Get Adobe Flash player

Articles

9 டிசம்பர் 2018: திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு
 வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
 
I. பாரூக்கு 5:1-9  II. பிலிப்பியர் 1:4-6,8-11  III. லூக்கா 3:1-6
 
புதிய பாதை
 
மதுவுக்கு அடிமையாகிக் கிடந்து, பின் ஒருநாள், 'இனி நான் குடிப்பதே இல்லை' என்ற முடிவெடுத்து, மதுவிலிருந்து விலகி நிற்கும் ஒரு இனியவரைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. 'ஃபாதர் நான் இன்னைக்கு ஒரு டிரைவரா இருக்கேன். கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் இப்படி இல்லை. ஒருமுறை இரவு ஊருக்குத் திரும்புமுன் பேருந்தில் ஏறுவதற்கு முன் நன்றாகக் குடித்தேன். கடையிலிருந்து பேருந்து நிலையம் தூரத்தில் தெரிந்தது. சீக்கிரம் போய் பேருந்து ஏற வேண்டும் என்று என் மனம் சொன்னாலும், கொஞ்ச நேரத்தில் என் கால்கள் தடுமாறுவதுபோல உணர்ந்தேன். ஒரே மயக்கமாக இருந்தது. அப்படியே விழுந்துவிட்டேன். நான் இறந்துவிட்டதாகவே நினைத்தேன். காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது மருத்துவமனையில் ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். நான் எப்படி இங்கே வந்தேன் என்று விசாரித்தேன். இரவில் ஒருவர் இங்கே கொண்டுவந்து சேர்த்ததாகச் சொன்னார்கள். கடவுளே எனக்கு இன்றைய இரண்டாம் வாழ்வைக் கொடுத்தார் என எண்ணினேன். அன்று குடியை நிறுத்தினேன்.' எல்லாம் முடிந்தது என்று நினைத்த அந்த நொடியில் ஒரு கனவுபோல எல்லாமே அவர் வாழ்வில் மாறிவிட்டது. போதையின் பாதை புதிய பாதையாக மாறியது.

Lire la suite : புதிய பாதை -09.12.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

இன்றைய (3 டிசம்பர் 2018) திருநாள் புனித சவேரியார்
அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி
 
தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் 'பெரிய தகப்பன்' என்று அன்போடு அறியப்படும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளை நாம் இங்கு கொண்டாடுகிறோம். ஏப்ரல் 7, 1506ல் ஸ்பெயின் நாட்டில் பிறந்து, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணிபுரிந்தபோது, புனித இஞ்ஞாசியார் மேற்கோள் காட்டிய நற்செய்தி வார்த்தைகளை - 'ஒருவர் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் அவர் தன் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன? - கேட்டு, மனம் மாறி, தன் பணியைத் துறந்துவிட்டு, இயேசு சபையின் அருள்பணியாளராக மாறி, ஆப்பிரிக்கா, ஆசியா கடற்கரைகளில் நற்செய்திப் பணி செய்து டிசம்பர் 3, 1552 அன்று இறந்தார்.

Lire la suite : இன்றைய (3 டிசம்பர் 2018) திருநாள் - புனித சவேரியார்

உம்மை நோக்கியே உள்ளம்
02 டிசம்பர் 2018: திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 
வாசகங்களின் விளக்கங்கள்.

அருளுபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, தூய பவுல் குருத்துவக் கல்லூரி திருச்சி -1,

I. எரேமியா 33:14-16  II. 1 தெசலோனிக்கர் 3:12-4:2  III. லூக்கா 21:25-28,34-36

கார்த்திகை மாதம் பாதி கடக்குமுன்னே மார்கழிக் குளிர் நம் உடலைத் தழுவ ஆரம்பித்துவிட்டது. குளிர்காலத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இலைகளை உதிர்த்து குளிரை எதிர்கொள்ள வேண்டிய மரங்கள், இலைகளை உதிர்க்கவா, தளிர்களைத் துளிர்க்கவா என்று குழம்பிக் கொண்டிருக்கின்றன.

Lire la suite : உம்மை நோக்கியே உள்ளம்  - 02.12.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள் 

மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 02) திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு

“தலை நிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வந்துவிட்டது”
அருள்பணி மரிய அந்தோணிராஜ்- பாளையங்கோட்டை.

நண்பர்கள் இருவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டார்கள். அதில் ஒரு நண்பர் மிகவும் சோகமாகவும் இன்னொரு நண்பர் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.

Lire la suite : மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 02) - திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு

மறையுரைச் சிந்தனை (நவம்பர் 25) கிறிஸ்து அரசர் பெருவிழா
இயேசுவின் அரசு அன்பின் அரசு
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டைமாவீரன் அலெக்ஸ்சாண்டர் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்து, வெற்றி கொண்டபிறகு, இறுதியாக இந்தியாவின்மீது படையெடுத்து வெற்றிக்கொள்ள தன்னுடைய படைவீரர்களோடு இந்தியாவை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.

