Get Adobe Flash player

Articles

 மதிப்பிற்குரிய மறுபாதி 07.10.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி

7 அக்டோபர் 2018: ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

I. தொடக்கநூல் 2:18-24 II. எபிரேயர் 2:9-11 III. மாற்கு 10:2-16

 

'தெ சிம்போசியம்' (The Symposium) என்ற தனது உரையாடலில், அரிஸ்டோஃபேனஸ் என்ற கதைமாந்தர் வழியாக, பிளேட்டோ 'உயிர்த்துணை' (soulmate) பற்றிய ஒரு கதையைப் பதிவுசெய்கின்றார். தொடக்கத்தில் மனிதர்களுக்கு நான்கு கைகள், நான்கு கால்கள், இருபக்கம் பார்க்கின்ற ஒரே தலை, மற்றும் ஆண், பெண், ஆண்-பெண் என்ற மூன்று பாலினம் இருந்ததாம்.

Lire la suite : மதிப்பிற்குரிய மறுபாதி - 07.10.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

Qui était l'Abbé Jean Baptiste Fouque?

Merci KTO

Au XIXème siècle, dans un contexte difficile pour l’Église, l’abbé Fouque a été attentif à toutes les détresses et a fondé des œuvres d’assistance, dont certaines existent encore aujourd’hui, avec une énergie impressionnante qu’il puisait dans l’Eucharistie. « Ce prêtre est un volcan » cette expression du cardinal Panafieu résume bien la personnalité de ce « saint Vincent de Paul marseillais ».

Lire la suite : Qui était l'Abbé Jean Baptiste Fouque?

கொடைகளைக் கொண்டாடுங்கள்!
தருபவர் :அருள்பணி இயேசு கருணாநிதி
30 செப்டம்பர் 2018: ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு -

I. எண்ணிக்கை 11:25-30  II. யாக்கோபு 5:1-6  III. மாற்கு 9:38-48
-
'கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்ததுபோல' என்னும் சொலவடையை நாம் கேள்விப்பட்டிருப்போம். இச்சொலவடை எப்படி உருவாகியிருக்கும்?
 

பாட்டி ஒருத்தி தன் வீட்டில் சோறு சமைக்கு முற்பட்டாள். அடுப்பு இருந்தது. பாத்திரம் இருந்தது. தண்ணீர் இருந்தது. அரிசி இருந்தது. அடுப்பு எரிக்க விறகும் இருந்தது. ஆனால், அடுப்பின் விறகைப் பற்ற வைக்கும் நெருப்புதான் இல்லை. நெருப்பு பெட்டி காலியாகிவிட்டது. இந்நேரமும் கடையும் சாத்தியிருக்கும். என்ன செய்வது என்று தெரியாத பாட்டி தன் பக்கத்து வீட்டிற்குள் சென்று நெருப்பு பெட்டி கேட்கிறாள். அந்த வீட்டின் பெண்மணியோ, 'எனக்கும் நெருப்பு பெட்டியில் ஒரு குச்சிதான் இருந்தது. ஆனால், ஒன்று செய். என் வீட்டில் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பிலிருந்து ஒரு கட்டையை எடுத்துக் கொடுக்கிறேன். நீ சென்று அதை வைத்து உன் வீட்டில் அடுப்பு பற்ற வைத்துக்கொள்.' 'சரி' என்று வாங்கிய பாட்டி 'எரிகின்ற, எரிந்து மின்னுகின்ற கொள்ளிக்கட்டையுடன் தன் வீடு நோக்கி வேகமாகச் செல்கிறாள்.

Lire la suite : கொடைகளைக் கொண்டாடுங்கள்! -30.09.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்க்ங்கள்

மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 30)
  பொதுக்காலம் இருபத்தி ஆறாம் ஞாயிறு
  இணைந்து செய்யப்படவேண்டிய இறையாட்சிப் பணி
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் இயங்கி வந்த சாரணர் இயக்க மாணவர்கள் (Scouts) பயிற்சிக்காக ஒரு கிராமத்தில் முகாமிட்டார்கள்

அந்தக் கிராமத்தில் இரயில் பாதை ஒன்று இருந்தது. ஆனால், அதில் இரயில் போக்குவரத்து நின்று பல ஆண்டுகள் ஆகியிருந்தன. இதைக் கவனித்த பள்ளியின் சாரணர் இயக்கப் பொறுப்பாளர் மாணவர்களிடம், “அன்பு மாணவச் செல்வங்களே! இன்று உங்களுடைய பயிற்சியை இந்த இரயில் பாதையில் செய்ய இருக்கிறீர்கள். யார் இந்த இரயில் பாதையில் – தண்டவாளத்தில் – நீண்டதூரம் நடந்து செல்கிறீர்கள் என்று பார்ப்போம்” என்றார்.

Lire la suite : மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 30)

23 செப்டம்பர் 2018 ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு
 
I. சாலமோனின் ஞானம் 2:12, 17-20  II. யாக்கோபு 3:16-4:3  III. மாற்கு 9:30-37
 
யார் பெரியவர்?
 
'நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல நன்மை தீமை அறிவீர்கள்' (தொநூ 3:5) என்று அலகை 'உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாயான' ஏவாளிடம் சொன்ன முதல் வார்த்தைகள், அவருடைய உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழப் பதிந்துவிட்டது. எப்படி? அலகையின் இவ்வார்த்தைகள் பெண்ணின் வயிற்றுப் பசியைத் தூண்டுவதாக இல்லை. மாறாக, அவரின் உள்ளத்து வேட்கையை, உள்ளத்து உந்துணர்வைத் தட்டி எழுப்புவதாக இருக்கிறது.

Lire la suite : யார் பெரியவர்? - 23.09.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள் 

திருச்சிலுவை மகிமை விழா
அருள்பணி மரிய அந்தோணி ராசு
பாளையங்கோட்டை

 

புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்த துறவி ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் இறந்து மேலுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். மேலுலகில் அவர் இறுதித் தீர்ப்புக்காக கடவுளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டார். அவருக்குப் பக்கத்தில் சாத்தான் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதிலிருந்து துறவி செய்த தவறுககளை (?) அடுக்கிக்கொண்டே போனது.

Lire la suite : திருச்சிலுவை மகிமை விழா

தெரிவும் அர்ப்பணமும்
அருட்பணி. இயேசு கருணாநிதி

தெரிவும் அர்ப்பணமும் - 16.09.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
16 செப்டம்பர் 2018 ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு -
I. எசாயா 50:5-9  II. யாக்கோபு 2:14-18  III. மாற்கு 8:27-35

'இரு மான்களை விரட்டுகிறவன் ஒரு மானையும் பிடியான்' என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சரியானவற்றைத் தேர்வு செய்யவும், தேர்ந்து தெரிவு செய்ததற்கு முழுமையாக நம்மை அர்ப்பணம் செய்யவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது.

Lire la suite : தெரிவும் அர்ப்பணமும் - 16.09.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

மறை உரை : எல்லாருக்கும் இரங்கும் இறைவன்
-
அருட்பணி மரிய அந்தோணிராஜ் பாளையங்கோட்டை
பொதுக்காலம் இருபத்து மூன்றாம் ஞாயிறு 

நன்றி : அருள்வாக்கு இணையதளம்

ஒரு கற்பனைக் கதை. ஒருநாள் இரவு கலிலேயாக் கடலில் மூன்று மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு கடல்மீது நடந்து சென்று, அவர்களுடைய படகருகே நின்றார். இயேசுதான் கடல்மீது நடந்து வருகின்றார் என்பதை அறிந்த அந்த மூன்று மீனவர்களும் இயேசுவைத் தங்களுடைய படகில் ஏற்றிக்கொண்டார்கள். அவர்கள் மீன்பிடித்துக்கொண்டே போகும்போது அவர்கள் இயேசுவோடு பலவற்றைக் குறித்து பேசிக்கொண்டே போனார்கள். 

Lire la suite : மறை உரை : எல்லாருக்கும் இரங்கும் இறைவன்

19 ஆகஸ்ட் 2018 ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு
வாசகங்களின் விளக்கங்கள்

அளிப்பவர் ; அருட்பணி இயேசு கருருணாநிதி; திருச்சி

 I. நீதிமொழிகள் 9:1-6  II. எபேசியர் 5:15-20III. யோவான் 6:51-58

 இந்த ஆண்டு மே 15 முதல் ஆகஸ்ட் 15 வரை அமேசான் இந்தியா இணையதளத்தின் பேனர்களை நினைவுகூர்ந்தோம் என்றால், 'ஸ்கூல் இயர் ஸேல்,' 'ரம்ஸான் ஸேல்,' 'ப்ரன்ஷிப் டே ஸேல்,' 'இன்டிபென்டஸ் டே ஸே;' என நான்கு பேனர்களுக்குள் அதன் விற்பனையை அடக்கிவிடலாம். இதற்கிடையில், 'அமேஸான் ப்ரைம் ஸேல்' என்று ஒருநாள். இது அமேசான் இணையதளத்திற்கு மட்டுமல்ல. நாம் திறக்கின்ற செய்தித்தாள்கள், பார்க்கின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.

Lire la suite : வாங்கிவிட்டீர்களா? 19.08.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

நமக்குத் தெரியாதா?

12.08.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

தருபவர் :அருட்பணி இயேசு கருணாநிதி

12 ஆகஸ்ட் 2018 ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு
I. 1 அரசர்கள் 19:4-8 / II. எபேசியர் 4:30-5:2 /
III. யோவான் 6:41-51 -

'தெரியும்' என்ற தமிழ் வார்த்தை 'நம் கண்கள் பார்ப்பதையும்,' 'நம் மனம் அறிவதையும்' குறிக்கிறது. உளவியிலில் ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ளக் கற்பிக்கும் நுணுக்கத்தில் 'ஜோஹரி ஜன்னல்' (Johari Window) என்ற ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள்.

Lire la suite : நமக்குத் தெரியாதா?  - ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள் 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org