Get Adobe Flash player

Articles

திருப்பாடுகளைத் தியானிப்போம், வாருங்கள்!

வழி  காட்டுபவர் : அருட்பணி  ஜா.அமிர்த ராசா சுந்தர்

கீழே  உள்ள தொடர்பு பட்டனை அழுத்தவும் :

சிலுவைப் பாதை

 

இது இரக்கத்தின் காலம் – மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய தானம்

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி

ஆந்திர மாநிலத்தில், Narsipatnamத்திலிருந்து Lambasingi நகருக்குப் போகும் வழியில், ஒரு கிராமத்தில் ஒரு குடிசையின் வெளியே, ஒரு வயதானவர் ஒரு மேஜை போட்டு, டீ போட்டுக் கொண்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற பயணி ஒருவர், தனது இரண்டு சக்கர வாகனத்தை, காலை உணவுக்காக அவ்விடத்தில் நிறுத்தினார்.

Lire la suite...

வில்லியனூர் மாதா - திருத்தல வரலாறு :-

தென்னிந்தியாவில் தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கும் வில்லியனூர் எழில் கொஞ்சும் மரங்கள்,தோப்புகள், பரந்து விரிந்த வயல்வெளிகள் நிறைந்த அழகிய சிற்றூர் ஆகும்.

பழமை வாய்ந்த திருக்காமேஸ்ரவர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்கள் போன்றவை அமைந்திருக்கும் இந்த ஊரில் கிறிஸ்தவர்களுக்கென்று ஆலயம் அமைந்திருக்கவில்லை என்பதால் புதுச்சேரியில் அப்போதிருந்த மறைபோதக சபையினர் வில்லியனூரில் ஆலயம் அமைக்க வேண்டி சிறு நிலத்தினை கடந்த 1867ம் ஆண்டு விலைக்கு வாங்கினர்..

இந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்போவதை அறிந்த சிலர் வழக்கம்போல் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்ததை தொடர்ந்து, பிரச்னைகள் மேற்கொண்டு ஏற்படாமலிருக்கும் வகையில் ஆலயம் கட்டும் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் புதுவையில் பிரபல மருத்துவ நிபுணரான லெப்பீன் துரை என்பவர் தனது குழந்தைக்கு ஏற்பட்ட கொடிய நோயிலிருந்து விடுவித்து உயிர்பிச்சை அளித்த தேவ அன்னைக்கு நன்றியாக பொருளுதவி செய்தார்.

இதனை பெற்றுக் கொண்ட அப்போதைய மறைபோதக சபையினர் வில்வநல்லூர் என்றழைக்கப்பட்ட வில்லியனூரில் தேவ அன்னைக்கு ஆலயம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, அதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரம் காட்டினர்.

கடந்த 1858ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள மசபியேல் குகையில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு காட்சி கொடுத்த அன்னை மரியாள், நானே அமலோற்பவம் என்றதுடன், தனக்கு ஒரு கோவில் கட்டும்படி கூறியதன் தொடர்ச்சியாகவே லூர்துவில் புகழ்மிக்க ஆலயம் அமைந்திருக்கிறது என்பது நமக்கு தெரிந்திருக்கும்..

இதுபோன்ற காலகட்டத்தில்தான் வில்லியனூரில் கிறிஸ்தவ மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் லூர்து மாதா பெயரில் கன்னி மரியாளுக்கு மருத்துவர் லெப்பீன் கொடுத்திருந்த தொகையினை கொண்டு ஆலயத்தை கட்ட துவங்கினர். இதற்கு அப்போதிருந்த சிலரால் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கணுவாப்பேட்டை என்ற கிராமத்தில் வில்லியனூர் திருக்காமேஸ்ரவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பணம் கொடுத்து வாங்கி முறைப்படி பதிவும் செய்து கொண்டனர்.

இதற்கு பின்னர் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த போதிலும், தேவ அன்னைக்கு ஆலயம் கட்டுவற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆலயத்தை கட்டுவதற்குரிய பொருளதவியை பெறுவதில் கிறிஸ்தவ பெரியோர்களும், மறைபோதக சபையினரும் அதிக தீவிரம் காட்டினர்.

ஆனால், போதுமான நிதியுதவி இல்லை என்பதால் ஆரம்பத்தில் சிலுவை கோவிலாக கட்டப்பட்டாலும், பொருளுதவி மற்றும் ஒத்துழைப்பின்மை காரணமாக கட்டுமான பணிகள் மீண்டும் மீண்டும் தொய்வடைய துவங்கியது.

