Get Adobe Flash player
அன்னையை அழைத்துச் செல்ல வாருங்கள் !
வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள  மசபியேல் கெபி வருகிற 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை திறக்கப்பட உள்ளது .இந்த கெபியின் மேல்பகுதியில் அமையவிருக்கும் லூர்து அன்னை சொரூபம் பிரான்ஸ் நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 
 200 கிலோ எடை கொண்ட லூர்து அன்னை சொரூபம் அக்டோபர் ஐந்தாம் தேதி (நாளை) சனிக்கிழமை காலை 5 மணிக்கு புதுச்சேரி மிஷின் வீதியிலுள்ள தூய ஜென்மராக்கினி மாதா பேராலயத்தில் இருந்து வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்படவுள்ளது. 
 
 இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அன்னையை வரவேற்க வருமாறு வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை பிச்சைமுத்து அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org