Get Adobe Flash player

கதம்பம்

16 அக்தோபர் 2017 -இன் கதம்பம்  பகுதியில் வெளியான 'செபமாலை நம்மோடு....53  எண்ணங்கள்  ' என்ற பகுதியை எழுதியவர் : திரு கஸ்மீர் ரோச்,சின்னமலை..

பெயர் விடுபட்டுப் போனதற்கு வருந்துகிறோம்.

நன்றி!

திருப்பலிக்குச் செல்லும்போது தவிர்க்கப்படவேண்டியவை,
நன்றி : முக நூல்
messe 06

பெண்கள் கவனத்திற்கு :

1. பேன்ட் சர்ட அணிந்து செல்வது
2. லெக்கின்ஸ் போன்ற ஆபாச உடைகள் அணிந்து செல்வது
3. அடுத்தவரை ஈர்க்கும் ஆடைகள் அணிவது
4. ஆடம்பரமான ஆடைகள் அணிவது
5. மேக்கப் மற்றும் அழகு சாதனங்கள்
6. தலைக்கு முக்காடிடாமல் திருப்பலியில் பங்கேற்பது.

Lire la suite...

மானுடம் வெல்லட்டும்
நன்றி : - WhatsApp
 
செஞ்சிக்கு போகும் வழியில், மதிய உணவுக்காக காரை நிறுத்தியபோது தான், அவரை கண்டேன், அந்த பெரியவருக்கு அறுபது வயதிருக்கும்...கையில் சிக்னல் ஸ்டிக் லைட்டும், வாயில் விசிலுமாய், ஹைவேஸில் போகின்ற வண்டிகளை அழைத்துக் கொண்டிருந்தார்... வயோதிகம் காரணமாகவோ, நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, கால் வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...உணவுண்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. நாச்சியாவோடு சில செல்பிகள் எடுத்துக் கொண்டே மீண்டும் கவனித்தபோதும், அவர் அமரவே இல்லை. 

Lire la suite...

திருவருகைக் காலம்
நன்றி : விக்கி பீடியா (தமிழ்)
advent 01

திருவருகைக் காலம் (Advent) என்பது மேலைக் கிறித்தவ திருச்சபைகளில் (Western Christian churches) கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயாரிக்கும் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது. இலத்தீன் மொழியில் adventus (பொருள்: "வருகை") என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் "ஆகமன காலம்" என்றும் அறியப்பட்டது. திருவருகைக் காலம் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் ஆகும்

Lire la suite...

நாளைய நற்செய்தி: அறிமுக ஆன்மீகம்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, மாத்திரை மறை மாவட்டம்
St André

 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். (யோவான் 1:40-42அ)

Lire la suite...

இன்றைய சிந்தனை

நன்றி : அருள்வாக்கு.காம்

''விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்... எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மாற்கு 13:35)

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ''விழிப்பாயிருங்கள்'' என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ''விழிப்பு'' என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ''விழிப்பாயிருத்தலோடு'' நெருங்கிப் பிணைந்ததாகும்.

Lire la suite...

Marconi

ரேடியோவை கண்டுபிடித்த *மார்கோனி* சிறுவயதாய் இருந்தபோது ஒறுநாள் தன்னுடைய தகப்பனார் ஜெபித்து கொண்டிருப்பதை பார்த்து  சிரித்துகொண்டுஇருந்தார்.

தகப்பனார் மகனை பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு மார்கோனி, அப்பா... நீங்கள் *பரமண்டலங்களில் இருக்கும் எங்கள்பிதாவே* என்று ஜெபித்தீர்கள்

அந்த பரமண்டலம் எங்கேஇருக்கிறது? என்று கேட்டார். அதற்கு தந்தை மேலே கை காண்பித்தார்.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org