Get Adobe Flash player
சிற்றின்பமும் பேரின்பமும்! -  சித்தர் வாக்கு
நன்றி : திருஅவை செய்தி
 
  • *இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!*
  • *படைப்பினால் ஈர்க்கப்பட்டால் சிற்றின்பம். படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.
  • *படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.  படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.
  • *என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.  இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.
  • *நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.  நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.
  • *அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம். அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.
  • *செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம். செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.
  • *செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.  செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.
  • *புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம். அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.
  • *இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.
    வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.
    *நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம். நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.
  • *உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம். உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.
  • *இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.  துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.
  • *எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம். எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.
  • *பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம். மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.
  • *பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம். பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.
  • *சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம். எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.
  • *பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம். தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.
  • *அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம். அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.
  • *அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம். அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.
  • *அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம். அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.
  • *பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம். பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.
  • *முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம். முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.
  • *இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம். கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.
  • *உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம். உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.
  • *புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம். புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.
  • *மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம். மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.
  • *மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம். மரணத்தையும் வெல்வது பேரின்பம்.
  • *மனமாய் இருந்தால் சிற்றின்பம். மனதைக் கடந்தால் பேரின்பம்.
  • *வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம். எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.
  • *பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம். மொத்தமாய் கண்டால் பேரின்பம்.
  • *அகங்காரம் கொண்டால் சிற்றின்பம். அகங்காரம் துறந்தால் பேரின்பம்.
  • *தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம். அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.
  • *ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம். ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.
  • *துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம். துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.
  • *ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம். இறைவனால் தரப்படுவது பேரின்பம்.
  • *உலகைப் பற்றினால் சிற்றின்பம்.  இறைவனைப் பற்றினால் பேரின்பம்.
  • *பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம். தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.
  • *இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம். இன்பமான இன்பமே பேரின்பம்.
  • *அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம். ஞானம் விரும்புவது பேரின்பம்.
  • *பெற்று மகிழ்வது சிற்றின்பம்.  கொடுத்து மகிழ்வது பேரின்பம்.
  • *சக்தியை இழப்பது சிற்றின்பம்.  சக்தியாய் மாறுவது பேரின்பம்.
  • *பற்றுக் கொள்வது சிற்றின்பம். பற்றற்று இருப்பது பேரின்பம்.
  • *மாறுவது, தாவுவது சிற்றின்பம். மாறாதது நிலைத்தது பேரின்பம்.
  • *நிலையற்றது சிற்றின்பம்.  நிரந்தரமானது பேரின்பம். -

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org