Get Adobe Flash player
தமிழ் வளர்த்த ஐரோப்பிய கிறிஸ்துவ பாதிரியார்கள்...வீரமாமுனிவர் -
சமூக ஊடகம்
திருஅவை செய்தி
தொகுப்பு IV - பிரதி 105 25 - 10- 2018

Veeramaa munivar

முகநூலில் பல இளைஞர்கள், வரலாறு தெரியாதவர்கள்...தங்களது அறியாமையின் காரணமாகவும், இன்று அவர்கள் மனதில் விதைக்கப்பட்ட, காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாகவும், அவர்களது இந்து மதத்தின் மேல் உள்ள பெருமையின் காரணமாகவும்,
கிறிஸ்தவர்களை, பல்வேறு பெயரிட்டு, கேலி கிண்டல், நக்கல் நையாண்டி செய்வதும், சம்பந்தமே இல்லாமல், கமென்டுகளில்,அநாகரீகமான வார்த்தைகளை பதவி செய்வதும், வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், இயேசுவின் வழியில் பகைவனையும் அன்பு செய்யும் பக்குவம் இருப்பதாலும் இந்த பதிவு.
 
இன்றைக்கு நாம் வாசிக்கும் இந்த உரைநடைத் தமிழை, தமிழுக்கு அறிமுகம் செய்தவரே வீரமாமுனிவர் என்கின்ற இத்தாலிய இயேசு சபை பாதிரியார் வீரமாமுனிவர் என்கின்ற பெஸ்கிதான்.(CONSTANTINE JOSEPH BESCHI ). இவர்  1710 தில், இத்தாலிய நாட்டு பிரிஸ்பேனில் இருந்து புறப்பட்டு, கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக கோவா வந்து சேருகின்றார் ..அங்கிருந்து, கடல் மார்க்கமாக கொச்சி வந்து, அங்கிருந்து கால்நடையாக தமிழகம் வந்து சேர்கிறார்...மதுரை அருகில் உள்ள காமநாயக்கன்பட்டி என்கின்ற கிராமத்தில் வந்து தங்குகிறார்... பின் சுப்ரதீபக் கவிராயரிடம், தமிழ், இலக்கண இலக்கியம் கற்று அதில் பாண்டித்யம் பெறுகிறார்...
 
தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளை தேடி அவற்றை சேகரித்ததால் இவரை "சுவடி தேடும் சாமியார் " என்றும் அழைத்தார்கள்..தேவாரம் , திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற தமிழ் இலக்கியங்களை, ஐரோப்பிய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார்..செய்யுள் வடிவில் இருந்த தமிழ் இலக்கண இலக்கியங்களை உரை நடைத் தமிழாக மாற்றியவரும் இவரே...க வுக்கு மேல ஒரு புள்ளி வைத்து க் என்று எளிமை படுத்தியவரும் இவர்தான்...தமிழில் ஆ என்பதை அந்த காலங்களில் அர  என்றே எழுதுவார்கள்...அ  வின் கீழ் ஒரு சுழியிட்டு, அதை ஆ வென்று உருமாற்றியவரும் இவர்தான்....இவ்வாறு தமிழை எளிமைப்படுத்தி, தமிழ் இலக்கண நூல் தென்னூல் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம் என்கின்ற இரண்டு இலக்கண நூல்களை உருவாக்கினார்...இதில் கொடுந்தமிழ் இலக்கணம், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் புழக்கத்தில் இருந்த தமிழ் சொற்களை பற்றிய இலக்கணம்...
 
அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவின் பெருமையை, தேம்பாவணி என்கின்ற காப்பியமாக எழுதி  வெளியிட்டார்...தமிழில் எழுதப்பட்ட கடைசி காப்பியம் இதுதான்...பரமார்த்த குருவும் சீடர்களும் என்கின்ற நகைச்சுவை இலக்கியத்தையும் இவர் எழுதி வெளியிட்டார் .
தனது நடை உடை பாவனை, உணவு, வழிபாடு  அனைத்திலும் தமிழராக மாறிய வீரமாமுனிவர், தனது இறுதி நாட்களை கேரளத்தில் இருந்த குருமடத்தில் கழித்து அங்கேயே மரித்துப்போகிறார்...
 
இந்த நன்றியை முன்னிட்டாவது, நான் கிறிஸ்துவனாக வாழ்வதில் பெருமை அடைகிறேன். மேலும் தெரிந்துகொள்ள google இருக்கிறது....கொஞ்சம் உள்ள போய் படிங்க....வரலாறு தெரிந்தால்தான் வரலாறு படைக்க முடியும்.உங்க செல் போனு , காரு, ரயிலு, பிளேனு, கம்ப்யூட்டரு, இன்டெர் நெட்டு, பிரின்டிங் , எல்லாமே மேலைநாட்டுக்காரன் கண்டு பிடிச்சதுதான்...அவிங்க எல்லோருமே கிறிஸ்தவிங்கதான்....அப்புறம் நாம கண்டு பிடிச்சது.....சாதிதான்....இந்து மதத்தோட அடிப்படையே சாதிதான்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org