Get Adobe Flash player
*எம் தகப்பனே...!* 
கஸ்மீர் ரோச், சின்னமலை
St Xavier 03
 
கண் காணாத தேசம்விட்டு 
கடந்து வந்த உறவே
 
மண் வாசம் அறியாது
வலம் வந்த புனிதமே
 
வண் பகைவரையும் தினம் ஆசீர்வதித்த மனிதமே
 
புண் தொற்றியும் 
இறை பற்றிய வலுவே
 
விண் உறவுக்காகவே எல்லாம் உதறிய பலமே
 
ஊண் உறக்கம் மறந்தே எம் கடற்கரை நடந்த துறமே
 
இன் சொல்லால் எம் முன்னோரை கவர்ந்த வரமே
 
உன் சொல்லால் இம் மாநிலம் மகிழுது தினமே
 
தன் உற்றார் மறந்து இந்தியரை நேசித்த ஞானமே
 
மீன் இனமும் வாயடைத்து நின்ற திருவாயே
 
நின் திருநாளை பெருநாளாய் கொண்டாடும் இந்நிலமே
 
நன் மக்களாய் யாம் மாறவே இடையறா செபித்திடுமே...!

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org