இதுபோன்ற சூழ்நிலையில், புதுச்சேரியில் ஏழைகளுக்கு தாராளமாய் உதவி செய்து வந்த புண்ணியவதி ஒருவர், வில்லியனூரில் அமைய உள்ள ஆலயத்திற்கு லூர்தன்னையின் சொரூபம் வாங்கி வைக்க எண்ணியதுடன், அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டார்.
1877ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி ஆலயத்தின் கட்டுமான வேலைகள் முடிவடைவதற்கு முன்பாகவே பிரான்ஸ் நாட்டில் இருந்து பெரிய பெட்டியில் லூர்து அன்னையின் சொரூபம் கப்பல் மூலமாக புதுச்சேரிக்கு கொண்டு கொண்டு வரப்பட்டதுடன், மிஷனுக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

கப்பலில் இருந்து அன்னையின் சொரூபத்தை இறக்கியபோது அது மூன்று முறை கீழே விழுந்தபோதிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென்பது முதல் புதுமையாகவே அமைந்திருந்தது.

இதற்குபின்னர் குறிப்பிட்ட ஒருநாளில் அப்போதிருந்த பேராயர் லவுணான் ஆண்டகை அவர்கள் லூர்து மாதா சொரூபத்தினை அர்ச்சித்து புனிதப்படுத்த, புதுச்சேரியில் உள்ள மக்கள் மூன்று நாட்கள் தரிசிக்கும் வகையில் அன்னை சொரூபத்தை மலர்களால் அலங்கரித்து பார்வைக்கு வைத்திருந்தனர்.

இதனிடையே 1877ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு ராணுவ இசைக்கருவிகள் முழங்க, வாண வெடிகள் அதிர, பவனியாக வில்லியனூருக்கு கொண்டு செல்லப்பட்டபோது நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம் கிறிஸ்தவர்கள் தேவ அன்னைக்கு பிரமாண்டமாய் வரவேற்பளித்து தங்கள் உற்சாகத்தினை வெளிப்படுத்தினர்.

தற்பொது அருமார்த்தபுரம் என்றழைக்கப்படும் அருமார்த்த பிள்ளைச்சாவடியிலிருந்து சுல்தான்பேட்டை வழியாக வில்லியனூருக்கு தேவ அன்னையின் சொரூபம் கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் ஒருசிலரின் எதிர்ப்பு இருதரப்பினரிடையே கலகமாக வெடிக்க, தேவ அன்னையின் சொரூபம் தானாக திரும்பி வேறு வழியை காட்டியது.

தற்போது வி. மணவெளி என்றழைக்கப்படும் பகுதி அப்போது குறுகிய பாதையாக இருந்தபோதிலும் அவ்வழியாக மாதா சொரூபம் பவனியாக கொண்டு செல்லப்பட்டு, கணுவாப்பேட்டை என்ற இடத்தில் பக்தர்களின் பார்வைக்காக பந்தலில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு பின்னர், ஆலயத்தின் பீடத்தில் அருட்தந்தை. குய்யோன் தாவீது நாதர் அவர்களால் தேவஅன்னையின் சொரூபம் தூக்கி நிலைநிறுத்தபட்டது.

1877ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி புதுச்சேரியின் பேராயர் மேதகு லெவணான் ஆண்டகை அவர்கள் திருமுறை ஒழுக்கங்களை நிறைவேற்ற, அழகுமிகுந்த அன்னையின் சொரூபத்தை அர்ச்சித்து கெபியில் அரியணையேற்றினார்.

கடந்த 1885ம் ஆண்டு பேராயர் லெவணான் ஆண்டகை ரோமாபுரி சென்றபோது, அப்போதிருந்த போப்பாண்டவர் 13ம் சிங்கராயரிடம் வில்லியனூரில் நடைபெறும் அற்புத அதிசயங்களை எடுத்துச் சொல்லி வில்லியனூர் புனித லூர்தன்னைக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டதையடுத்து வில்லியனூர் அன்னைக்கு முடிசூட்டுவதற்கான உத்தரவினை 1886ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி போப்பாண்டவர் 13ம் சிங்கராயர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து வில்லியனூர் லூர்தன்னைக்கு திருமுடி சூட்டப்பட்டதுடன், திருத்தலமாகவும் உயர்த்தப்பட்டது. ஆசிய கண்டத்திலேயே சில சொரூபங்கள்தான் போப்பாண்டவரின் பெயரில் முடிசூட்டப்பட்டுள்ளன. அவற்றில் வில்லியனூரில் அமைந்துள்ள புனித லூர்தன்னை சொரூபமும் ஒன்றாகும்.

