Get Adobe Flash player

தூய பேதுரு, பவுல் பெருவிழா 
அருள்பணி மரிய அந்தோனிராசு, பாளையங்கோட்டை

இன்று நாம் திருச்சபையின் இருபெரும் தூண்களான தூய பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபை உலக முழுவதும் ஆலமரம் போன்று விரிந்திருக்கிறது என்றால்அதற்கு அடித்தளமிட்டவர்கள் இந்த இரண்டு திருத்தூதர்களுமே என்று சொன்னால் அது மிகையாது. இவர்களது பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவர்களது வாழ்வு நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தூய பேதுருவும், பவுலும் அடிப்படையில் இருவேறுபட்ட ஆளுமைகள். பேதுருவோ படிக்காத பாமரர், (தொடக்கத்தில்) யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு என்று நம்பியவர். ஆனால் பவுலோ, இவருக்கு முற்றிலும் மாறாக மெத்தப் படித்தவர்யூத மரபுகளையும், திருச்சட்டத்தையும் கரைத்துக் குடித்தவர். எல்லா மக்களுக்கும் (யூதர் அல்லாத புறவினத்தாருக்கும்) கடவுள் தரும் மீட்பு உண்டு என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்.

ஆளுமையில் மட்டுமல்லாமல், ஆற்றிய பணியிலும் இருவரும் வேறுபட்டு இருந்தார்கள்.  தூய பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து, யூதர்கள் நடுவில் நற்செய்திப் பணியாற்றினார். தூய பவுலோ யூதர்களைக் கடந்து, புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தார். தூய பவுல் ஆற்றிய பணிகள்மேற்கொண்ட பயணங்கள்,  எழுதிய எழுத்துகள் எல்லாம் இன்றைக்கும் நமக்கு ஆச்சரியத்தையும்,வியப்பையும் தருகிறது. எப்படி இந்த மனிதனால் மட்டும் இவ்வளவு பணியை ஆற்ற முடிந்தது என்று.

இவர்கள் இருவரும் ஆளுமையில்ஆற்றிய பணியிலும் வேறுபட்டு இருந்தாலும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றுபட்டு இருந்தார்கள். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இருவருமே கி.பி. 6ஆண்டில்தான் நீரோ மன்னனால் கொல்லப்பட்டார்கள்.  ஆகவே இவர்கள் இருவரது சாட்சிய வாழ்வும் நமக்குக் கற்றுத்தரும் உண்மைகள் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முதலாவதாக. தூய பேதுருவும்பவுலும் பலவீனமானவர்களாக/ வலுவற்றவர்களாக இருந்தாலும்இறைவன் அவர்களை வலுவுள்ளவர்களாகபலமுள்ளவர்களாக மாற்றுகின்றார். ஆம்பேதுரு படிப்பறிவில்லாதவர், ஆண்டவர் இயேசுவையே தெரியாது என்று மறுதலித்தவர். அப்படியிருந்தாலும் இயேசு அவரைத் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகின்றார். தூய பவுலோ தொடக்கத்தில் திருச்சபையைத் துன்புறுத்தியவர். அவரையும் ஆண்டவர் இயேசு தன்னுடைய பணிக்காக தேர்ந்தெடுக்கின்றார். இவ்வாறு வலுவற்றவர்களில் இயேசு தன்னுடைய வல்லமையை சிறந்தோங்கச் செய்கிறார். 

2 கொரிந்தியர் 12:7,9 ஆகிய வசனங்களில், “எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளில் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மும்முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால்அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்கிறார் தூய பவுலடியார். ஆம் தூய பவுலடியார் வலுவற்றவர். ஆனாலும் அவருடைய அந்த வலுவற்ற நிலையில் இறைவன் தன்னுடைய வல்லமையைப் பொழிந்துதான் எல்லாம் வல்லவரென நிரூபித்துக் காட்டுகிறார்.

அடுத்ததாக தூய பேதுருவும்பவுலும் தங்களுடைய கொள்கையில் அதாவது ஆண்டவர் இயேசுவை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.

