Get Adobe Flash player

கதம்பம்

கசப்பு எல்லாம் களிப்பாக மாறும்
whatsup - இல் கண்டது

ஒரு சிறிய உவமை மூலமாய் உங்களோடு   சில காரியங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். இது ஒரு சிறிய உவமைதான் என்றாலும் இதில் பொதிந்துள்ள உண்மை விசேஷமானது.

       கர்த்தருடைய தேசமான இஸ்ரவேல் தேசத்தின் மோரியா மலை அடிவாரம். அங்கு கனிதரும் மரங்கள் ஏராளமாய் இருந்தன. அந்த பகுதியில் குறிப்பிடும்படியாய் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்துக்கு “ மர் “( எபிரேய பெயர் ) என்று பெயர். அந்த மரம் மிக உயரம் குறைவானது; அதனால் மிகப் பெரிதாக வளர முடியவில்லை; அதன் அதிக பட்ச உயரமே 12 அடிதான்; அவ்வளவே அதன் உயரம்; ஆகையால் அதைச் செடி என்றும் சிலர் கருதுவதுண்டு. அதன் கிளைகளும் அவ்வளவு பெரிதாக வளரவில்லை; அதன் தண்டுப்பகுதி மிக கடினமான ஒன்றாயிருந்தது; அதன் இலைகளும் அவ்வளவு அடர்த்தியாயில்லை. ஆனாலும் மஞ்சள் நிறப்பூக்களோடும், திராட்சைப் பழ வடிவில் அதன் சிறிய கனிகளோடும் பார்ப்பதற்கு மிக அழகாக காணப்பட்டது.

Lire la suite...

முன்னுரை :

2009 -ஆம் ஆண்டு இசுராயேல் திருப்பயணம் மேற்கொண்டு திரும்பி வந்த பின்

அந்தப் பயணம் தந்த அனுபவத்தில் புதுவை எழில் எழுதிய பொருள் பொதிந்த சிறுகதை.

படிக்க விருப்பமா?
இங்கே தட்டுக!
இந்த ஆண்டு நடைபெற்ற இசுராயேல் திருப்பயணத்தை ஒட்டி மீண்டும் வெளியிடப்படுகிறது.

திருமதி ஞானு மோனிகா முக நூலில் இருந்து :

தோழர்களே...

படித்ததில் ரசித்த சில ஜோக்குககள்....

உங்களின் பார்வைக்கு

ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:

"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்:

"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"

Lire la suite...

குருத்து ஞாயிற்றின் கருத்துச் சிந்தனைகள்
தருபவர் : திரு கஸ்மீர் ரோச்,சின்னமலை.

குருத்தும் - கருத்தும்
rameaux 01

தவக்காலத்தின் முத்தாய்ப்பாய் குருத்து ஞாயிறு வந்தது.

காலையில் விரைவாக சென்றால் நல்ல குருத்து கிடைக்கும்.

இந்த வேகம் ஏன் மற்ற வாரங்களில் நம்மிடம் காணப்படுவதில்லை ?

Lire la suite...

 மக்களினப் பெருக்கமும் ; மீட்பரின் எதிர்பார்ப்பும்

வரலாற்றைத் தேடி எடுத்துத் தருபவர் : திருமதி மார்கரீத் கட்சிராயர், லியோன்
Ste Anne et Joakim


ஆதி பெற்றோரின் சந்ததி பல்கிப் பெருகிற்று. இவர்களுள் இருளின் மக்களின் தீய செயல்கள், இறைவனின் நீதித்தண்டனையைக் கூவி அழைக்கும் அளவுக்கு அருவருக்கத்தக்கனவாய்க் குவிந்தன

ஆதி பெற்றோரின் சந்ததி பல்கிப் பெருகிற்று. இவர்களுள் இருளின் மக்களின் தீய செயல்கள், இறைவனின் நீதித்தண்டனையைக் கூவி அழைவரக்கும் அளவுக்கு அருவருக்கத்தக்கனவாய்க் குவிந்தன . 

Lire la suite...

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 2
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
bible

நண்பர்களே, இதை நீங்கள் வாசிக்கும்போது, நான் விண்ணகத்தில் இருப்பேன்" என்று ஏழுவயது சிறுவன் எழுதி வைத்த ஒரு கடிதம், 2016ம் ஆண்டு, நவம்பர் மாதம் இங்கிலாந்தின் சில நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.

Lire la suite...

† இன்றைய புனிதர் †
( ஜனவரி 10 )

✠ அருளாளர் பத்தாம் கிரகோரி ✠
நன்றி :  'Pushparajah P' via ARULVAKKU
pope Gregory X

திருத்தந்தை :
(Pope)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org