Get Adobe Flash player

Articles

இன்றைய சிந்தனை
நன்றி ; www.tamilcatholicnews.com

''சிமியோன் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்'' (லூக்கா 2:25)

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சியை விவரிக்கின்ற லூக்கா சிமியோன் என்னும் நேர்மையாளர் பற்றியும் அன்னா என்னும் திருப்பணியாளர் (லூக் 2:37) பற்றியும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். இவ்விருவரும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவர்கள்; கடவுளை மையமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்.

Lire la suite...

தீவனத்தொட்டியில் மெசியா - கிறித்துப் பிறப்பு விழா 25.12.2017
வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி மதுரை.
crib 01

கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலிகளில் மூன்று வெவ்வேறான நற்செய்தி வாசகங்கள் வாசிக்கப்படுவதால்,

Lire la suite...

மூன்று மனங்கள்

24.12.2017 திருவருகைக் கால 4 ஆம் ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள் பணி கருணாநிதி மதுரை

 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்' என்பது முதுமொழி.

 ஆண்டவராகிய இறைவனுக்கு தான் ஓர் ஆலயம் கட்ட விரும்புகின்றார் தாவீது. ஆனால், அவரின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத இறைவன், தாமே தாவீதுக்கு ஆலயம் கட்டுவதாக வாக்களிக்கின்றார்.

 இன்றைய முதல் வாசகத்தின் நாயகன் தாவீது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் நாயகி மரியாள்.

இருவருக்கும் இன்றைய வாசகங்களில் பின்வரும் ஒற்றுமைகளைக் காண்கின்றோம்:

Lire la suite...

(18 டிசம்பர் 2017) நற்செய்தி (மத் 1:18-24)

 விலக்கிவிட திட்டமிட்டிருந்தார்!
அருள்பணி இயேசு கருணாநிதி

 இயேசு பிறப்பதற்கு முன், அல்லது இயேசு பிறந்த சில நாள்களில் தங்கள் வீட்டின் முற்றத்தருகில் கட்டில் போட்டமர்ந்து, வானத்தின் நிலாவையும் நட்சத்திரங்களையும் மரியாளும், யோசேப்பும் இரசித்துக் கொண்டிருந்த அந்த ரம்மியமான முன்னிரவு நேரத்தில் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக மரியாள் இந்தக் கேள்வியை யோசேப்பிடம் கேட்டிருப்பார்:

Lire la suite...

நீங்கள் அறியாத ஒருவர்
17 டிசம்பர் 2017 திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை

I. எசாயா 61:1-2,10-11

II. 1 தெசலோனிக்கர் 5:16-24

III. யோவான் 1:6-8,19-28

நம் சமகாலத்தில் வாழ்ந்த சிறந்த ஆன்மீகவாதி இயேசுசபை அருள்தந்தை அந்தோனி டிமெல்லோ அவர்கள் 'சாதனா' என்ற நிறுவனத்தின் வழியாக ஜென் வகை புத்தமதத்தை கிறிஸ்தவம் கலந்து கொடுத்து தம் புதிய சிந்தனைகள் வழியாக இந்த உலகிற்கு அறிமுகமானவர். அவர் தன் 'ஒன் மினிட் விஸ்டம்' என்ற நூலில் பின்வரும் நிகழ்வை பதிவு செய்கின்றார்:

Lire la suite...

நற்செய்தியின் தொடக்கம் நம்பிக்கை
திருவருகைக் காலம் 2 ஆம் ஞாயிறு 10.12.2017 வாசகங்கள்
வழங்குபவர் ; அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை

I. எசாயா 40:1-5,9-11

II. 2 பேதுரு 3:8-14

III. மாற்கு 1:1-8

 

நற்செய்தியின் தொடக்கம் நம்பிக்கை

 'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்!'

 

Lire la suite...

