Get Adobe Flash player

Articles

மறை உரை : மரியன்னையின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15)
- அருள்பணி மரிய அந்தோணிராஜ் (அருள்வாக்கு இணையதளம் )


நிகழ்வு -  மரியன்னையின் விண்ணேற்பைக் குறித்து சொல்லப்படும் தொன்மம். மரியா தன்னுடைய கடைசி காலத்தை சியோன் மலையருகிலே
இருந்த ஓர் இல்லத்தில் செலவழித்தார். அவருக்கு 60 வயது நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் வானதூதர் அவருக்குக் காட்சி கொடுத்து, அவர் எப்படி இறப்பார், இறந்த பிறகு என்ன ஆவார் என்பது குறித்து சொல்லிவிட்டுச் சென்றார்.

Lire la suite : மறை உரை : மரியன்னையின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15) 

இன்றைய (15 ஆகஸ்ட் 2019) திருநாள்

 மரியாளின் விண்ணேற்பு
அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
 
'தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்.
தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி இருக்கிறார்.
தமக்கு ஏற்புடையரானோரய்த் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார்.' (உரோ 8:30)
 
குருக்களின் மாலைச் செபத்தில் மேற்காணும் இறைவார்த்தைகளே வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளன.

Lire la suite : இன்றைய (15 ஆகஸ்ட் 2019) திருநாள்   மரியாளின் விண்ணேற்பு

11 ஆகஸ்ட் 2019 ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு  வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
I. சாலமோனின் ஞானம் 18:6-9  II. எபிரேயர் 11:1-2, 8-12  III. லூக்கா 12:32-48
 
நம்பிக்கையின் பொருள்
 
ஒவ்வொரு நாள் காலையில் அவன் அவளுக்கு பல் துலக்கிவிடுவான். அவளைக் குளிக்க வைப்பான். அவளுக்கு உணவு ஊட்டுவான். ஒவ்வொரு நாள் மாலையில் அவன் அவள் அருகில் அமர்வான். அவளின் கரங்களைத் தன் கரங்களுக்குள் பொத்திக்கொண்டு அவளை வருடிக்கொண்டே அவளுக்கு நிறைய கதைகள் சொல்வான். தன் வலியையும் பொருட்படுத்தாமல் அவள் புன்னகை புரிவாள். அவளுக்கு விருப்பமான பாடல்களை அவன் பாடிக் காட்டுவான்.

Lire la suite : நம்பிக்கையின் பொருள் - ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

4 ஆகஸ்ட் 2019: ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு
ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
I. சபை உரையாளர்  1:2, 2:21-23  II. கொலோசையர் 3:1-5, 9-11  III. லூக்கா 12:13-21
செல்லும் செல்வம்!
'செல்வம்' என்பது எப்போது நம் கைகளை விட்டுச் 'செல்வோம்' என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது என 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் பதிவு செய்கிறார் கண்ணதாசன்.
செல்வம் என்று வரும்போதெல்லாம் விவிலியம் இரண்டுவகை கருத்துக்களைக் கொண்டிருக்கிறது: ஒரு பக்கம், செல்வம் அறவே கூடாது என்றும், 'பண ஆசையை அனைத்து தீமைக்கும் ஆணிவேர்' என்றும் கற்பிக்கின்றது. மறு பக்கம், பயன்படுத்தப்படும் உருவகங்கள் எல்லாம் 'புதையல்,' 'முத்து' என்று செல்வம் பற்றியதாகவே இருக்கிறது.  ஒரு பக்கம், செல்வம் என்பது இறைவனின் ஆசீர் என்று சொல்லப்படுகிறது. மறு பக்கம், ஏழையரின் அருகில்தான் இறைவன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது? செல்வத்தைப் பிடித்துக் கொள்வதா? விட்டுவிடுவதா? செல்வத்தை நாடுவதா? அல்லது அதை விட்டு ஓடுவதா?  செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா? அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா? செல்வம் தரும் வாழ்வா? வாழ்வு தரும் செல்வமா?

