சிறப்பு தூதுரைப்பணி மாத முக்கிய திருவழிபாடுகள்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிறப்பு தூதுரைப்பணி மாதமாகச் சிறப்பிக்கப்படும் வருகிற அக்டோபரில், வத்திக்கான், உரோம் மற்றும், உலகின் பல்வேறு தலத்திருஅவைகளில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
Lire la suite : சிறப்பு தூதுரைப்பணி மாத முக்கிய திருவழிபாடுகள்

இந்தியத் திருஅவையின் சவால்களுக்குத் தீர்வுகள் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் வானொலி
தலத்திருஅவையின் கண்ணோட்டத்தில் மாற்றம் தேவை
இந்தியாவிலுள்ள திருஅவை, தனது வசதியான வாழ்விலிருந்து வெளியேறவும், தனது தொடக்ககால மறைப்பணி மீது, மீண்டும் கவனம் செலுத்தவும் விரும்பினால், அதன் அணுகுமுறையில் அடிப்படை மாற்றம் அவசியம் என்று, இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர் அவை (CPCI) கூறியுள்ளது.
Lire la suite : இந்தியத் திருஅவையின் சவால்களுக்குத் தீர்வுகள் தேவை
முதல்வாசகம்
வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்:
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-7
வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: `நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்' என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?'' ஆண்டவர் யாக்கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: ``அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி
Lire la suite : பொதுக்காலம் 25ம் வாரம் (22.10.2019) ஞாயிறு வாசகங்கள்