அன்று முதல் இன்று வரை வில்லியனூர் திருத்தலத்தின் பீடத்தில் வீற்றிருக்கும் அன்னை மரியாள் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு எண்ணிலடங்கா புதுமைகளை செய்து வருகிறார்.

லூர்து நகரில் தேவ அன்னை காட்சி கொடுத்த பிறகு கட்டப்பட்ட கோவிலுக்கு பின்னர் உலகிலேயே முதல்முறையாக லூர்து மாதா பெயரில் கோவிலும் கெபியும் கட்டப்பட்டுள்ள வில்லியனூரில், பிரான்ஸ் தேசத்தில் அன்னை மரியாள் காட்சி கொடுத்த மசபியேல் குகையில் இருந்து ஒரு சிறிய கல் துண்டு பேராயர் வெண்மணி செல்வநாதர் ஆண்டகையின் முயற்சியால் ஆலய பீடத்தின் இடதுபும் உள்ள சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும்..

இப்படிப்பட்ட அன்னையின் சொரூபம் லூர்து நகரில் காட்சிகளை பெற்ற புனித பெர்னதெத்தின் நேரடி பார்வையில் தயாரிக்கப்பட்டு, அவரது உறவினரான தார்ப்ஸ் அடிகளாரின் முயற்சியால் அரியணை ஏற்றப்பட்டது பெருமைக்குரிய விஷயமாகும்.

மாதா குளம்:-

ஆசிய கண்டத்திலேயே தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்தின் எதிரே குளம் அமைந்திருப்பது இந்தியாவில் உள்ள வில்லியனூரில் மட்டும்தான் என்பது இந்த திருத்தலத்திற்கு கிடைத்துள்ள பெருமைகளில் முக்கியமானதாகும்…

இன்று நீங்கள் பார்க்கும் இந்த குளத்தின் கரைகள் ஆரம்ப காலங்களில் கற்களால்தான் கட்டப்பட்டிருந்தது. இதன்பின்னர்தான் 1923ம் ஆண்டு வில்லியனூர் லூர்தன்னை திருத்தலத்தின் பங்கு தந்தையாக இருந்த லெஸ்போன் அடிகளார் அவர்கள், தனது தீவிர முயற்சியால் குளத்தை சுற்றி செங்கற்களை கொண்டு சுவர்கள் அமைத்தார்.

1924ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்த பக்தர்கள் கொடுத்த பொருளுதவியை கொண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து லூர்து அன்னையின் சொரூபம் வரவழைக்கப்பட்டு குளத்தின் மைய பகுதியில் உள்ள தூண் மீது வைக்கப்பட்டது. இன்றைக்கும் குளத்தில் உள்ள நம் அன்னை, தன்னை நாடி வருவோருக்கு எண்ணிலடங்கா தேவஆசீரை தந்து பிணிகளை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் மாதா காட்சி கொடுத்தபோது உற்பத்தியான ஊற்றில் இருந்து கிடைக்கப்பெறும் புனிதநீர் இந்த குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்படுகிறது. இந்த குளத்தின் புனித நீரினை உபயோகித்து நோய்களில் இருந்து குணமானவர்கள், லூர்தன்னையை கண்கொடுத்த அன்னை என்று போற்றி புகழ்கிறார்கள்.

புனிதம் கொண்ட மாதா குளத்தை சுற்றி முழங்காலிட்டு சுற்றி வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையின் காரணமாக, பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக குளத்தை சுற்றி முழங்காலிட்டு சுற்றி வருவது அன்னையின் மீதான நம்பிக்கையை உறுதிபடுத்துகிறது.

திருத்தல சிறப்புகள்:-

வில்லியனூர் புனித லூர்தன்னை திருத்தலத்தின் சிறப்பாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் புதுவையில் இருந்து பாதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. 1977ம் ஆண்டு புயலினால் புதுவைக்கு மாபெரும் பேரழிவு ஏற்படுமென்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தபோது, அப்போதிருந்த பேராயர் வெண்மணி செல்வநாதர் ஆண்டகை அவர்கள், புயலில் இருந்து புதுவையை காப்பாற்ற தேவஅன்னையிடம் ஜெபிக்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

புயலில் இருந்து காப்பாற்றப்பட்டால் வில்லியனூருக்கு பாதயாத்திரையாக வந்து நன்றிசெலுத்துவோம் என்றும் வாக்கு கொடுத்தார். இதனால் புதுவையை தாக்கவிருந்த புயல் வேறு இடம் நகர்ந்ததின் விளைவாக மக்கள் காப்பாற்றப்பட்டதையொட்டி, 1977ம் ஆண்டு முதல் பாதயாத்திரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் புதுவை நகர மக்கள் திரளாக கலந்து கொள்வது மாநிலத்தின் நிகழ்வுகளில் முக்கியமாக கருதப்படுகிறது.

