சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள் : நான் / நீங்கள்

mirror

இந்த வாரம் 'சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள்' பகுதியில் இடம் இடம் பெறும் பாத்திரம் யார்? தேடி இருப்பீர்கள். கண்டுபிடித்தீர்களா? அது வேறு யாரும் இல்லை ; நான்தான் அல்லது நீங்கள்தாம்! 'சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள்' என்ற கண்ணாடி முன் யார் நிற்கிறார்களோ அவர்கள்தான்!

ஆம், நம்மை நாமே சிலுவைப் பாதையின் ஒவ்வொரு தலத்திலும் நிறுத்திப் பார்ப்போம் ; சிந்திப்போம். எல்லாத்  தலங்களிலும் இடம் பெறுபவர் இறைமகன் இயேசு ; அந்த அந்தச் சூழலில் நாம் இருந்தால்...? கற்பனை செய்து பார்ப்போம்

காட்டாக,  முதல் தலத்தில் பிலாத்து ; நாம் எங்கே, எப்படி இடம் பெறுகிறோம்...?
நாம் தான் முடிவு செய்ய வேண்டும் : பிலாத்துவாக  நிற்கப்  போகிறோமா? அவனைப் போலவே இறைமகனைக் கை கழுவி விடப் போகிறோமா? வேடிக்கை  பார்க்கும் கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்க்கப் போகிறோமா? இல்லை இயேசு பெருமானின் கூடவே இருந்து அவர் அருளிய அற்புதச் செயல்களைப் பார்த்தும் அவர் சிறைப் பட்ட மறு வினாடி அஞ்சி நடு நடுங்கி ஓடி மறைந்த அவர் சீடர்களில் ஒருவராக மாறி நாமும் மறைந்தோடிப் போகப் போகிறோமா?
சிந்திப்போம் ; யாராக நாம் அங்கே இடம் பெறுவோம் ...என்று சிந்திப்போமா!

இப்படியே ஒவ்வொரு தளமாகச் சிந்தித்துப் பார்த்தால் ...
ஆகா இதுவன்றோ அற்புதமான சிலுவைப் பாதைச் சிந்தனை ஆகும்!
இந்த முறையில் நம் சிந்தனையைச் செலுத்தினால்...
நாம் தான் 'சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள்' ஆவோமே