம்" என்றார்கள்.

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org