Get Adobe Flash player

புனிதர் யூதா ததேயு

திருத்தூதர், மறைசாட்சி :
St Jude

 

பிறப்பு : கி.பி. 1 (முற்பகுதி) கலிலேயா, யூதேயா, ரோம பேரரசு இறப்பு : கி.பி. 67
பெர்சியா அல்லது அராராத், ஆர்மேனியா
(கோடரியால் வெட்டி கொல்லப்பட்டார்)
ஏற்கும் சபை/ சமயம் :ரோமன் கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
கிழக்கு மரபுவழி
திருச்சபை
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
லூதரனிய திருச்சபை
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
கிழக்கு திருச்சபை
அகில்பயன் திருச்சபை
இஸ்லாம்

முக்கிய திருத்தலங்கள் :

புனித பேதுரு பேராலயம், ரோம், ரெய்ம்ஸ், டௌலோஸ், ஃபிரான்ஸ்

நினைவுத் திருவிழா : அக்டோபர் 28

பாதுகாவல் :

ஆர்மீனியா (Armenia), தொலைந்த காரணங்கள், அவநம்பிக்கையான சூழ்நிலைகள், மருத்துவமனைகள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (St. Petersburg), ஃ புளோரிடா (Florida), சிகாகோ காவல் துறை (Chicago Police Department), பிரேசில் (Brazil), ஃ பிலிப்பைன்ஸ் (Philippines).

புனிதர் யூதா ததேயு, முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவருமாவார்.

இயேசுவை காட்டிக்கொடுத்த யுதாசுவிடமிருந்து வேறுபடுத்த, இவரை ததேயு” (Thaddaeus) என்றோ, “லேபெசியஸ்” (Lebbaeus) என்றோ, “யாக்கோபின் யூதா” (Jude of James), என்றோ அழைப்பர். யோவான் நற்செய்தியாளர் இவரை "யூதா - இஸ்காரியோத்து - யூதாசு அல்ல" என்று குறிப்பிடுகிறார்.

பாரம்பரியம் மற்றும் புராணம்:

புனிதர் யூதா ததேயு, “யூதேயா” (Judea), “சமாரியா” (Samaria), “சிரியா” (Syria), “மெசபடோமியா” (Mesopotamia) மற்றும் லிபியா” (Libya) ஆகிய நாடுகளில் நற்செய்தி போதித்தார் என்று பாரம்பரிய செய்திகள் கூறுகின்றன. இவரும் பர்த்தலமேயுவுமே ஆர்மீனியா நாட்டிற்கு கிறிஸ்தவத்தை கொண்டுவந்தனர் என்பர். அவர் பெய்ரூட்” (Beirut) மற்றும் எடெஸாவிற்கு” (Edessa) விஜயம் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், பிந்தைய பணிகளின் தூதுச் செய்தியாளர், இயேசு கிறிஸ்துவின் எழுபது சீடர்களில் ஒருவரான தடேயஸ்” (Thaddeus of Edessa) என்றும் அறியப்படுகிறது.

பதினான்காம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியரான நிஸ்பொரஸ் கல்லிஸ்டஸ்” (Nicephorus Callistus) என்பவரின் கூற்றின்படி, இயேசு கிறிஸ்து, தமது அதிதூய அன்னையின் வேண்டுகோளின்படி, சாதாரண தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி நிகழ்த்திய முதல் அதிசயமான கானா” (Cana) ஊர் திருமணத்தில் மணமகனே புனிதர் யூதா ததேயுதான் என்கிறார். பிற்காலத்தில், ரோமர்களால் மீண்டும் கட்டப்பட்டு, “செசரியா பிலிப்பி” (Caesarea Philippi) என மறு பெயரிடப்பட்ட கலிலேயாவிலுள்ள” (Galilee) “பனேஸ்” (Paneas) எனும் நகரிலுள்ள யூதர்கள் குடும்பத்தில் இவர் பிறந்தவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இவர் கிரேக்கம்” (Greek) மற்றும் அராமைக்” (Aramaic) மொழிகள் பேசினார். அந்த பகுதியில் உள்ள கிட்டத்தட்ட அவரது சமகாலத்தவர்கள் அனைவரையும் போல, இவரும் விவசாயத்தையே தொழிலாக செய்து வந்தார்.

சுமார் கி.பி. 67ம் ஆண்டு, ரோமப் பிரதேசமான சிரியாவின்” (Syria) “லெபனான்நாட்டு தலைநகரும், பிரதான துறைமுகமுமான பெய்ரூட்” (Beirut) நகரில் இவரும், “தீவிரவாதியாய் இருந்த புனிதர் சீமோனும்” (Simon the Zealot) மறைசாட்சியாய் மரித்தனர். இவர், கோடரியால் வெட்டப்பட்டு மரித்தார். இவரது உடல், பின்நாளில் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இவரது நினைவுத் திருவிழா நாள் அக்டோபர் 28 ஆகும்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org