Get Adobe Flash player

கதம்பம்

நன்றி :- WhatsApp
judge


நீதியரசர் :  எதற்காக விவாகரத்து கேட்கிறாய் ?
விண்ணப்பதாரர்: ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை. கஷ்டமாக  அதனால்தான். விவாகரத்து தாருங்கள்.

Lire la suite : மனதே இலகுவாகு 

சவாலே சமாளி :
பொருளாக - வாழ்க்கையாக - நேரமாக -
ஸ்தனிஸ்லாஸ் பெரியநாயகம் முகநூலில் பகிர்ந்தது
அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன.அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

Lire la suite :  சவாலே சமாளி :

கசப்பும் களிப்பாகும்!
whatsup - இல் வந்த கதை


கர்த்தருடைய தேசமான இஸ்ரவேல் தேசத்தின் மோரியா மலை அடிவாரம். அங்கு கனிதரும் மரங்கள் ஏராளமாய் இருந்தன. அந்த பகுதியில் குறிப்பிடும்படியாய் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்துக்கு “ மர் “( எபிரேய பெயர் ) என்று பெயர். அந்த மரம் மிக உயரம் குறைவானது; அதனால் மிகப் பெரிதாக வளர முடியவில்லை; அதன் அதிக பட்ச உயரமே 12 அடிதான்; அவ்வளவே அதன் உயரம்;
Myrrhe

Lire la suite : கருத்துக் கதை - கசப்பும் களிப்பாகும்!

கசப்பு எல்லாம் களிப்பாக மாறும்
whatsup - இல் கண்டது

ஒரு சிறிய உவமை மூலமாய் உங்களோடு   சில காரியங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். இது ஒரு சிறிய உவமைதான் என்றாலும் இதில் பொதிந்துள்ள உண்மை விசேஷமானது.

       கர்த்தருடைய தேசமான இஸ்ரவேல் தேசத்தின் மோரியா மலை அடிவாரம். அங்கு கனிதரும் மரங்கள் ஏராளமாய் இருந்தன. அந்த பகுதியில் குறிப்பிடும்படியாய் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்துக்கு “ மர் “( எபிரேய பெயர் ) என்று பெயர். அந்த மரம் மிக உயரம் குறைவானது; அதனால் மிகப் பெரிதாக வளர முடியவில்லை; அதன் அதிக பட்ச உயரமே 12 அடிதான்; அவ்வளவே அதன் உயரம்; ஆகையால் அதைச் செடி என்றும் சிலர் கருதுவதுண்டு. அதன் கிளைகளும் அவ்வளவு பெரிதாக வளரவில்லை; அதன் தண்டுப்பகுதி மிக கடினமான ஒன்றாயிருந்தது; அதன் இலைகளும் அவ்வளவு அடர்த்தியாயில்லை. ஆனாலும் மஞ்சள் நிறப்பூக்களோடும், திராட்சைப் பழ வடிவில் அதன் சிறிய கனிகளோடும் பார்ப்பதற்கு மிக அழகாக காணப்பட்டது.

Lire la suite : கசப்பு எல்லாம் களிப்பாக மாறும் - கருத்துக் கதை

முன்னுரை :

2009 -ஆம் ஆண்டு இசுராயேல் திருப்பயணம் மேற்கொண்டு திரும்பி வந்த பின்

அந்தப் பயணம் தந்த அனுபவத்தில் புதுவை எழில் எழுதிய பொருள் பொதிந்த சிறுகதை.

படிக்க விருப்பமா?
இங்கே தட்டுக!
இந்த ஆண்டு நடைபெற்ற இசுராயேல் திருப்பயணத்தை ஒட்டி மீண்டும் வெளியிடப்படுகிறது.

திருமதி ஞானு மோனிகா முக நூலில் இருந்து :

தோழர்களே...

படித்ததில் ரசித்த சில ஜோக்குககள்....

உங்களின் பார்வைக்கு

ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:

"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்:

"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"

Lire la suite : நகைச்சுவை  - நகைச்சு    வை !

குருத்து ஞாயிற்றின் கருத்துச் சிந்தனைகள்
தருபவர் : திரு கஸ்மீர் ரோச்,சின்னமலை.

குருத்தும் - கருத்தும்
rameaux 01

தவக்காலத்தின் முத்தாய்ப்பாய் குருத்து ஞாயிறு வந்தது.

காலையில் விரைவாக சென்றால் நல்ல குருத்து கிடைக்கும்.

இந்த வேகம் ஏன் மற்ற வாரங்களில் நம்மிடம் காணப்படுவதில்லை ?

Lire la suite : குருத்து ஞாயிற்றின் கருத்துச்  சிந்தனைகள் 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org