Lire la suite : மறையுரைச் சிந்தனை (நவம்பர் 25) - கிறிஸ்து அரசர் பெருவிழா

11 நவம்பர் 2018: ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
வழங்குபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
 
I. 1 அரசர்கள் 17:10-16  II. எபிரேயர் 9:24-28  III. மாற்கு 12:38-44

 கைம்பெண்கள் - நாம் எதிர்கொள்ளும் கேள்விக்குறிகள், ஆச்சர்யக்குறிகள்!
 
இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் இரண்டு கைம்பெண்களை (சாரிபாத்து, எருசலேம் நகர்) பார்க்கின்றோம். இவ்விரண்டு கைம்பெண்களையும் இரண்டு இறைவாக்கினர்கள் (எலியா, இயேசு) சந்திக்கின்றனர்.

Lire la suite :   வெறுங்கை முழம் போடுமா? 11 நவம்பர் 2018:  32ஆம் ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

4 நவம்பர் 2018: ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு  வாசகங்களின் விளக்கங்கள்
 
I. இணைச்சட்ட நூல் 6:2-6  II. எபிரேயர் 7:23-28  III. மாற்கு 12:28-34
 
அன்பின் வழியது உயிர்நிலை
 
1971ஆம் ஆண்டு வெளிவந்த 'ஃபிட்லர் ஆன் தெ ரூஃப்' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு.
 
கதாநாயகனும் கதாநாயகியும் தங்களின் திருமணத்தின் 25ஆம் ஆண்டு (வெள்ளி விழா) விழாவைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். விருந்திற்கு நிறைய விருந்தினர்களும், நண்பர்களும் வந்து கொண்டிருப்பார்கள். கதாநாயகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் கதாநாயகன் கதாநாயகியிடம், 'டார்லிங், டு யு லவ் மீ?' என்று கேட்பார். 'விளையாடாதீங்க. விளையாட இது நேரமா?' எனக் கேட்டுவிட்டு கதாநாயகி அங்கிருந்து ஓடிவிடுவார்.
சில நிமிடங்கள் கழித்து அவரை மீண்டும் சந்திக்கும் கதாநாயகன், 'டு யு லவ் மீ?' என்று கேட்பார்.

Lire la suite : அன்பின் வழியது உயிர்நிலை ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள் 

இறந்தவர்களுக்காகச் செபிப்பதில் இருக்கும் ஐந்து சவால்கள்:

அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி

1. இறந்தவர்கள் காலத்தையும், இடத்தையும் கடந்து விடுகிறார்கள். இனி அவர்கள் காலத்திற்கும், நேரத்திற்கும் உட்பட்டவர்கள் அல்லர். ஆனால் நாம் செய்யும் செபம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது. உதாரணத்திற்கு, இன்று நான் இறந்தவர்களுக்காக நிறைவேற்றும் திருப்பலி காலத்திற்கும் (மாலை 6:30 மணி), இடத்திற்கும் (தூய யூதா ததேயு ஆலயம்) உட்பட்டது. காலத்திற்கும், இடத்திற்கும் உட்படாத இறந்தவர்களுக்குக் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு நிறைவேற்றும் திருப்பலி எப்படி பலன் தர முடியும்?

Lire la suite : இறந்தவர்களுக்காகச் செபித்தல்: சவால்களும், வாக்குறுதிகளும்

மறையுரைச் சிந்தனை (நவம்பர் 01)
அனைத்துப் புனிதர்களின் விழா
அருள்பணி மரிய அந்தொனிராசு பாளையங்கோட்டை
All saints 02

புனிதர்கள் – தூயவர்கள் – வானதூதர்களைப் போன்று விண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள் அல்ல, மாறாக அவர்கள் நம்மைப் போன்று மண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள்; சாதாரண மனிதர்கள். அப்படியிருந்தாலும் தங்களுடைய வாழ்வால், பணியால் புனிதர்களாக உயர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் இன்றைய நாளில் நாம் விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம். ஆம், இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களுடைய விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது.

Lire la suite :  அனைத்துப் புனிதர்களின் விழா - மறையுரைச் சிந்தனை (நவம்பர் 01)

யார் புனிதர்கள் ?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All saints

விவிலிய ஆய்வில் ஈடுபட்டுள்ள அருள்பணி இயேசு கருணா என்பவர், யார் புனிதர்கள் என்ற கேள்விக்கு வழங்கும் பதில்கள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. புனித வாழ்வு நமக்கும் சாத்தியம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன:

நாம் திருவழிபாட்டில் கொண்டாடும் ஒவ்வொரு புனிதரும் மற்றவரிடமிருந்து தன் வாழ்வால், பணியால், இறப்பால் மாறுபட்டிருந்தாலும், மூன்று பண்புகள் அனைவருக்கும் பொதுவாயிருக்கின்றன:

Lire la suite : யார் புனிதர்கள் ?

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org