Get Adobe Flash player

Articles

நவம்பர் 2 - மரித்தோர் நினைவு நாள்.

நன்றி : வத்திக்கான் வானொலி

கல்லறைகள் வாழ்பவர்களுக்கான படிப்பினைகளைத் தாங்கி நிற்கும் கருவறைகள். அப்படிப்பட்ட கல்லறையொன்றில் என்னைக் கவர்ந்த கவிதையைத் தருகிறேன்.

"கல்லறைக்குள் அடங்கிய உன் சுவாசம்

கருவறை வாசமாய் நினைவில் நிதம் ஆடும்.

கால உளி தந்த மனவலிகள் கண்ணீரில் கரையும் முன்

உன் நினைவு தரும் சுகங்களில் மட்டுமே

எம் குறைகள் குணம் பெறும்."

Lire la suite : இறந்தோரை மறவோம்

அனைத்துப் புனிதர்கள் திருவிழா

 
 
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.

Lire la suite : அனைத்துப் புனிதர்கள் திருவிழா

இன்றைய சிந்தனை
saints

நாமும் புனிதர்களே !

புனிதர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா? நினைவிலிருந்து சில பெயர்களைச் சொல்லச் சொன்னால், இருபது பெயர்களுக்குப் பிறகு யோசிக்கத் தொடங்கி விடுவோம். புனிதர்களின் பிரார்த்தனையில் ஏறக்குறைய 50 புனிதர்களின் பெயர்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இணைய தளத்தில் நுழைந்து பார்த்தால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புனிதர்களின் பெயர்களைப் பார்க்கலாம். இவர்களெல்லாம் திருச்சபையால் புனிதர்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்கள்தான். உண்மையில், இறைத் திருவுளத்தின்படி வாழ்ந்து, இன்று விண்ணி;ல் இறையின்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் என்னும் பார்வையில் பார்த்தால், இலட்சக்கணக்கான புனிதர்களை எண்ணலாம்

Lire la suite : இன்றைய சிந்தனை

நன்றி அருட்தந்தை கிறிஸ்து கருணாநிதி

இவ்வார வாசகங்களுக்கு அருமையான விளக்கம் அருளுகிறார்
அருட்தந்தை கிறிஸ்து கருணாநிதி 
படித்துப் பாருங்கள் ; பயன் பெறுவீர்கள்!

25 அக்டோபர் 2015: ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு

அழுகையிலிருந்து ஆறுதல் வரை

பார்வையற்றவர் பார்வை பெறுதல் என்பது விவிலியத்தைப் பொறுத்தவரையில் ஒரு
அற்புதம் என்று சொல்வதைவிட உருவகம் என்றே சொல்வேன்.பர்த்திமேயு என்பவர்
நம்பிக்கையின் உருவகமாக இன்று நம்முன் வருகிறார்.

Lire la suite : வாசகங்களின் விளக்கம் 

 

 இறுதித் தீர்ப்பு உவமை

வாஷிங்டனில் நிறுவப்பட்டுள்ள 'வீடற்ற இயேசு' உருவம் - REUTERS

29/09/2015 11:48
 உரோம் நகரில், சாந்தோ ஸ்பிரித்தோ (Santo Spirito) என்ற பெயருடன், பழம்பெரும் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. தூய ஆவியாரின் பெயரைத் தாங்கிய இந்த மருத்துவமனையின் வாசலுக்கருகே பொருள் பொதிந்த ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது. தலையில் முக்காடிட்டு, அங்குள்ள நடைபாதையில் அமர்ந்து, ஒருவர் தர்மம் கேட்பதுபோல் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தர்மம் கேட்பவரின் முகம் தெரியாதவாறு, முக்காடு மூடியுள்ளது. அமர்ந்திருப்பவரின் வலது கரம், தர்மம் கேட்கும் பாணியில் நீட்டப்பட்டுள்ளது. அந்தக் கரத்தில் ஆணியால் உருவான துளை தெரிகிறது. அதுவே, அங்கு அமர்ந்திருப்பவர் இயேசு என்பதை, அடையாளம் காட்டுகிறது.

