Get Adobe Flash player

ஆப்பகானிஸ்தானில் கடத்தப்பட்ட அருட்தந்தை அலெக்சிஸ் பிரேம்குமார் விடுதலைக்காக வேண்டிக்கொள்ளுமாறு புதுவை கடலுர் முன்னாள் பேராயர் மேதகு மைக்கல் அகுஸ்தின் ஆண்டகை  அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

இக்கருத்துக்காக இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவோம்.

பேராயர் அவர்களின்  ஆங்கிலக் கடிதத்தை அடுத்த பகுதியில் காண்க. அதன் தமிழாக்கம் இங்கே :

"என் அன்புள்ள பெஞ்சமின்,

  'Foyer de Christ' என்னும் நிறுவனம் வேலூரில் வைத்திருக்கிறோம். பிரான்ஸ் வலான்ஸ் பகுதியில் இருந்து வந்த திரு Marthe Robin என்பவர் இதனைத் தொடங்கினார்.வேலுர் ஆயராக நான் பணியாற்றிய போது அங்கே அந்த நிறுவனத்தைத் தொடங்க அவர்களை அழைத்தேன். அதன் பெயர் 'சினேக தீபம்'.அருட்தந்தை ஜானி எடக்கரா என்பவரை நியமித்தேன். அவர் மின்னஞ்சல் <Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser. >.

 
துறவறச் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி எலிசபெத் ராணி அந்நிறுவனத்தின் உறுப்பினராக இருந்தார். உறுப்பினராக முதலில் சேர்ந்தவர் ஆரோக்கியமரி இப்போது அங்கே சகோதரிகள் பலர் இருக்கின்றனர்.

அருட்சகோதரி எலிசபெத்தின் சகோதரர் அருட்தந்தை அலெக்சிஸ் பிரேம் குமார் ஆப்கானிஸ்தானில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைத தலிபான்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.அவர் கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை!

 
அருட்கோதரியின் அன்னையார் அண்மையில் மாரடைப்பால் மறைந்துபோனார். தந்தையோ வயதானவர். கடத்திலின் காரணமாக அக்குடும்பத்தில் அனைவரும் பெருங்கவலைக்கு உள்ளாகி உள்ளனர். குருவை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு பெரு முயற்சி செய்துகொண்டுதான் உள்ளது.அவர் உயிருடன்தான் இருக்கிறாரா? கொல்லப்பட்டாரா? தெரியவில்லை!

 
குருவின் பாதுகாப்பான விடுதலைக்காக மன்றாடும்படி நம் ஞானக மக்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். அவர் தமிழகத்தைச் சேர்ந்த ஏசு சபைக் குரு. அருட்சகோதரிக்கு ஆறுதல் கூற மின்னஞ்சல் அனுப்பலாம்.அந் நிறுவனத்தின் உறுப்பினரான அவர், அது நடத்தும் பள்ளியில் கடுமையாகப் பணி புரிபவர். உங்கள் செபங்கள் அவர்கள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் அளிக்கும்.
என் பெயரால் அருள்கூர்ந்து இதனைச் செய்யுங்கள்.

நன்றி

+ மைக்கல் அகுஸ்தீன் ஆண்டகை.

 

 

 

My dear Benjamin,

We have in Vellore the Foyer de Christ
founded by Marthe Robin of France, somewhere near Valence.

When I wasin Vellore I invited them to start the Foyer in Vellore.

It is knownhere as Sneha Deepam. I then appointed Fr.Johny Edakkara

( his email address is Johnny Edakkara<Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser. >

 

A religious sister, Elizabeth Rani by name is a member of this Foyer.

Arockiamary was the first lady to join this foyer. There are other sisters also now.

A brother of Sister Elizabeth, Fr.Alexis Prem Kumar, an aid
worker at Karat in Afghanistan was kidnapped by Talibans and

no one knows what has happened to him so far.

 

The mother of the Sister died recently by heart attack. The father of the sister is old.

They are all highly affected by this abduction and suffering.

Afghan govt.is trying its best to  get the priest released.Is he still alive or
killed?

 

Please ask the Aumonerie members to pray for his release and
safely handed over He is a Tamilian Jesuit priest.You can also send
email to console the sister. She is a member of the foyer and she
works hard in the school run by the foyer,Your prayers and consoling
letter will wipe their tears.Please do this in my name.

Thank you.

+S.Michael Augustine

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org