வில்லியனூர் புனித லூர்தன்னை ஆலயம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுபெற்றதன் அடையாளமாக ஜெபக்கூடம் கட்டப்பட்டு கடந்த 1978ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி திருநிலைப்படுத்தப்பட்டது. இங்கு வீற்றிருக்கும் தேவ அன்னையின் சொரூபமும் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டதாகும்.

லூர்து நகரில் தேவஅன்னையின் காட்சியை பெற்ற புனித பெர்னதெத் மரணமடைந்து 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதன் நினைவாக திருத்தலத்தினுள் பாடுபட்ட சொரூபம் நடப்பட்டதுடன், ஆலய வளாகத்தினுள் ஜெபக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

மாதா குளத்தை சுற்றி ஆரம்ப நாட்களில் இருந்து சிலுவை பாதை படங்கள் அகற்றப்பட்டு, தற்போது இயேசுவின் பாடுகளை உணர்த்தும் நிலைகள் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. மாதா குளத்தை சுற்றி வேண்டுபவர்களின் பக்தி முயற்சியை அதிகப்படுத்தும் வகையில் இந்த சிலுவை பாதை சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளது.

வில்லியனூர் மாதா திருத்தல தோற்றத்தில் முக்கிய அம்சமாக இருப்பது ஆலய கடிகாரம்தான். பெல்ஜியம் நாட்டு வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட இந்த ஆலய கடிகாரம் கடந்த 1908ம் ஆண்டு நிறுவப்பட்டு இன்று வரை இயங்கி வருவதுடன், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை, அதன்பின்னர் 5 நிமிட இடைவெளிக்கு பின்னர் மறுமுறை என ஒலித்து திருத்தலத்திற்கு பெருமை சர்த்து வருகிறது.

வில்லியனூர் லூர்தன்னை திருத்தலம், மாதா குளம், ஜெபக்கூடம், பங்குதந்தை அறையின் முன்புற பகுதி மற்றும் தேரில் எடுத்துச் செல்லப்படும் மாதா சொரூபங்கள் அனைத்துமே பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்….

– avec லூர்து அன்னை ஆலயம் சவேரியார்புரம், லுர்து அன்னை அலயம் ஆலங்குளம், கார்மல் அன்னை ஆலயம் கொல்

மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 10):  சாம்பல் புதன்

நன்றி : அருள்வாக்கு.காம்
மறைவாய் உள்ளதை காணும் உங்களது தந்தை விரதி பலன் கொடுப்பார்.
மறைவாய் உள்ள யாவற்றையும் ஊடுறுவு காண்கிறவர் படைத்தவர்.
நல்லதும் அவருக்கு தெரியும் பாவமும் அவருக்கு தெரியும்.

Lire la suite...

சிந்தனை

மறைவாய் உள்ளதை காணும் உங்களது தந்தை விரதி பலன் கொடுப்பார்.

மறைவாய் உள்ள யாவற்றையும் ஊடுறுவு காண்கிறவர் படைத்தவர்.

நல்லதும் அவருக்கு தெரியும் பாவமும் அவருக்கு தெரியும்.

அவருடைய பார்வையில் இருந்து எதுவும் மறைந்து போவதில்லை.

அவரை கேலி செய்யவோ, ஏமாற்றவோ யாராலும் இயலாது.

நல்ல காரியங்களுக்கு பிரதி பலன் கொடுப்பார் என்றால், தீமையான பாவ செயலுக்கு தண்டனை கொடுக்கவும் செய்வார் என்பதுவே உண்மை.

ஆனால் நல்லவற்றிற்கு கைம்மாறு வாழும் காலத்திலேயே கொடுக்கின்றவர், தண்டனையை காலம் தாழ்த்தி மனமாற்றத்திற்கான காலம் தந்து பொறுமையோடு காத்திருந்து செய்வார் என்பது தான் உண்மை.

அந்த ஏற்புடைய காலம் அதுவே.

அவருடைய மன்னிப்பின் காலம் இதுவே.

