Get Adobe Flash player

புனிதர் அனைவர் திருநாள் - கருத்துரை

அருள்பணி அமிர்தராசா சுந்தர் பாவூர்ச்சத்திரம் திருநெல்வேலி

நன்றி : அருள்வாக்கு.காம்

இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே,

இன்;று பொதுக்காலம் 31ம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள். அனைத்து புனிதர்களின் பெருவிழாவை திருச்சபை கொண்டாடும் இந்நாளில் புனிதர்களின் நாமம் தாங்கிய ஒவ்வொருவருக்கும் நாம விழா நல்வாழ்த்துக்கள்.

            “ புனிதம்” அல்லது “ புனிதர்” எனபதை எபிரேய மொழியில் “ குவதோஸ்” என்றும், கிரேக்க மொழியில் “ ஆகியோன்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு  பிரித்தெடுக்கப்பட்ட” அல்லது “ வேறுபடுத்தப்பட்ட” என வார்த்தையளவில் பொருள் கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவர்கள், புனிதம் என்பது  கடவுளையும், அவரை வழிபட பயன்படுத்தப்படும் பொருட்களையும், இடங்களையும் மட்டும் சார்ந்ததாக கருதி வந்தனர். பின்னர், மிகக் குறிப்பாக, இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்த அனைவரையுமே தொடக்ககால திருச்சபை புனிதர்கள் என்றே அழைத்துள்ளது. .இதை புனித பேதுருவின்  முதல் திருமுகத்திலே நாம் காணலாம். “ புனிதர்கள் யார்? ” என்று நாம் ஒவ்வொருவருமே நம்மில் கேட்டுப் பார்க்கின்றபோது, கிடைக்கின்ற பதில்,  “ புனிதர்கள் இறைவனின் திருவுளப்படி தங்கள் வாழ்வை அவருக்காகவே, அனைத்தையும் துறந்து, அர்ப்பணித்தவர்கள்.” என்பதுவே. ஆம்;. புனிதர்கள் வாழ்வு நமக்குக் கற்றுத் தரக்கூடியதும் அதுவே. இறைமகன் இன்றைய நற்n;;சய்தியில் போதித்தவை அனைத்தும் “ நான் எதற்காக வந்திருக்கின்றேன், எனது பணி யாருக்காக... என்னைப் பின்பற்ற விரும்புகிறவர்களும் இவற்றின்வழி வாழ வேண்டுமென்பதையும்” மிகத் தெளிவாக கூறுகின்றார். இம்மலைப்பொழிவை வாழ்வாக்கியவர்களே இன்று நாம் போற்றிக் கொண்டாடும் புனிதர்கள். யாருமே பிறக்கும்போதே புனிதர்களாகப் பிறப்பதில்லை. அவர்களும், நம்மைப் போல சாதாரண மனிதர்களாக பிறந்தவர்கள்தான். நம்மைப் போல நிறை, குறை உடையவர்கள்தான். ஆனால், தங்கள் வாழ்வை இறைதிருவுளம் உணர்ந்து, இறைவார்த்தையின்படி வாழ்ந்து, இறைவனுக்காகவும், பிறருக்காகவும் அனைத்தையும் துறந்து, வாழ்ந்து, மரித்து, இறைபாதம் சேர்ந்து, அவரை முகமுகமாய் தரிசிக்கும் பேற்றினை பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்.

            புனிதர்கள் வணக்கம் கடவுளுக்கு எதிரானதல்ல. அவர்கள் வழியாக நாம் இன்னும் கிறிஸ்தவ வாழ்வை அர்த்தமுள்ளதாக்க துணைபுரிபவை என்று எண்ணுதலே சிறந்தது. நமக்கு முன்மாதிரியாக திகழ்பவர்கள். நாம் இறைநம்பிக்கையில் வளர துணைபுரிபவர்கள். கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்து காட்டிய, மற்றும் அவரின் மதிப்பீடுகளை வாழ்வாக்கிய, புனிதர்களின் வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி, இயேசுவின் சாட்சிகளாக வாழ்ந்;திட அருள் வேண்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org