நாளைய (8 டிசம்பர் 2017) நற்செய்தி: அருள் நிறைந்தவர்
விளக்கம் அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி

நாளை கன்னி மரியாளின் அமல உற்பவப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். 'சாந்த்தா இம்மாகொலாத்தா' என்று இத்தாலியில் கொண்டாடப்படும் இந்நாளில்தான் எல்லா வீடுகளிலும், தெருக்களிலும் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புக்கள் நடைபெறும். 

Lire la suite...

தூய கன்னிமரியாளின் அமலோற்பவ பெருவிழா - வரலாறு
அருள்பணி மரிய அந்தோனிராசு, பாளையங்கோட்டை
marie 05

இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொண்ட பின்பு, அது உணர்த்தும் செய்தியை நாம் தெரிந்துகொள்வோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபையில் ‘மரியாளின் உற்பவம்‘ (The Conception of Mary) என்றதொரு விழா கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா மரியாளின் பிறப்பையும், அவரிடம் விளங்கிய நல்ல பண்புகளையும் பறைசாற்றுதாய் இருந்தது. படிப்படியாக இவ்விழா மேலைநாட்டு திருச்சபைக்கும் பரவியது.

Lire la suite...

அன்னை மரியாள் அமல உற்பவத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 

பொதுவான கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, ஆதாமினால் தோன்றிய பாவம் மரபுவழியாகத் தொடர்ந்து உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறக்கிறது. இது சென்மப் பாவம் அல்லது பிறப்புநிலைப் பாவம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாவம் மனிதரை கடவுளின் அருள் நிலையில் இருந்து பிரித்து, உலகின் தீய நாட்டங்களுக்கு அடிமை ஆக்குகிறது.

தந்தையாம் கடவுள், உலக மீட்பரின் தாயாகுமாறு மரியாவை தொடக்கம் முதலே தெரிந்துகொண்டார்.[1] எனவே, மரியாவுக்கு மிகுதியான அருளைப் பொழிந்து,[2] பாவ மாசற்ற நிலையில் தாயின் வயிற்றில் கருவாக உருவாகச் செய்தார். இதுவே, மரியாவின் அமல உற்பவம் என்று அழைக்கப்படுகிறது. மீட்பரின் தாயானதால், மீட்பின் பேறுபலன்கள் மரியாவுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டன.


 

மரியாவின் அமல உற்பவ விழா என்பது, இயேசுவின் தாய் மரியா தனது தாயின் வயிற்றில் பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழா ஆகும். மரியா பிறப்புநிலைப் பாவம் இன்றி பிறந்தார் என்னும் கருத்தை மையப்படுத்தும் விழாவாக அமைந்துள்ள இது, கத்தோலிக்க திருச்சபையில் டிசம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது.

வரலாற்றில்

  • கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், டிசம்பர் 9ந்தேதி கடவுளின் தூய அன்னை விழா சிரியாவில் கொண்டாடப்பட்டது.
  • ஏழாம் நூற்றாண்டில், கீழைத் திருச்சபையின் பெரும்பாலான இடங்களில் இவ்விழா சிறப்பிக்கப்பட்டது.
  • எட்டாம் நூற்றாண்டில், மேலைத் திருச்சபைக்கு பரவிய இவ்விழா டிசம்பர் 8ந்தேதி கொண்டாடப்பட்டது.
  • 11ஆம் நூற்றாண்டில், "மரியா பாவமின்றி உற்பவித்தவர்" என்ற கருத்துரு தோன்றியது.
  • 1476ஆம் ஆண்டு, திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ் மரியாவின் அமல உற்பவம் திருவிழாவை அனைத்து இடங்களிலும் கொண்டாடுமாறு அறிவுறுத்தினார்.
  • திரெந்து பொதுச்சங்கம் (1545-1563), பிற்காலத்தில் இவ்விழா கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது.
  • 1854 டிசம்பர் 8ந்தேதி, திருத்தந்தை 9ம் பயஸ் மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக (Dogma of Faith) அறிவித்தார்.
  • 1858ல் பிரான்சு நாட்டில் லூர்து அன்னையாக காட்சி அளித்த மரியன்னை, "நானே அமல உற்பவம்" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