Lire la suite : செல்லும் செல்வம்!-04.08.2019 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

இன்றைய புனிதர் † (ஜூலை 31) புனிதர் இஞ்ஞாசியார்
St Ignatius Loyola

கத்தோலிக்க குரு/ இயேசு சபை நிறுவனர் :

பிறப்பு : அக்டோபர் 23, 1491

அஸ்பெய்டா, லயோலா, கிபுஸ்கோவா, பாஸ்க் நாடு, கேஸ்டில் அரசு (தற்போதைய ஸ்பெயின்)

 இறப்பு : ஜூலை 31, 1556 (வயது 64)

ரோம் நகரம், திருத்தந்தையர் மாநிலங்கள்

முக்திபேறு பட்டம் : ஜூலை 27, 1609

திருத்தந்தை ஐந்தாம் பவுல்

புனிதர் பட்டம் : மார்ச் 12, 1622

திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி

நினைவுத் திருவிழா : ஜூலை 31

Lire la suite : இன்றைய புனிதர் †  (ஜூலை 31)  ✠ புனிதர் இஞ்ஞாசியார் ✠

விரல் தொடும் குரல்! 

அருள்பணி இயேசு கருணாநிதி  திருச்சி
28 ஜூலை 2019: ஆண்
டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு - I. தொநூ 18:20-32 II. கொலோ 2:12-14  III. லூக் 11:1-13 

செபம் அல்லது இறைவேண்டல். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என்னில் நிறையக் கேள்விகள் எழுவது உண்டு: எதற்காக நாம் செபிக்க வேண்டும்? கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் என்றால், அவர் நம்மைப் பாதுகாப்பவர் என்றால், அந்த வேலையை அவர் சரியாகச் செய்யலாமே!

Lire la suite : விரல் தொடும் குரல்!  - ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

ஆனால் தேவையானது ஒன்றே!

அருள்பணி இயேசு கருணாநிதி,  திருச்சி.
21 ஜூலை 2019 ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு -
I. தொடக்கநூல் 18:1-10 II. கொலோசையர் 1:24-28 III. லூக்கா 10:38-42

ஏறக்குறைய பதினாறு ஆண்டுகளுக்கு முன், என் குருத்துவப் பயிற்சியின் ஆன்மீக ஆண்டில், தியானம் கற்பிக்க வந்த அருள்பணியாளரிடம், 'கண்களை மூடிக்கொண்டே அமர்ந்திருப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் என்ன மாற்றம் நடக்கும்? உலகில் அநீதி மறையுமா? புதிய கண்டுபிடிப்புக்கள் நடக்குமா? நாம் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியுமா? பலருக்குப் பணி செய்ய முடியுமா? புதியவற்றைக் கற்க முடியுமா? சும்மா யார் வேண்டுமானாலும் கண்களை மூடிக்கொண்டு உட்கார முடியும். இல்லையா?' என்று நான் விவாதித்தது என் நினைவில் இருக்கிறது. பதினாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. அருள்பணி வாழ்வில் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் விழித்திருந்தது, பரபரப்பாக வேலை செய்தது, புதிதாகக் கற்றது போன்றவற்றால் உலகில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதை இன்று நான் கற்றுக்கொண்டேன். உலகம் தன் போக்கில் இயங்குகிறது. என் வேகத்தால் என்னில் மாற்றம் ஏற்பட்டதைவிட என் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றே நான் உணர்கிறேன்.

Lire la suite : ஆனால் தேவையானது ஒன்றே!  

மறை உரை : தேவையானது ஒன்றே!

அருள்பணி மரிய அந்தோணிராஜ் (அருள்வாக்கு இணையதளம் )

பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு  (I தொடக்க நூல் 18: 1-10; II கொலோசையர் 1: 24-28 III லூக்கா 10: 38-42)

 

