Get Adobe Flash player

Articles

ஞாயிறு 13.03.2016 வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர்  அருள்பணி கிறித்து கருணாநிதி
அ. பாட பின்புலம்
 
பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த யூதா மக்களை விடுதலை செய்வதாக இறைவாக்கினர் எசாயா வழியாக வாக்களிக்கும் இறைவன், அவர்களுக்கு தான் எகிப்தில் செய்த அறிகுறியை நினைவுபடுத்தி, தான் இப்போது செய்வது அதனிலும் புதியது என்று தான் தரவிருக்கும் விடுதலையின் மேன்மையைச் சொல்கின்றார்.
 

Lire la suite : ஞாயிறு 13.03.2016 வாசகங்களின் விளக்கங்கள்

சிலுவைப் பாதை - புதிய பார்வையில்
இரக்கத்தை மையமாக வைத்து
எழுதியவர் : திருமதி ஆரோக்கிய உஷா மேரி
நன்றி : கனக தூதன் (கனடா)
Canadian Tamil Catholic Messanger
திரு அன்டன் பிலிப்

இந்தப் பட்டன்களைத் தட்டுக
சிலுவைப் பாதை - புதிய பார்வையில் முதல் பகுதி
சிலுவைப் பாதை - புதிய பார்வையில் இரண்டாம் பகுதி
சிலுவைப் பாதை - புதிய பார்வையில் மூன்றாம் பகுதி
சிலுவைப் பாதை - புதிய பார்வையில் நான்காம் பகுதி
Cross

 

கோபம் எனது அடிமை, நீயோ அதன் அடிமை

நன்றி : வத்திகான் வானொலி

sage king

அண்டை நாட்டைக் கைப்பற்றிய ஒரு பேரரசர், ஒரு நாள் மாலை, காட்டில் வேட்டையாடச் சென்றார். அப்போது தன் எதிரே வயதான முனிவர் ஒருவர் வருவதைக் கண்டு குதிரையிலிருந்து கீழிறங்கி அவருக்குத் தலை வணங்கினார். அந்த முனிவரின் கண்கள் சாந்தமும், தெய்வீக ஒளியும் நிறைந்து காணப்பட்டன.

Lire la suite : கோபம் எனது அடிமை, நீயோ அதன் அடிமை

விளக்கம் தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி
(நன்றி : அருள்வாக்கு இணையதளம்.)

முதல் வாசகம் விடுதலைப் பயணம் 3:1-8, 13-15
 
1. பாட பின்புலம்
இறைவனின் வெளிப்பாடும், அழைத்தலும் என்ற இலக்கியக்கூறுக்குள் வருகிறது இன்றைய முதல் வாசகம். நாம் கடந்த சில வாரங்களுக்கு முன் கேட்ட எசாயா மற்றும் எரேமியாவின் அழைத்தல் நிகழ்வுகளில் காணப்படும் கூறுகளே இந்த நிகழ்விலும் உள்ளன. 
 

Lire la suite : 28.02.2016 ஞாயிறு வாசகங்களின் விளக்கம்

21 02 2016 ஞாயிறு வாசகங்களின் விளக்கம்

தருபவர் அருள்பணி இயேசு கருணாநிதி

 முதல் வாசகம் தொநூ 15:5-12, 17-18

 1. பாட பின்புலம்
'உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உன் பெயரை சிறப்புறச் செய்வேன். நீயே ஆசியாக விளங்குவாய்' (தொநூ 12:2-3) என்று ஆபிராமை (இன்னும் 'ஆபிரகாமாக' மாறவில்லை!) அழைத்த இறைவன் இன்றைய முதல் வாசகப் பகுதியில் அவரோடு உடன்படிக்கை செய்கின்றார். உடன்படிக்கை என்பது தொடக்ககால அண்மை கிழக்கு பகுதியில் பரவலாக இருந்த ஒரு சமூக-அரசியல் பழக்கம். ஒரு ஊரின்மேல் வெற்றி கொள்ளும் அரசன், அந்த ஊரை வெற்றி கொண்டபின், அந்த ஊரையும், ஊரின் மக்களையும் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்கிறான். இந்த சொந்தத்தைக் குறிக்கும் சொல்லாடலே உடன்படிக்கை. உடன்படிக்கைக்கு மூன்று கூறுகள் அவசியம்: (அ) வாக்குறுதி, (ஆ) அடையாளம், (இ) கீழ்ப்படிதல். உடன்படிக்கை மேலிருந்து கீழ்நோக்கி நடைபெறும் நிகழ்வு. அதாவது, அரசன்தான் முதல் அடி எடுத்து வைத்து இதை தொடங்க வேண்டும்.

Lire la suite : 21 02 2016 ஞாயிறு வாசகங்களின் விளக்கம் 

திருப்பாடுகளைத் தியானிப்போம், வாருங்கள்!

வழி  காட்டுபவர் : அருட்பணி  ஜா.அமிர்த ராசா சுந்தர்

கீழே  உள்ள தொடர்பு பட்டனை அழுத்தவும் :

சிலுவைப் பாதை

 

இது இரக்கத்தின் காலம் – மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய தானம்

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி

ஆந்திர மாநிலத்தில், Narsipatnamத்திலிருந்து Lambasingi நகருக்குப் போகும் வழியில், ஒரு கிராமத்தில் ஒரு குடிசையின் வெளியே, ஒரு வயதானவர் ஒரு மேஜை போட்டு, டீ போட்டுக் கொண்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற பயணி ஒருவர், தனது இரண்டு சக்கர வாகனத்தை, காலை உணவுக்காக அவ்விடத்தில் நிறுத்தினார்.

Lire la suite : இது இரக்கத்தின் காலம் – மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய தானம்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org