இந்த அற்புதமான அருளின் காலம் நிறைந்த பலன் தந்து, வாழ்தை சீராக்கட்டும், செம்மைப்படுத்தட்டும்.

நல்வாழ்த்துக்கள். செபங்கள். ஆசீர்.

மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 10):  சாம்பல் புதன்

கடவுளோடு ஒப்புறவாவோம்

இன்று அன்னையாம் திரு அவை சாம்பல் புதனை/விபூதிப் புதனை  நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. கடவுளோடு ஒப்புறவாகவும், அதன்வழியாக நம்மோடு வாழக்கூடிய உடன் சகோதர, சகோதரிகளோடு ஒப்புறவாகவும் இறைவனால்/ திருச்சபையால் தரப்பட்ட அருளின் காலம்தான் இந்த தவக்காலம். இத்தவக்காலத்தில் நாம் இறைவனோடும், நம் அயலாரோடும் எப்படியெல்லாம் ஒப்புறவாகலாம் என்பதை இன்றைய வாசகங்களின் வழியாகச் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர் யோவேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்.. நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” என்று. இங்கே ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள் என்ற வார்த்தையானது திரும்பத் திரும்ப வருவதை நாம் நமது கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதேபோன்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அதாவது கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:20 ல் பவுலடியார் கூறுவார், “ஆகவே, கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்று. எனவே நாம் ஆண்டவராகிய கடவுளிடம் திரும்பி வந்து, அவரோடு ஒப்புறவாகவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளமாக இருக்கின்றது.

கடவுளோடு எப்படி ஒப்புறவாகலாம் என்பதற்கு ஆண்டவர் இயேசு நற்செய்தியில்  மூன்று முக்கியமான காரியங்களை கூறுவார். அவையாவன 1.தர்மம் 2.நோன்பு 3.இறைவேண்டல். இதில் தர்மம் என்பதை மட்டும் குறித்துச் சிந்தித்துப் பார்த்து இறைவனோடு ஒப்புறவாக முயல்வோம்.

எலியாஸ் என்ற ஓர் ஆன்மீக எழுத்தாளர் கூறுவார், “தபால் பெட்டியில் போடப்படும் கடிதம் உரிய இடத்தில் போய் சேர்வதுபோல, ஏழை ஒருவருக்கு நாம் செய்யும் தர்மம் இறைவனுக்கு நேரடியாகச் சென்று சேர்ந்துவிடுகிறது” என்று. ஆம், ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறவர் என்று நீதிமொழிகள் புத்தகம் 19:17 ல் வாசிக்கின்றோம். ஆகவே ஏழைகளுக்கு/ எல்லா மக்களுக்கு தர்மம் செய்வதன் வழியாக எப்படி இறைவனோடு ஒப்புறவாகலாம் என்பது பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக சிகாகோ நகரிலே காவல்துறையினர் மத்தியில் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. அது என்னவென்றால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூடுகிறது என்றால், அவர்களை எப்படி அங்கிருந்து கலைப்பது என்பதுதான் அக்கேள்வி.

காவல்துறையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதிலைச் சொன்னார்கள். ‘கண்ணீர் புகைகுண்டு வீசுவேன், துப்பாக்கியைப் பயன்படுத்துவேன், லத்தியை வைத்து அடித்து விரட்டுவேன்’ என்று சொல்லிக்கொண்டே போனார்கள். இறுதியாக ஒரு காவல்துறை அதிகாரி எழுந்து நின்று, “கலவரக் கூட்டத்தை விரட்ட, நான் என்னிடம் இருக்கும் தொப்பியைக் கழற்றி, மக்களிடம் யாசிப்பேன் (பிச்சை கேட்பேன்), உடனே எல்லாரும் தெறித்து ஓடி விடுவார்கள்” என்றார்.

அங்கே இருந்தவர்கள் இதைக் கேட்டு குபீர் என்று சிரித்தார்கள். இறுதியில் அவருக்கே பரிசையும் தந்தார்கள்.

நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற மனநிலையானது படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

தவக்காலத்தைத் தொடங்கி இருக்கும் நாம், கிறிஸ்தவர்களின் மூன்று முக்கியக் கடமைகளில் ஒன்றான தர்மம் செய்வதில்/ அறச்செயல் புரிவதில் சிறந்து விளங்கவேண்டும் என்று திருச்சபையானது நமக்கு அழைப்புத் தருகிறது.   ஆண்டவர் இயேசு, நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற இக்கருத்தை நற்செய்தியின் பல பகுதியில் விளக்கிக் கூறுவார். குறிப்பாக தன்னைப் பின்பற்ற நினைத்த செல்வந்தனாகிய இளைஞனிடம், “உன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும், பின்னர் வந்து என்னைப் பின்பற்றும்” என்கிறார். (மத் 19:21)

ஆகவே, இயேசு தன்னுடைய போதனைகளில் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்திக்கூறுகிறார் என்பது தெளிவு.

