Get Adobe Flash player

Annonces

keezhthtisaip peroli anjali cadré
 

 

மாதரசி             மைந்தரே!         துரைசாமி           திருமகனே!
பூதலத்துப்       புகழெலாம்       பெற்றிலங்கும்   பெருமானே!

கல்வாரிச்        செம்மலுக்குத்  தன்வாழ்வை    அர்ப்பணித்த
கல்லேரிச்        செம்மலே!        காலைஇளந்       தென்றலே!
பாரதத்தின்       பெருமையே!  புதுவையின்       புதுப்பபுனலே!
ரோமையின்    இளவரசே!       இறைவனின்      அருட்கனலே!
ஆற்றிய            பணிகளைப்   போற்றிப்             புகழ்ந்திட
ஈட்டிய              புகழை             இன்றிங்கு          உரைத்திட
இன்றொரு       நாள்தான்         போதுமோ!         இல்லை
இன்னுமொரு நாவுதான்        வேண்டுமோ ,      ஐயனே!
போதுமும்      சேவை              பூமிகென்றே        இறைவன்
"சேருதும்       மோட்சம் "       என்றழைத்துச்     சென்றாரோ!
சீரான             ஓட்டத்தைச்     சிறப்புடன்             முடித்தீர்
"வாரும்         பரிசு பெற"       என்றணைத்துப்   போனாரோ!
விழியோரம்   விளைகின்ற    வளமான             முத்தெடுத்தோம்
வழியோர       நிழல்மரமே,    ஆரமாய்க்           கொடுத்தோம்.
கண்ணிலிருந்து  மறைந்தாலும்  மண்ணில்      புதைந்தாலும்
விண்ணில்நீர்      உறைந்தாலும்  எம்மனத்தில் வாழ்கின்றீர்!
கீழ்த்திசைப்         பேரொளியே      திருச்சபைப்   போராளியே
வாழ்த்தினோம்!  வாழிஉம்           புகழ்பல்            லாண்டே!

 

 

cardinal01வத்திக்கான் வானொலி :

03.06.2014

இறைவனடி சேர்ந்த கர்தினால் லூர்துசாமி அவர்களுக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராயலத்தில், ஜூன் 5ம் தேதி வியாழனன்று இறுதித் திருப்பலியும், வழிபாடும் நடைபெறும்.
கர்தினால்கள் குழுவின் தலைவர், கர்தினால் Angelo Sodano அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெறும் என்றும், திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டு, இந்த வழிபாட்டின் இறுதிச் செபங்களைச் சொல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி 5ம் தேதி தன் 90வது வயதை நிறைவு செய்த கர்தினால் லூர்துசாமி அவர்களின் உடல் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு ஜூன் 8 அல்லது 9ம் தேதி, புதுச்சேரியில் அடக்கம் செய்யப்படும் என்று புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டச் செய்திக் குறிப்பு கூறுகிறது.

புதுவை பேராலயத்தில் இருந்து :

05.06.2014 :  வத்திக்கான் புனித இராயப்பர் பேராலயத்தில்

கர்தினால் அவர்களின் ஆன்ம இளைப்புரிற்றித் திருப்பலி.

06.06.2014 : கர்தினால் உடல் புதுவைக்குக் கொண்டுவரப்படும்.

07 08.06.2014 :புதுவை சென்ம இராக்கினி அன்னை ஆலயத்தில்

மக்கள், குருக்கள், கன்னியர்... அஞ்சலிக்காக உடல் பார்வைக்கு வைக்கப்படும்.

09.06.2014 : நல்லடக்கம் செய்யப்படும்.

புனித அந்தோனியார் தேர்த் திருவிழா

 sT ANTONY vILLIERS LE bEL

 சனிக்கிழமை 14.06.2014 மாலை 04.30 மணிக்குப்
புனித அந்தோனியார் தேர்த் திருவிழாவும்
தமிழ்த் திருப்பலியும் நடைபெறும்

இடம் :
La Chapelle St François d'Assissie

Les Carreaux

VILLIERS-LE-BEL
அலை என வருக!

இறை அருள் பெறுக!

 ஞானகத் தந்தை ஜான் கென்னடி

வில்லியர் ல பெல் பங்கு மக்கள்.

POPE

Cité du Vatican, 2 juin 2014 (VIS).

Le Saint-Père a fait parvenir un télégramme de condoléances à l'Archevêque de Pondicherry (Inde) à la suite du décès, la nuit dernière à Rome à l'âge de 90 ans, du Cardinal Simon Duraisamy Lourdusamy, Préfet émérite de la Congrégation pour les Eglises orientales. Evoquant le long service ecclésial du défunt, d'abord comme Archevêque de Bengalore, puis à partir de 1971 au service de la Curie Romaine comme Secrétaire de la Congrégation pour l'évangélisation des peuples puis comme Préfet de la Congrégation pour les Eglises orientales, il y salue l'homme de foi et le pasteur exemplaire. La messe de funérailles du Cardinal Lourdusamy sera présidée, le 5 juin à 11 h 30' en la Basilique vaticane, par le Cardinal Doyen Sodano, entouré des cardinaux et prélats présents à Rome. Le Saint-Père viendra procéder à l'absoute.

Below is the text of the Holy Father’s condolence message:
The Most Reverend Anthony Anandarayar
Archbishop of Pondicherry and Cuddalore

Lire la suite : Pope's condolences

DateAgeEventTitle
5 Feb 1924   Born Kalleri
21 Dec 1951 27.9 Ordained Priest Priest of Pondicherry, India
2 Jul 1962 38.4 Appointed Auxiliary Bishop of Bangalore, India
2 Jul 1962 38.4 Appointed Titular Bishop of Sozusa in Libya
22 Aug 1962 38.5 Ordained Bishop Titular Bishop of Sozusa in Libya
9 Nov 1964 40.8 Appointed Coadjutor Archbishop of Bangalore, India
9 Nov 1964 40.8 Appointed Titular Archbishop of Philippi
11 Jan 1968 43.9 Succeeded Archbishop of Bangalore, India
5 Mar 1971 47.1 Appointed Official of the Congregation for the Evangelization of Peoples
30 Apr 1971 47.2 Resigned Archbishop of Bangalore, India
26 Feb 1973 49.1 Appointed Official of the Congregation for the Evangelization of Peoples
19 Dec 1975 51.9 Appointed Secretary of the Congregation for the Evangelization of Peoples
25 May 1985 61.3 Elevated to Cardinal
25 May 1985 61.3 Appointed Cardinal-Deacon of Santa Maria delle Grazie alle Fornaci fuori Porta Cavalleggeri
30 Oct 1985 61.7 Appointed Prefect of the Congregation for the Oriental Churches
24 May 1991 67.3 Resigned Prefect of the Congregation for the Oriental Churches
29 Jan 1996 72.0 Appointed Cardinal-Priest of Santa Maria delle Grazie alle Fornaci fuori Porta Cavalleggeri
1 Jun 2014 90.3 Died Prefect Emeritus of the Congregation for the Oriental Churches

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org