Get Adobe Flash player

Articles

நன்றி : திரு புஷ்பராஜா & அருள்பணி அந்தோணி சவரி(யப்பன்)

புனித திமொத்தேயு

Timothieu

ஆயர் :

பிறப்பு : கி.பி. சுமார் 17

இறப்பு : கி.பி. சுமார் 97
மசெதோனியா

ஏற்கும் சபை/ சமயம் :
உரோமன் கத்தோலிக்கம்
கீழை மரபுவழி சபைகள்
கிழக்கு மரபுவழி சபை
ஆங்கிலிக்கன் சபை
லூத்தரன் சபை

நினைவுத் திருவிழா :
சனவரி 22 (கீழைத் திருச்சபை)
சனவரி 26 (உரோமன் கத்தோலிக்கம், லூத்தரன் சபை)
சனவரி 24 (1970 நாள்காட்டி சீர்திருத்தத்துக்கு முன் சில தலத் திருச்சபைகள்)

Lire la suite...

தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி

 24 ஜனவரி 2016: ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

 முதல் வாசகம் நெகே 8:2-4,5-6,8-10
 1. பாட பின்புலம்
கி.மு. 538ல் பாரசீக மன்னர் சைரவு பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் அவர் இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை அளித்து யூதாவுக்கு திரும்பிச் செல்ல அனுமதித்தார். திரும்பி வந்த இஸ்ரயேலர் நெகேமியா மற்றும் எஸ்ரா தலைமையில் 515ல் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்புகின்றனர். எருசலேமின் மதில்களும் மீள்கட்டமைப்பு செய்யப்படுகின்றன. புதிய ஆலயத்தின் தண்ணீர் வாயிலுக்கு எதிரே மக்களை கூட்டும் குரு எஸ்ரா அவர்கள்முன் திருச்சட்டத்தை வாசிக்கின்றார். திருச்சட்டம் வாசிக்கப்பட்டபோது மக்கள் பெற்ற அனுபவத்தின் பதிவே இன்றைய முதல்வாசகம்.

Lire la suite...

விளக்கம்  தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி
1. பாட பின்புலம்
மூன்றாம் எசாயா இறைவாக்குப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு, திருமணம் என்ற உருவகத்தின் பின்னணியில் இருக்கும் இன்றைய முதல் வாசகத்தை கொஞ்சம் நீட்டி கற்பனை செய்வோம். இஸ்ரயேல் என்னும் இளவரசன் போருக்குச் செல்கிறான். போரில் மிகப்பெரும் வெற்றி பெறுகிறான். எதிரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டனர். வெற்றி ஆரவாரத்தோடு தன் நகர் திரும்புகிறான்.

Lire la suite...

பொங்கல் - நன்றியின் நாள்

நன்றி : அருட்தந்தை சிலுவைமுத்து ச.ச தர்மபுரி

அன்புடை நெஞ்சங்களே!
அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள். பல விழாக்களை இந்நாட்களில் கொண்டாடுவதால், ஒட்டு மொத்தமாக விழாக்கால வாழ்த்துகள் என்கின்றேன். போகி, தைப் பொங்கல், மிலாடி நபி, திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் போன்ற விழாக்களை இந்நாட்களில் கொண்டாடுகின்றோம்.

Lire la suite...

01 ஜனவரி 2016: அன்னை மரியாள் இறைவனின் தாய் - புத்தாண்டுப் பெருவிழா

நன்றி : அருள்பணி இயேசு கருணாநிதி

 
கிரகோரியன் காலண்டரின் படி இன்று ஆண்டின் முதல் நாள். கிரேக்க கடவுள் ஜானுசைப் போல இரண்டு தலை கொண்டவர்களாக - பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக நிற்கின்றோம். இன்று புத்தாண்டுப் பெருநாள் (1). இந்த ஆண்டின் தலைநாளான இன்றுதான் திருஅவை நமக்கு மரியாளை இறைவனின் தாயாக (2) முன்வைக்கிறது. மேலும், இந்த நாள் தான் 'இயேசுவுக்கு' பெயர் சூட்டப்பட்ட நாள் (3). இந்த நாள் தான் கிறிஸ்துபிறப்பின் எட்டாம் திருநாள் (4). 
 

