Get Adobe Flash player

கலக்கல் நக்கல்ஸ் -
WhatsApp

  • ஈகோவும் வைகோவும் ஒன்னு கூடவே இருந்தா நம்மள உருப்பட விடாது.
  • முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமா கேட்குறாங்க அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமா னு கேக்குறாங்க.
    மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான் ஆண்களுக்கு தேவையாம்.
  • சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்.
  • ரேஷன் கார்டு photo  15 வருஷத்துக்கு முன்ன நம்ம எப்படி இருந்தோம் னு காட்டுது ஆதார் 15 வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருக்கோம் னு காட்டுது.
  • வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுத்தாலும் வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல எங்களை அடிச்சிக்க முடியாது.
  • உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான் ஆகனும் -பழமொழி கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகனும்-பது மொழி.
  • பட்டுச்சேலை கட்டுனா எல்லா பொண்ணுக்கும் எடுப்பா தான் இருக்கும் ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும்.
  • வாலிபங்கள் ஓடும், வயதாக கூடும் ஆனாலும் பிரச்சனை குறையாதது.
  • நாம் அழுதால் நமக்கே பிடிக்காது நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே பொருக்காது.
  • மாசத்துக்கு ஒரு நாள் தான் சம்பளம் தராங்க ஆனா வேலை மட்டும் தினமும் தராங்க.
  • அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்  பொண்டாட்டிங்க திட்டியே கொல்லுவோம்.
  • கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்" இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது..!!
  • வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான் வசதி  இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்.
  • என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும், நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாதான் இருப்போம்.
  • யாரோ பெத்த புள்ளயை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க சோறு போடும் அந்த உயர்ந்த உள்ளம் தான் ஆண்.
  • அதிர்ஷ்டம் ambassador ல ஏறி வந்தா பிரச்சனை  Flight ஏறி வருது ச்சை.
  • கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும் இல்ல முடி விழும்  அவ்ளோதாங்க வாழ்க்கை.
  • காந்தி நாட்டுக்காக பாடு பட்டார் நாம காந்தி நோட்டுக்காக பாடு படுறோம்.
  • கவர்மெண்ட் Exam லட்சம் பேர் எழுதுறாங்க ஆனா லட்சம் கொடுக்குறவங்க தான் select ஆகுறாங்க.
  • இந்த உலகத்துல நல்லவங்க கெட்டவங்கனு யாரும் இல்ல நமக்கு புடிச்சா நல்லவங்க புடிக்கலனா கெட்டவங்க.
  • முட்டி மோதி வாழ்க்கையில முன்னேறலாம் னு பாத்தா ஒரே முட்டுல கீழே தள்ளிவிட்டுறாங்க.
  • வாழ்க்கை சிக்கல் வந்தா நக்கலா பாத்து சிரிக்கணும் புரியுதா? எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும்னு சொல்றாங்க.

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org