Get Adobe Flash player

Articles

தவக்காலம் - சிறு விளக்கம்

தருபவர் ; அருள்பணி சூசைநாதன்

Jesus 04

பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தவக்காலம் ஆரம்பிக்கின்றது. தவக்காலம் என்பது இயேசுகிறிஸ்துவின் மீது வீண்பழி சுமத்தி, அவரைச் சித்திரவதை செய்து, சிலுவையைச் சுமத்தி, அதில் அவரை அறைந்து, அவரை இறப்புக்குள்ளாக்கிய காலத்தைக் குறிப்பதாகும்.

பிப்ரவரி 10ஆம் நாள், விபூதிப் புதன் என்றழைக்கப்படுகின்றது. அன்று மக்களின் உளமார்ந்த மனமாற்றத்தின் வெளி அடையாளமாகவும் தவத்தின் குறியீடாகவும், நமது நிலையாமையைக் குறிப்பதற்காகவும் நமது நெற்றியில் திருநீறு பூசப்படுக்கின்றது.

Lire la suite...

விளக்கம் அருளுபவர் : அருட்பணி மரியா அந்தோணி (பாளையம்கோட்டை)
நன்றி : அருள்வாக்கு

 வலுவின்மையில் வெளிப்படும் இறைவனின் வல்லமை

ஒருமுறை புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின்இ தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார். விருந்தினர்களில் ஒருவர் தன்னுடைய குழந்தையையும் தன்னோடு அழைத்து வந்திருந்தார். அக்குழந்தைக்கு ரஸ்கினிடமிருந்து ஏதாவது ஒரு பொருளை, அவர் நினைவாக வாங்கிவிடவேண்டும் என்ற விரும்பம். இறுதியில் அவளது விரும்பம் நிறைவேறியது.

Lire la suite...

04/02/2016 15:14

 

ஒருசமயம் ஒருவர் குளத்தங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் தூண்டிலில் அகப்பட்ட மீன் கரையிலே கிடந்தது. அந்தச் சமயம் உயரே பறந்துகொண்டிருந்த ஒரு பருந்து, கரையிலே கிடந்த மீனைப் பார்த்தது. அவ்வளவுதான். அதைக் குறிபார்த்து அதற்கு நேரே பறந்து வந்து அந்த மீனைக் கொத்தி எடுத்துக் கொண்டு உயரே பறந்தது.

Lire la suite...

31 ஜனவரி 2016: ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு வாசகங்களின் விளக்கம்
அளிப்பவர் : அருட்பணி இயேசு கருணாநிதி
 
முதல் வாசகம் எரேமியா 1:4-5, 17-19
 
1. பாடத்தின் இலக்கியக் கூறு (Literary Genre of the Text)
அ. இன்றைய முதல் வாசகம் 'இறைவனின் அழைப்பும், மனிதர்களின் பதிலும்' (Vocation Type-Scene) என்னும் இலக்கிய கூறைக் கொண்டிருக்கிறது. இதன்படி, இறைவன் ஒருவரை அழைக்கிறார். அழைக்கப்படுபவர் அதற்கு தயக்கம் தெரிவிக்கிறார். இறைவன் தன் உடனிருப்பை அவருக்கு வாக்களிக்கின்றார்.

Lire la suite...

நன்றி : திரு புஷ்பராஜா & அருள்பணி அந்தோணி சவரி(யப்பன்)

புனித திமொத்தேயு

Timothieu

ஆயர் :

பிறப்பு : கி.பி. சுமார் 17

இறப்பு : கி.பி. சுமார் 97
மசெதோனியா

ஏற்கும் சபை/ சமயம் :
உரோமன் கத்தோலிக்கம்
கீழை மரபுவழி சபைகள்
கிழக்கு மரபுவழி சபை
ஆங்கிலிக்கன் சபை
லூத்தரன் சபை

நினைவுத் திருவிழா :
சனவரி 22 (கீழைத் திருச்சபை)
சனவரி 26 (உரோமன் கத்தோலிக்கம், லூத்தரன் சபை)
சனவரி 24 (1970 நாள்காட்டி சீர்திருத்தத்துக்கு முன் சில தலத் திருச்சபைகள்)

Lire la suite...

தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி

 24 ஜனவரி 2016: ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

 முதல் வாசகம் நெகே 8:2-4,5-6,8-10
 1. பாட பின்புலம்
கி.மு. 538ல் பாரசீக மன்னர் சைரவு பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் அவர் இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை அளித்து யூதாவுக்கு திரும்பிச் செல்ல அனுமதித்தார். திரும்பி வந்த இஸ்ரயேலர் நெகேமியா மற்றும் எஸ்ரா தலைமையில் 515ல் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்புகின்றனர். எருசலேமின் மதில்களும் மீள்கட்டமைப்பு செய்யப்படுகின்றன. புதிய ஆலயத்தின் தண்ணீர் வாயிலுக்கு எதிரே மக்களை கூட்டும் குரு எஸ்ரா அவர்கள்முன் திருச்சட்டத்தை வாசிக்கின்றார். திருச்சட்டம் வாசிக்கப்பட்டபோது மக்கள் பெற்ற அனுபவத்தின் பதிவே இன்றைய முதல்வாசகம்.

Lire la suite...

விளக்கம்  தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி
1. பாட பின்புலம்
மூன்றாம் எசாயா இறைவாக்குப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு, திருமணம் என்ற உருவகத்தின் பின்னணியில் இருக்கும் இன்றைய முதல் வாசகத்தை கொஞ்சம் நீட்டி கற்பனை செய்வோம். இஸ்ரயேல் என்னும் இளவரசன் போருக்குச் செல்கிறான். போரில் மிகப்பெரும் வெற்றி பெறுகிறான். எதிரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டனர். வெற்றி ஆரவாரத்தோடு தன் நகர் திரும்புகிறான்.

Lire la suite...

பொங்கல் - நன்றியின் நாள்

நன்றி : அருட்தந்தை சிலுவைமுத்து ச.ச தர்மபுரி

அன்புடை நெஞ்சங்களே!
அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள். பல விழாக்களை இந்நாட்களில் கொண்டாடுவதால், ஒட்டு மொத்தமாக விழாக்கால வாழ்த்துகள் என்கின்றேன். போகி, தைப் பொங்கல், மிலாடி நபி, திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் போன்ற விழாக்களை இந்நாட்களில் கொண்டாடுகின்றோம்.

Lire la suite...

01 ஜனவரி 2016: அன்னை மரியாள் இறைவனின் தாய் - புத்தாண்டுப் பெருவிழா

நன்றி : அருள்பணி இயேசு கருணாநிதி

 
கிரகோரியன் காலண்டரின் படி இன்று ஆண்டின் முதல் நாள். கிரேக்க கடவுள் ஜானுசைப் போல இரண்டு தலை கொண்டவர்களாக - பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக நிற்கின்றோம். இன்று புத்தாண்டுப் பெருநாள் (1). இந்த ஆண்டின் தலைநாளான இன்றுதான் திருஅவை நமக்கு மரியாளை இறைவனின் தாயாக (2) முன்வைக்கிறது. மேலும், இந்த நாள் தான் 'இயேசுவுக்கு' பெயர் சூட்டப்பட்ட நாள் (3). இந்த நாள் தான் கிறிஸ்துபிறப்பின் எட்டாம் திருநாள் (4). 
 

Lire la suite...

27 டிசம்பர் 2015 திருக்குடும்ப திருவிழா

 

 தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி அவர்கள்.
நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்: ஒரு ஆணும், இன்னொரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும். இன்னொரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டிருப்பர். அல்லது இன்னொரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக டுவிட் செய்து கொண்டிருப்பார்.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org