Lire la suite : விவிலியத் தேடல்

 

 starfish

உலகின் துன்பங்களை, அநீதிகளை எவ்விதம் நீக்குவது என்ற ஆழ்ந்த சிந்தனையுடன் ஒருவர் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன் ஒரு சிறுவன், கடற்கரையில் ஒதுங்கியிருந்த 'நட்சத்திர மீன்களை' (star fish) ஒவ்வொன்றாக எடுத்து கடலில் எறிந்துகொண்டிருந்தான்.

Lire la suite : பல கோடி மீன்களா? ஒரே ஒரு மீனா?

 

கனவுப்பேட்டியில்கடவுள்என்னசொன்னார்? (வத்திக்கான்வானொலி) ஒரு  நாள் பக்தர் ஒருவர், கடவுளை அழைத்து உங்களுக்கு நேரமிருந்தால் எனக்கு ஒரு பேட்டி கொடுங்கள் என்று கேட்டார். நேரமா   என்று சிரித்துக்கொண்டே, என்ன கேட்கப்போகிறாய்? கேள் என்றார் கடவுள்.

Lire la suite : கனவுப் பேட்டியில் கடவுள் என்ன சொன்னார்?

- இயேசு கருணாநிதி
நன்றி : அருள்வாக்கு
 
 

'36 வயதினிலே' திரைப்படத்தில் தோழி கதாநாயகியிடம் சொல்வாள்: 'நாம் இவ்வளவு நாட்கள் கேள்விகளுக்கு வெறும் பதிலாக இருப்பதால்தான் நாம் இந்த நிலையில் இருக்கின்றோம். நாமே கேள்வி ஆகிவிட்டால் பின் யாரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது!'

மரியாள் இன்று கேள்வியாகவும் இருக்கின்றார். பதிலாகவும் இருக்கின்றார்!

Lire la suite : ஆரோக்கிய அன்னை

 

நன்றி : திளகMonika

நன்றி : தினகரன்

புனித மோனிக்கம்மாள் ஆபிரிக்க கார்த்தேஜ் நகரில் பிறந்தவர். கிறிஸ்தவக் குடும்பமொன்றில் பிறந்த இவர். கிறிஸ்தவ மறைக் கல்வியும் கற்றார். இருந்தும் டகாஸ்டே நகரைச் சேர்ந்த பத்ரீசியுஸ் என்னும் அவிசுவாசியை மணம் முடித்தார். பத்ரீசியுஸ் கடும் கோப குணம் படைத்தவர். அவரால் வந்த எல்லா துன்பங்களையும் இவர் பொறுமையுடன் சகித்தார். இவரது நல்வாழ்வும் அமைதியான குணமும் இவருடைய கணவர் மனம் திரும்பக் காரணமாயின. அவர் 370 ஆம் ஆண்டு மனம் திரும்பி திருமுழுக்குப் பெற்றார். அடுத்த ஆண்டே அவர் உயிர் நீத்தார்.

Lire la suite : புனித மோனிக்கம்மாள்

 

இன்று  27.08.2015 .புனித மோனிக்கம்மாள் திருநாள்
அவர் நினைவாக இக்கட்டுரையைத் தருபவர்
அருட்பணி இயேசு கருணாநிதி அடிகளார்.

 

கண்ணீரால் கடவுளை வென்றவர்! -
> Fr YESU KARUNANIDHI
> 'விழிப்பாய் இருங்கள்!' - எப்படி? திருடன் கன்னமிட்டுத் திருடாதவண்ணம்!
>
> 'ஆயத்தமாய் இருங்கள்!' - எப்படி? தலைவன் வரும்போது பணிசெய்து கொண்டிருக்கும் பணியாள் போல!
>
> இப்படி இரண்டு வார்த்தைகளால் நாளைய நற்செய்தியில் (காண். மத்தேயு 24:42-51) அறிவுரை சொல்வதற்குப் பதிலாக, 'ஒரு அம்மாவைப் போல இருங்கள்!' என்று இயேசு எளிதாகச் சொல்லியிருக்கலாம்!
>
> ஆம்! தன் பிள்ளைக்காக விழிப்பாய், ஆயத்தமாய் இருப்பவள் ஒரு தாய்மட்டுமே!
>
> நம் வாழ்க்கை என்பது பிள்ளை என்றால் நாம் அனைவரும் அன்னையர்தானே!

Lire la suite : கண்ணீரால் கடவுளை வென்றவர்!

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org