  நிகழ்வு -   ஒரு நகரில் பெரும் தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவருடைய பிரதான நோக்கமே பணமீட்டுவதுதான். இப்படிப் பணமீட்டுவதே தனது வாழ்வின் பிரதான நோக்கம் என்று வாழ்ந்து வந்த அவர், ஒருநாள் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு நள்ளிரவில் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.  இதற்கிடையில் அவரைப் பல நாட்களாக  நோட்டமிட்டுக்கொண்டிருந்த அதே நகரில் இருந்த திருடன் ஒருவன், சரியான இடம் பார்த்து, துப்பாக்கியுடன் அவர் முன் வந்து நின்றான். அவனைப் பார்த்து திடுக்கிட்டுப் போன அவர், ஒருநிமிடம் செய்வதறியாது நின்றார். அப்பொழுது அந்தத் திருடன் அவரிடம், “உனக்குப் பணம் வேண்டுமா? உயிர் வேண்டுமா?” என்று துப்பாக்கியை அவருடைய நெற்றிப்பொட்டில் வைத்து மிரட்டினான். அவர் சிறிதும் தாமதியாமல், “எனக்குப் பணம்தான் முக்கியம்... அது இருந்தால்தான் வயதான காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவிக்க முடியும்” என்றார்.  தொழிலதிபர் இவ்வாறு சொன்னது அந்தத் திருடனுக்குப் பயங்கர எரிச்சலூட்டியது. உடனே அவன் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை ஓர் அழுத்து அழுத்த, தொழிலதிபர் தலை சிதறி இறந்துபோனார்.
 

Lire la suite : மறை உரை : தேவையானது ஒன்றே! 

மறை உரை : யார் அடுத்திருப்பவர்?
அருள்பணி மரிய அந்தோணிராஜ் (அருள்வாக்கு இணையதளம் )
பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு -
(I இணைச்சட்டம் 30: 10-14; II     கொலோசையர் 1: 15-20; III லூக்கா 10: 25-37) 
நிகழ்வு : செல்வந்தன் ஒருவன் அடர்ந்து காடு வழியாகத் தன்னுடைய குதிரை வண்டியில் சென்றுகொண்டிருந்தான். வழியில் அவனைத் தடுத்து நிறுத்திய கொள்ளையர் கூட்டம் ஒன்று, அவனிடமிருந்த பணத்தையும் அவனுடைய குதிரை வண்டியையும் அடித்துப் பிடித்துக்கொண்டு, அவனைக் குற்றுயிராய்ப் போட்டுவிட்டுச் சென்றது.  
அதே காட்டில் புத்திசாலியான நரி ஒன்று தன்னுடைய இரண்டு குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. அது தன்னுடைய இரண்டு குட்டிகளுடனும் தற்செயலாக அந்தப் பக்கம் வந்தது. முன்னே சென்றுகொண்டிருந்த இரண்டு குட்டிகளும் செல்வந்தன் அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடப்பதைக் கண்டு தங்களுடைய தாயிடம், “அம்மா! இங்கே ஒரு மனிதன் அடிபட்டுக் கிடக்கின்றான்... அவனுக்கு நாங்கள் உதவிசெய்யப் போகிறோம்” என்று ஓடின.

Lire la suite : மறை உரை : யார் அடுத்திருப்பவர்?

14 ஜூலை 2019 ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு
 
I. இணைச்சட்டம் 30:10-14  II. கொலோசையர் 1:15-20  III. லூக்கா 10:25-37
 
வாயில்! இதயத்தில்! கையில்!
அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
 
இந்து மரபில் இறைவனை அடைவதற்கு மூன்று மார்க்கங்கள் உண்டெனச் சொல்லப்படுகிறது: பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம். பக்தி மார்க்கம் இறைவனை வழிபடுதலையும், மந்திரங்களை உச்சரிப்பதையும், வழிபாடுகள் நடத்துவதையும் முதன்மைப்படுத்துகிறது. ஞான மார்க்கம் இறைவனின் திருநூல்களை அறிவதையும், இறைவன் பற்றிய மறைபொருளை சிந்தித்து, தியானித்து அறிதலையும் முதன்மைப்படுத்துகிறது. கர்ம மார்க்கம் பிறரன்புச் செயல்கள் செய்வதையும், தன்னுடைய வேலைகளை சரிவரச் செய்தலையும் முதன்மைப்படுத்துகிறது.

Lire la suite : வாயில்! இதயத்தில்! கையில்! 14.07.2019 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org