Get Adobe Flash player

கதம்பம்

உண்மையான கிறிஸ்துவக் குடும்பம்

 திருமதி. மேரி கிறிஸ்டோபர்
நன்றி ; அன்பின் மடல்
Catholic family

 விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாம் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன்” என்று திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 3ஆம் அதிகாரம் 14 மற்றும் 15 ஆம் வசனத்தில் எழுதுகிறார். நாம் சிந்திப்போம். நம் குடும்பங்கள் சாதாரணக் குடும்பமாகத் திகழ்கின்றதா அல்லது உண்மையான கிறிஸ்தவக் குடும்பமாகத் திகழ்கின்றதா?

Lire la suite : உண்மையான கிறிஸ்துவக் குடும்பம்

front cover

 

மேலே உள்ள படத்தைக் கிளிக்கினால் , சிறப்பிதழ் புத்தக வடிவில் திறக்கும்.
பக்கங்களின் ஓரத்தில் மூலையில்
வைத்துத் தட்டினால் பக்கங்கள் தாமாகவே புரளும்.
zoom குறியீட்டை அழுத்திப் பெரிதாக்கிப் படிக்கலாம்.
நம் இணையதளம் வெளியிடும் முதல் flip-book இது.
சிறு சிறு குறைகள் பிழைகள் இருக்கக்கூடும்.
அருள்கூர்ந்து பொறுத்தருள்க.
இதில் நிறைய கட்டுரைகள், கதைகள், கவிதைகள் உண்டு.
அருள்தந்தையர்கள் 
பலர் எழுதி இருக்கிறார்கள்.
பொது நிலையினரின் படைப்புகளும் உண்டு.
அவர்கள் அனைவருக்கும் நன்றி.
 

 

.
 

 

 

நிபந்தனையற்ற அன்பு!

அருட்தந்தை தம்புராஜ் சே.ச.

நிபந்தனையற்ற அன்பு!

திருத்தந்தை பிரான்சிஸ் தான் கொடுக்கும் உரைகளில் அவர் அதிக அளவில் பயன்படுத்தும் ஒரு வார்த்தை 'இரக்கம்' என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் இறையியலார்கள்.

விவிலியத்தில் இயேசு சொன்ன உவமைகளயில் மிகச்சிறந்த உவமை 'ஊதாரி மகன்' என்ற உவமை. உலகத்திலேயே இலக்கியங்களில் நாம் சந்திக்கும் சிறுகதைகளில் இக்கதை தான் மிகப்பெரிய இடத்தை, முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பர் இலக்கிய மேதைகள்.

Lire la suite : நிபந்தனையற்ற அன்பு!

உன் தாய் தந்தையை மதித்து நட( மத் 19:19)

அருள்பணி மனுவேல்
நன்றி : அன்பின் மடல்

mother&child

கடவுளைத் தேடி ஒரு இளைஞன் வீட்டை விட்டுப் புறப்பட்டான். பல குருக்கள், பல ஞானிகளை சந்தித்து கேட்டும், யாகங்களைச் செய்து விளக்கம் கேட்டும், பதில் தெளிவாக கிடைக்கவில்லை.

இறுதியாக, இமயமலை உச்சியில் ஒரு முக்காலமும் அறிந்த ஞானி ஒருவரை சந்தித்து விளக்கம் கேட்டான். ஐயா, கடவுள் என்பவர் யார்? அவரை எப்படி கண்டு கொள்வது?

Lire la suite : தெய்வமாய் நின்ற தாய்

மனிதம் போற்றுவோம்  (தொகுப்பு - திருச்சபை செய்திகள்) 

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள். தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்.. தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள். உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான்

இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்.... நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும். அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும். நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம். எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்.. மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.

Lire la suite : மனிதம் போற்றுவோம்  

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org