*சின்னஞ்சிறு மலரே...* 
கஸ்மீர் ரோச், சின்னமலை, சென்னை
Ste Thérèse 02

 
சிறியவற்றில் கருத்தானவரே
 
சிறியவற்றால் சிகரங்களை தொட்டவரே
 
சின்ன அறையில் செபித்தவரே!
 
சின்ன சின்ன செயலால் இறைவனை மகிழ்வித்தவரே
 
சிறு வழியிலும் பெரும் வசந்தம் கண்டவரே
 
சித்திரம் போன்று பலரால் போற்றப்படுபவரே
 
சிறியவற்றில் மிகு அக்கறையானவரே
 
சிறுவர் சிறுமியோரின் இதயம் கவர்ந்தவரே
 
சின்ன ராணியாய் உலகோரால் புகழப்படுபவரே
 
சிறியவற்றில் சிறந்ததால் பெரியவற்றில் வணங்கப்படுபவரே
 
சிறுமையும் வலுவின்மையும் வெற்றியாக மாற்றியவரே
 
சிறிய வயதில் மறைந்து இறையரசில் பூக்கின்ற மலரே
 
எம் மனங்களை சிறுமலர் போல மாற்ற மன்றாடுமே..
 
 *குழந்தை தெரசம்மாள் திருநாள் நல்வாழ்த்துகள்.* 
 
அன்புடன்,
கஸ்மீர் ரோச்,
சின்னமலை,
சென்னை