Get Adobe Flash player

புனித சூசையப்பருக்கும் உழைப்பாளர் தினத்துக்கும் என்ன தொடர்பு?
எம்.மரிய பெல்சின் (நன்றி : விகடன்)
St Joseph 04

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில், தொழிலாளர்களின் பாதுகாவலராக இயேசுவை வளர்த்த தந்தை புனித சூசையப்பர் (Saint Joseph) போற்றப்படுகிறார். தமது தகுதிக்கும் அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களைப் போற்றும் நாள். இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை, கரம் குவித்து வணங்கி வாழ்ந்திடும் நன்னாள். தனக்கு மட்டுமின்றி தன்னைச் சார்ந்தவருக்கும் மகிழ்ச்சியுடன் உழைக்கும் ஒருவனை போற்றும் நாள். இந்த விழா எவ்வாறு தோன்றியது?

உழைப்பைப் பரிசுத்தப்படுத்தவும், உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை கொடுக்கவும், கிறிஸ்தவர்களுக்கு ஒரு பரலோக பாதுகாவலரை கொடுக்கும்படி 12-ம் பத்திநாதர்,  1955-ல் இந்த விழாவை ஏற்படுத்தினார். தொழிலாளர் தினத்தன்று, தொழிலாளர்களின் பாதுகாவலர் சூசையப்பர் திருவிழாவையும் இணைத்துச் சிறப்பிக்குமாறு 1955-ம் ஆண்டு போப் அறிவித்தார். அன்று முதல், "மே தினம் சூசை தினம்' என்று தேம்பாவணி போன்ற காப்பியங்கள் விரித்துரைக்கின்றன.

இயேசு கிறிஸ்துவின் தாயான மரியாளின் கணவர் சூசையப்பர். அவர்  ஒரு நேர்மையாளர், நீதிமான், அயராது உழைப்பவர். (மத். 1:19)

கன்னிமரியாளின் கணவரும், இயேசுவின் வளர்ப்பு தந்தையுமான புனித சூசையப்பரைப் பற்றி விவிலியம் மிகச் சுருக்கமாகவே சொல்கிறது. 'நீதிமான்' என்ற வார்த்தை,  அவர் கடவுளுக்கு மிகவும் பணிந்து நடப்பவர் எனக் காட்டுகிறது. தச்சுத் தொழில் செய்து, தந்தைக்குரிய பொறுப்பேற்று, கணவருக்குரிய கடமைகளை நிறைவேற்றி குடும்பத்தை நல்லமுறையில் நடத்தினார். கன்னிமரியின் பேறு காலத்துக்கு சத்திரம் தேடி அலைந்தபோதும், குழந்தையைக் கொடுங்கோலன் ஏரோதுவின் பிடியிலிருந்து விடுவிக்க எகிப்துக்கு ஓடிச் சென்றபோதும் பல இன்னல்களை தாங்கிக்கொண்டார். இதன் வழியாக, இயேசுவின் மீட்புப் பணியில் தன்னையும் இணைத்துகொண்டார். 

புனித சூசையப்பர், பழைய ஏற்பாட்டில் காணப்படும் சூசையோடு ஒப்பிடப்படுகிறார். உழைப்பின் மேன்மையைப் பறைசாற்றும் திருக்குடும்பத்தின் தலைவர், "வளம் தரும் வளன்' சூசையின் வழியில், நம் பணிகளைப் பொறுப்புடன் நிறைவேற்றி, இறைவனின் மகிமையில் மன நிறைவடைவோம்!

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org