இன்றைய சிந்தனை

'யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்...' எனப் பறைசாற்றினார்'' (மாற்கு 1:7)

மாற்கு நற்செய்தியின் தொடக்கத்தில் நாம் சந்திக்கின்ற முதல் ஆள் திருமுழுக்கு யோவான். இவர் தம்மைப் பற்றி அறிவிக்கவில்லை; மாறாகத் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஒருவரைப் பற்றி அறிவிக்கிறார். யோவான் பாலை நிலத்தில் தோன்றி மக்களை நோக்கி, ''பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்'' என்று அறிவித்தபோது மக்கள் அவரை ஓர் இறைவாக்கினராகப் பார்த்திருப்பர். பண்டை நாள்களில் இஸ்ரயேலிலும் யூதாவிலும் தோன்றிய இறைவாக்கினர் இவ்வாறே மக்களின் பாவங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் கடவுளை நோக்கித் திரும்ப வேண்டும் என்று கேட்டனர். யோவான் கூறிய சொற்களைக் கேட்டு பல மக்கள் யோர்தான் ஆற்றில் இறங்கித் திருமுழுக்குப் பெற்றனர். ஏன், இயேசு கூட யோவானின் சொற்களுக்கு இணங்கி, திருமுழுக்குப் பெற்றார். இயேசுவைவிட யோவான் பெரியவரா என்னும் கேள்வி மக்களிடையே எழுந்திருக்க வேண்டும். அக்கேள்வி அர்த்தமற்றது என்று பதில்கூறுவதுபோல அமைந்துள்ளது யோவானின் கூற்று: ''என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்'' (மாற்கு 1:7). யோவான் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் இயேசுவோ கடவுளின் மகனாக நம்மிடையே வந்தார். இந்த உண்மையை யோவானின் சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.
மனிதர் நடுவே யார் பெரியவர் என்னும் கேள்வி இயல்பாகவே எழுவதுண்டு. சிறுவர்கள் விளையாடும்போது யார் அதிகத் திறமையாக ஆடுகிறார்கள் என்று பார்க்க போட்டியில் ஈடுபடுவதை நாம் காணலாம். அதுபோலவே வளர்ந்தவர்கள் நடுவிலும் போட்டி என்பது சில வேளைகளில் மிகக் கடுமையாக இருப்பதும் உண்டு. யோவான் இவ்வாறு போட்டியில் ஈடுபடவில்லை. அவருக்கென்று கடவுள் அளித்த பணி என்னவென்பதை அவர் உணர்ந்தார். அப்பணியை நிறைவேற்றுவதிலேயே அவர் முனைந்திருந்தார். எனவே, இயேசுவைப் பற்றி யோவான் கூறிய சொற்களும், இயேசுவின் வருகைக்குப் பிறகு யோவான் இயேசுவைப் பற்றிச் சான்று கூறியதும் அவருடைய பணிவான, பண்பட்ட மன நிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. போட்டி மனப்பான்மை என்பது சில வேளைகளில் கசப்பான விளைவுகளை உண்டாக்கிவிடுவதுண்டு. எப்படியாவது பிறரைத் தோற்கடிக்க வேண்டும் என முனைந்து செயல்படுவோர் தங்கள் முயற்சியில் தோற்றுப்போனால் ஏதோ வாழ்க்கையே ஒரு தோல்வியாக மாறிவிட்டதாக நினைத்துச் சோர்ந்துபோவதும் உண்டு. கடவுள் நமக்குத் தருகின்ற பணியை நன்முறையில் ஆற்றுவதே நம் பொறுப்பு என நாம் உணர்ந்தால் வீண் போட்டிகள் நம் எண்ணத்திலிருந்தே மறைந்து போகும்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org