Lire la suite...

27 டிசம்பர் 2015 திருக்குடும்ப திருவிழா

 

 தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி அவர்கள்.
நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்: ஒரு ஆணும், இன்னொரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும். இன்னொரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டிருப்பர். அல்லது இன்னொரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக டுவிட் செய்து கொண்டிருப்பார்.

Lire la suite...

கிறிஸ்து பிறப்பு விழாவும் மைசூர் ரசமும்

சிறு கதை : 'கிறிஸ்மஸ் இரவில் ஒரு ...' சிறுகதைத் தொகுப்பு நூலில் இருந்து.

எழுதியவர் : புதுவை எழில்

 St Peter saints

 முணு... முணு... முணு...!
மோட்சத்தில் முணுமுணு... - ஏகப்பட்ட முணு முணு.
முதலில் காதில் போட்டுக்கொள்ளாமல்தான், கண்டுகொள்ளாமல்தான் இருந்தார், இராயப்பர்! ஆனால் முணுமுணு சத்தம் அதிகமாகவே, என்ன ஏது என்று விசாரிக்கத் தொடங்கினார் :

Lire la suite...

தேடல் பற்றி அருமையான கருத்துகள்!
தருபவர் அருள்பணி ஆ சிலுவைமுத்து
Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser. 
படித்துப் பயன் அடைவோம்.

கட்டுரையைப் படிக்க இந்த பட்டனைத் தட்டவும் :

Thedal

SArva viyabi

வியப்பாக இருக்கிறது! ஆனால் உண்மை!!
175 ஆண்டுகள்  கடந்தும் இன்னும் உலா வருகிறார் நம் முப்பாட்டனார்!
இவர் பிறந்த ஆண்டு 1840. கணக்குப் பாருங்கள் : சரியாக 175 ஆண்டுகள் ஆகின்றன.
அவர் யார்?
யூகிக்க முடிகிறதா! அவர்தாம் நம் புதுவையில் இருந்து வெளி வரும் சர்வ வியாபி இதழ். இது பற்றி அந்தச் சர்வ வியாபி இதழில், அருள்பணி சுவாமி ஆ லூயிஸ் எழுதிய கட்டுரையைக் காண இந்தப் பட்டனை அழுத்துக :

Sarva viyabi 175 ans

சிந்தனைகள் வழங்குபவர்  : அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை.
(சிறப்பான சிந்தனைகளைப் பொறுப்பாக எழுதி இருக்கிறார் .
இத்திருவருகைக்  காலத்தில் அவற்றைப் படித்துப் பயன் பெற இங்கே தந்திருக்கிறோம்.)

 

முதல் வாசகம் மீக்கா 5:2-5

1. வசன எண்கள் முரண்பாடு
இன்றைய முதல் வாசகத்தின் வசன எண்கள் விவிலியத்திற்கு விவிலியம் மாறுபடுகின்றன. எபிரேய விவிலியத்தில் 1 முதல் 4
வசனங்களாக இருப்பவை, தமிழ் மொழிபெயர்ப்பில் 2 முதல் 5 வசனங்கள் எனக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பழைய
மொழிபெயர்ப்பில் திருப்பாடல்களின் எண்கள் ஒரு மாதிரியும், இப்போது நாம் பயன்படுத்தும் பொது மொழிபெயர்ப்பில் வேறு
மாதிரியும் இருக்கிறது. இதற்குக் காரணம், தமிழ் மொழிபெயர்ப்பு ‘எழுபதின்மர் பதிப்பு’ என்று சொல்லப்படும் கிரேக்க
செப்துவாயிந்த்திலிருந்து செய்யப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்பிற்கும், எபிரேய மூலத்திற்கும் உள்ள வித்தியாசமே இன்று
நாம் காணும் வசன வித்தியாசத்திற்குக் காரணம்.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org