Get Adobe Flash player

கதம்பம்

மனிதநேய உலக நாள் ஆகஸ்ட் 19
உலகில், ஆபத்தான இடங்களில் மனிதநேயப் பணியாற்றும் ஐந்து இலட்சம் பேரில் ஏறத்தாழ நாற்பது விழுக்காட்டினர் பெண்கள் - ஐ.நா. நிறுவனம்
 மேரி தெரேசா - வத்திக்கான்

ஒரு சமயம், பெண் ஒருவர், உணவகம் ஒன்றுக்குச் சென்று, அங்கு நின்ற நபரிடம், உணவு பரிமாறுகிறவரே என்று கூப்பிட்டார். உடனே அவர், இல்லை, நான்தான் இந்த உணவகத்தின் உரிமையாளர் என்றார். மன்னிக்கவும், ஒருவர் சாப்பிட இடம் இருக்கிறதா என்றார் அப்பெண். உள்ளே செல்லுங்கள் என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, வாசலருகில், பவுல் என்ற பெயருடைய ஒரு பிச்சைக்காரர் வந்து, ஐயா பசிக்குது, கொஞ்சம் உணவு என்றார்.

Lire la suite : மனிதநேய உலக நாள் ஆகஸ்ட் 19 

இன்றைய சிந்தனை

''இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (லூக்கா 12:51)

இயேசுவை அமைதியின் அரசர் என்றும் சமாதானத் தூதுவர் என்றும் நாம் போற்றுகிறோம். அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர்கள் ஒருங்கிணைந்து, ''உலகில் கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' எனப் பாடி வாழ்த்தினார்கள் (காண்க: லூக் 2:14). இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னால் தம் சீடரை நோக்கி, ''அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்'' என வாக்களித்தார் (காண்க: யோவா 14:27).

Lire la suite : இன்றைய சிந்தனை

குருக்களின் பாதுகாவலரான தூய ஜான் மரிய வியான்னி விழா

அருள்பணி மரிய அந்தோணிராஜ்  (அருள்வாக்கு இணையதளம் ) 

1818 ஆம் ஆண்டு, ஜான் மரிய வியான்னி பிரான்சில் உள்ள ஆர்ஸ் நகருக்கு பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டபோது, அவர் தன்னுடைய பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு, ஆர்ஸ் நகரை நோக்கி வந்தார். அவர் அந்நகருக்குப் புதிது என்பதால், வழிதெரியாது தவித்து நின்றார்.  அப்போது அங்கே இருந்த ஓர் ஆடு மேய்க்கும் இளைஞன்தான் அவருக்கு ஆர்ஸ் நகருக்குச் செல்ல வழி சொல்லிக்கொடுத்தான். வியான்னி அந்த இளைஞனை பார்த்துச் சொன்னார், “எனக்கு நீ ஆர்ஸ் நகருக்குச் செல்வதற்கான வழியைச் சொல்லிக்கொடுத்தாய். அதற்கு ஈடாக நான் இந்த ஆர்ஸ் நகரமே விண்ணகம் செல்வதற்கான வழியைச் சொல்லிக்கொடுக்கிறேன்” என்றார்.  அவர் சொன்னதுபோல் நடந்தது. ஜான் மரிய வியான்னி ஆர்ஸ் நகர மக்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் விண்ணகம் செல்வதற்கான வழியைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். 

Lire la suite : குருக்களின் பாதுகாவலரான தூய ஜான் மரிய வியான்னி விழா

கலாம்,பில்கேட்ஸ்,ரஜினி பார்க்க விரும்பிய பாலம் கல்யாணசுந்தரம்- YouTube

"திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்றார் பாரதியார். பாலம் ஐயாவை கிளிண்டன், நெல்சன் மண்டேலா போன்ற வெளிநாட்டவரும் ஐரோப்பிய அமெரிக்க பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பாராட்டியுள்ளார்கள். அது தான் நமக்குப் பெருமை." - தமிழக முதல்வர் ஜெயலலிதா.

Lire la suite : கலாம்,பில்கேட்ஸ்,ரஜினி பார்க்க விரும்பிய பாலம் கல்யாணசுந்தரம்- YouTube 

புனித அன்னம்மாள் வரலாறு
Ste Anne 03

 

உலகம் 26.07.2019 அன்று புனித சுவக்கீன் அன்னம்மாளின் திருவிழாவினை கொண்டாட தயாராகிகொண்டிருக்கின்றது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் அது பொன்னாள்.

சுவக்கீன் அன்னம்மாள் தம்பதியர்கள் அவர்கள், சுவக்கீன் என்றால் “இறைவனது தயாரிப்பு” என்றும், அன்னாள் என்றால் “ஆண்டவனின் அருள்” என்றும் பொருள்

அவர் பெயர் அன்னா, ஆன் என்றும் ஆனி என்றும் பல பெயர்களில் அழைக்கபடும், ஆங்கிலத்தை விடுங்கள் அது அவ்வளவு மரியாதையான மொழி அல்ல,

ஆனால் தமிழ் என்றுமே மரியாதையான மொழி அல்லவா? அன்+அம்மாள் என்பது அன்னம்மாள் ஆயிற்று.

Lire la suite : புனித அன்னம்மாள் வரலாறு

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org