Get Adobe Flash player

கதம்பம்

நம் சிந்தனைக்கு
அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
ஏரோதுவின் பிறந்தநாள்
Dance
 
நாளை தூய திருமுழுக்கு யோவானின் பாடுகள் விழாவைக் கொண்டாடுகின்றோம்.
 
'அதிக வருத்தமாக இருக்கும்போது முடிவு எடுக்கக் கூடாது. அதிக மகிழ்ச்சியாக இருக்கும்போது வாக்குறுதி கொடுக்கக் கூடாது' என்பது சொலவடை.
 
தன் பிறந்தநாளில் ஏரோது கொடுத்த வாக்குறதியால், அவரின் பிறந்தநாள் திருமுழுக்கு யோவானின் இறந்த நாள் ஆகிறது.

Lire la suite : 29.08.218 திருமுழுக்கு யோவான் மறைசாட்சி ஆன நாள்

இன்றைய சிந்தனை
jesus 34

''இயேசு பன்னிரு சீடரிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன...' என்றார்'' (யோவான் 6:68)

Lire la suite : இன்றைய சிந்தனை

சிற்றின்பமும் பேரின்பமும்! -  சித்தர் வாக்கு
நன்றி : திருஅவை செய்தி
 
  • *இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!*
  • *படைப்பினால் ஈர்க்கப்பட்டால் சிற்றின்பம். படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.
  • *படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.  படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.
  • *என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.  இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.
  • *நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.  நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.
  • *அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம். அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.
  • *செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம். செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.
  • *செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.  செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.

Lire la suite : சிற்றின்பமும் பேரின்பமும்! -  சித்தர் வாக்கு

அடிமை ஆன அரசி
அருள்பணி இயேசு கருணாநிதி,  திருச்சி

அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவின் எட்டாம் நாள் அவரை 'விண்ணரசி' எனக் கொண்டாடுகின்றோம்.
 
'அரசன்' என்றவுடன் நமக்குச் சில நேரங்களில் வரும் கோபம், எரிச்சல், எதிர்ப்பு, 'அரசி' என்றவுடன் வருவதில்லை. 'அரசி' ஆக்ச்சுவலா ஒரு நல்ல நிலை. 'அரசனுக்கு' கடமைகளும் உண்டு, உரிமைகளும் உண்டு. ஆனால், 'அரசிகளுக்கு' உரிமைகள் மட்டும்தான். கடமைகள் கிடையாது. போரில் ஒரு நாடு தோற்றால் அது அரசனின் பொறுப்பே தவிர, அது அரசியின் பொறுப்பு அல்ல. அரசன் போர்க்களத்தில் இருக்க, அரசி ப்யூட்டி பார்லரில் இருந்த நிகழ்வுகள் வரலாற்றில் இருக்கின்றன.

Lire la suite : அடிமை ஆன அரசி

கன்னி மரியாவின் விண்ணேற்பு




இறைவனின் தாயாக திகழும் கன்னி மரியா இவ்வுலக வாழ்வின் முடிவில் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்பு அடைந்ததைக் கொண்டாடும் இந்த திருநாள், ஆகஸ்ட் 15ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. தொடக்கத்தில் இருந்த வாக்கு மனுவுரு எடுக்க காரணமாக இருந்த கன்னி மரியாவின் உடல் அழிவின்றி பாதுகாக்கப்பட்டதை இந்த பெருவிழாவில் கொண்டாடி மகிழ்கிறோம்.

Lire la suite : கன்னி மரியாவின் விண்ணேற்பு

இடைவிடாது செபிக்க இயலுமா?

ஒரு முறை 45 வயதான போதகர்கள்👴🏼🧔🏼 அனைவரும் வேதத்தில்📕 உள்ள கடினமான காரியங்களுக்கு பொருளை அறியும்படி ஒன்றுகூடி வந்தார்கள். அப்பொழுது அவர்களில் ஒருவர்🧔🏼 அப்.பவுல் எழுதிய இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்🙌🏼 எனும் பகுதியை சுட்டிக்காட்டி இதை நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியுமா..எவ்வாறு ஒருவரால் இடைவிடாமல் ஜெபிக்க முடியும் என்று கேட்டார். வெகு நேரம்⏰ இதைக்குறித்து விவாதித்த போதகர்கள் இறுதியில் நாளைக்கு நாம் கூடும்போது ஒவ்வொருவரும் இந்த வசனத்தைக் குறித்த கட்டுரையை எழுதி கொண்டு✍🏻 வரவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

Lire la suite : இடைவிடாது செபிக்க இயலுமா?

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org