Annonces
IN the photos, pls read the date as 07.12.2018
புதுச்சேரி பேராலயத்தின் திருநாள் : 08.12.2018
மாசில்லாக் கன்னி மரியாளின் திருவிழா 08 12 2018
அருமையான அறிவுரை
வழங்குபவர் : அருள்பணி பிலிப் சுதாகர்
திண்டுக்கல்
கிறிஸ்துவில் அன்பான நண்பர்களே,
கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான பொருட்கள் விளம்பரங்கள் இதழ்களிலும் காட்சி ஊடகங்களிலும்
வரத் தொடங்கியுள்ளன.
நாம் இப்போது கஜா புயலால் சீரழிக்கப்பட்ட 12 மாவட்ட மக்களின் நிலை பற்றிப் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம்.
நேரில் பார்த்தபோதுதான் புயல் ஆடிய கோரத் தாண்டவத்தையும் அதனால் வாழ்விழந்து ஏதிலியராய்
செய்வதறியாது திகைக்கும் மக்களையும் கண்டு மனம் பதைபதைத்தது.
நாம் நிச்சயம் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட வேண்டும்.
ஆனால் இந்த ஆண்டு நாம் ஓர் அர்ப்பணத்தோடு அதைக் கடைப்பிடிக்கலாமே!
வீண் ஆடம்பரங்களையும், வீண் விரயங்களையும் தவிர்த்து;
கட்டாயம் தேவையற்ற கொண்டாட்டங்களை ஒத்திவைத்து,
அதில் நாம் மிச்சம் பிடிக்கும் தொகையை புயல் நிவாரணத்துக்குத் தரலாமே.
சிறிய தொகையானாலும் தாழ்வில்லை. சிறு துளி தானே பெரு வெள்ளம்.
நம் வீட்டிலும் நம் நண்பர்களிடமும் நம் அன்பியங்களிலும்
நம் பங்கிலும் இச் செய்தியைப் பரப்புவோம்.
மறைமாவட்டம் முழுவதும் தமிழகம் முழுவதும் ஓர் இயக்கமாக
இதை எடுத்துச் செல்வோம்.
நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் கிறிஸ்து பிறப்பு விழா
பலன் மிக்கதாக அமையும்.
உடனே செய்தி பரவலைத் தொடங்குவோமா?
நன்றி.