மேலும் நாம் கொடுக்கின்றபோது, தர்மம் செய்கிறபோது எப்படிப்பட்ட மனநிலையோடு செய்யவேண்டும் என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார்:  “நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்” என்பார்.

எனவே தர்மம் செய்கிறபோது ஏதோ விளம்பரதிற்காகச் செய்யாமல், மறைவாக யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும் என்பது இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

ஆனால் இன்றைக்கு விளம்பர உலகத்தில் இருக்கும் நம்மால் விளம்பரமே இல்லாமல் ஒரு நல்ல காரியத்தை, அறச்செயலை செய்ய முடிகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இயேசு “உங்கள் வலக்கை செய்வது இடக்கைத் தெரியாதிருக்கட்டும்” என்கிறார். அப்படியென்றால் நாம் ஒன்று கொடுக்கிறபோ

தவக்காலம் - சிறு விளக்கம்

தருபவர் ; அருள்பணி சூசைநாதன்

Jesus 04

பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தவக்காலம் ஆரம்பிக்கின்றது. தவக்காலம் என்பது இயேசுகிறிஸ்துவின் மீது வீண்பழி சுமத்தி, அவரைச் சித்திரவதை செய்து, சிலுவையைச் சுமத்தி, அதில் அவரை அறைந்து, அவரை இறப்புக்குள்ளாக்கிய காலத்தைக் குறிப்பதாகும்.

பிப்ரவரி 10ஆம் நாள், விபூதிப் புதன் என்றழைக்கப்படுகின்றது. அன்று மக்களின் உளமார்ந்த மனமாற்றத்தின் வெளி அடையாளமாகவும் தவத்தின் குறியீடாகவும், நமது நிலையாமையைக் குறிப்பதற்காகவும் நமது நெற்றியில் திருநீறு பூசப்படுக்கின்றது.

Lire la suite...

விளக்கம் அருளுபவர் : அருட்பணி மரியா அந்தோணி (பாளையம்கோட்டை)
நன்றி : அருள்வாக்கு

 வலுவின்மையில் வெளிப்படும் இறைவனின் வல்லமை

ஒருமுறை புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின்இ தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார். விருந்தினர்களில் ஒருவர் தன்னுடைய குழந்தையையும் தன்னோடு அழைத்து வந்திருந்தார். அக்குழந்தைக்கு ரஸ்கினிடமிருந்து ஏதாவது ஒரு பொருளை, அவர் நினைவாக வாங்கிவிடவேண்டும் என்ற விரும்பம். இறுதியில் அவளது விரும்பம் நிறைவேறியது.

Lire la suite...

04/02/2016 15:14

 

ஒருசமயம் ஒருவர் குளத்தங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் தூண்டிலில் அகப்பட்ட மீன் கரையிலே கிடந்தது. அந்தச் சமயம் உயரே பறந்துகொண்டிருந்த ஒரு பருந்து, கரையிலே கிடந்த மீனைப் பார்த்தது. அவ்வளவுதான். அதைக் குறிபார்த்து அதற்கு நேரே பறந்து வந்து அந்த மீனைக் கொத்தி எடுத்துக் கொண்டு உயரே பறந்தது.

Lire la suite...

31 ஜனவரி 2016: ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு வாசகங்களின் விளக்கம்
அளிப்பவர் : அருட்பணி இயேசு கருணாநிதி
 
முதல் வாசகம் எரேமியா 1:4-5, 17-19
 
1. பாடத்தின் இலக்கியக் கூறு (Literary Genre of the Text)
அ. இன்றைய முதல் வாசகம் 'இறைவனின் அழைப்பும், மனிதர்களின் பதிலும்' (Vocation Type-Scene) என்னும் இலக்கிய கூறைக் கொண்டிருக்கிறது. இதன்படி, இறைவன் ஒருவரை அழைக்கிறார். அழைக்கப்படுபவர் அதற்கு தயக்கம் தெரிவிக்கிறார். இறைவன் தன் உடனிருப்பை அவருக்கு வாக்களிக்கின்றார்.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org