பேதுருவையும்அவரோடு இருந்தவர்களையும் தலைமைச் சங்கத்தார் நைய்யப்புடைத்துஆண்டவர் இயேசுவை இனிமேல் அறிவிக்கக்கூடாது என்று சொன்னபோதும் அவர் கிறிஸ்தவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கத் தவறவில்லை. அதேபோன்று பவுலும் மக்களிடமிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புக்களைச் சம்பாதித்தபோதும் கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரையும் தர முன்வருகின்றார். இவ்வாறு அவர்கள் தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் நாம் நமது கொள்கையில் மிக உறுதியாக இருகின்றோமாஎன்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பிலடெல்பியா என்ற நகரத்தில் ஜெரார்டு என்ற கோடிஸ்வரர் வாழ்ந்துவந்தார். அவருக்குக் கீழ் ஏராளமான பணியாளர்கள் வேலை பார்த்து வந்தார்கள். ஒரு சனிக்கிழமை அன்று அவர் தன்னுடைய பணியாளர்களிடம், “நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலைநம்முடைய நிறுவனத்திற்கு வெளியூரிலிருந்து சரக்கு வருகின்றது. ஆதலால் பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல் தவறாது வரவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அப்போது பணியாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து, “நாளை ஞாயிற்றுக்கிழமைகடன் திருநாள். கோவிலுக்குச் செல்லவேண்டும். அதனால் என்னால் வேலைக்கு வரமுடியாது” என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜெரார்டுக்கு கோபம் தாங்கமுடியவில்லை. உடனே அவர் அந்தப் பணியாளரிடம், “உன்னை நான் இப்போதே வேலையிலிருந்து தூக்குகின்றேன். அதனால் காசாளரிடம் சென்றுஉனக்கான தொகையை வாங்கிக்கொண்டு அப்படியே போய்விடு” என்று சத்தம் போட்டார். அந்தப் பணியாளர் எதைக்குறித்தும் கவலைப்படாமல் தனக்குரிய பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே கிளம்பினார்.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ஒரு வங்கி மேலாளர் ஜெரார்டை அணுகி, “என்னுடைய வங்கியில் பணிபுரிய ஒரு நேர்மையான மனிதர் வேண்டும். உமக்குத் தெரிந்து அப்படி யாராவது நேர்மையான மனிதர் இருக்கிறாரா?” என்று கேட்டார். அதற்கு ஜெரார்டுதன்னுடைய நிறுவனத்திலிருந்து நீக்கியவரைப் பரிந்துரைத்தார். ஏனென்றால் அவர் நிர்வாகம் சொன்னதைக் கேட்காவிட்டாலும்ஞாயிற்றுக்கிழமையில் வேலைக்குப் போகக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால்அவருக்கு அந்த வேலையைப் பரிந்துரைத்தார்.

நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் தொடக்கத்தில் பிரச்சனைகள் வரலாம். ஆனாலும் இறுதியில் நாம் நல்ல ஒரு வாழ்வைப் பெறுவோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. பேதுருவும்பவுலும் தங்களது பணியில் கொள்கைப்பிடிப்போடு இருந்தார்கள். அதனால் இறுதியில் கடவுளின் ஆசியைப் பெற்றார்கள்.

நிறைவாக பேதுரும், பவுலும் நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிறந்த முன்மாதிரியாய் விளங்கினார்கள் என்று சொன்னால் அது மிகையாது. பேதுரு உரோமையில் நற்செய்தியை அறிவித்தார். பவுலோ கொரிந்துகலாத்தியாபிலிப்பி போன்ற பல்வேறு பகுதிகளில் நற்செய்தி அறிவித்து, வாழும் நற்செய்தியாகவே விளங்கினார். அதனால்தான் அவரால் வாழ்வது நானல்லஎன்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்” என்று சொல்ல முடிந்தது. (கலா 2:20).

திருமுழுக்குப் பெற்றுநற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிரும் நாம் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்றோமாஎன்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஜப்பானில் ஒரு பள்ளியில் கல்வி புகட்டுவதற்காக அமெரிக்காவிலிருந்து  ஆசிரியர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பாடவேளையில் கிறிஸ்துவைப் பற்றி எதுவும் போதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அழைக்கப்பட்டிருந்தார். அவரும் பாடவேளையில் பாடத்தைத் தவிர வேறு எதையும் கற்றுத்தரவில்லை. ஆனால்நாட்கள் செல்லச் செல்ல அவருடைய வாழ்க்கைப் பார்த்துவிட்டு, நிறைய மாணவர்கள் உத்வேகமும்ஞானமும் பெற்றார்கள்.

ஒருநாள் இரவில் அவருடைய வாழ்வால் தொடப்பட்ட அவரிடம் படித்த நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றுநாங்கள் கிறிஸ்தவர்களாக மாறப்போகிறோம்” என்று சொல்லிதிருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அந்த ஆசிரியர் அவர்களில் 20 மாணவர்களை கோயோடோ கிறிஸ்தவ பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பி வைத்துஅவர்கள் குருவாக மாற துணைபுரிந்தார்.

இந்த நிகழ்வில் ஆசிரியரின் வாழ்வே மிகப்பெரிய நற்செய்தி அறிவிப்பாக இருந்தது. நாம் நற்செய்தி அறிவிக்க கடல்கடந்து செல்லத் தேவையில்லை. நாம் இருக்கும் இடத்தில் நம்முடைய வாழ்வால் நற்செய்தி அறிவிக்கலாம். நற்செய்தியின் தூதுவர்களாக மாறலாம்.

ஆகவேதூய பேதுரு, பவுலின் விழாவைக் கொண்டாடும் நாம் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம்கொண்ட கொள்கையில் உறுதியாய் இருப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் வெற்றி வாகையை பரிசாகப் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org