Get Adobe Flash player

Articles

கடற்கரையில் நான் நிற்கிறேன்.
என் கண் முன் கப்பல் ஒன்று பாய்மரம் விரித்து,
தன் கடல் பயணத்தைத் துவங்குகிறது.
நேரம் செல்லச் செல்ல, அது உருவத்தில் சிறுத்து,
ஒரு சிறு புள்ளியாக மாறி, தொடுவானத்தில் மறைகிறது.
"அதோ, அவள் போய்விட்டாள்" என்று அருகிலிருந்தவர் சொல்கிறார்.
எங்கே போய்விட்டாள்?
என் பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள். அவ்வளவு தான்.
அவள் குறைந்துவிட்டாளா? அழிந்துவிட்டாளா? இல்லை.
கப்பலைப் பொருத்தவரை அவள் இக்கரையிலிருந்து கிளம்பியபோது,
எவ்வளவு பெரிதாக இருந்தாளோ, அதே அளவு தான் இன்னும் இருக்கிறாள்.
அவள் குறைந்ததுபோல், ஒரு புள்ளியாய் மாறி, மறைந்தது போல் தெரிந்ததெல்லாம்
என் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்களே தவிர,
அவளிடம் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல.

"அதோ, அவள் போய்விட்டாள்" என்று
அருகிலிருந்தவர்சோகத்துடன் சொன்ன அதே நேரம்,
வேறொரு கரையில் நிற்கும் இன்னொருவர்
அவள் வருவதைக் கண்டு ஆனந்தத்தில்
"இதோ அவள் வருகிறாள்" என்று சொல்லியிருப்பார்.
அதுதான் மரணம்.

மறை போதகரும், கவிஞருமான Henry Van Dyke சொல்லியிருக்கும் அழகான எண்ணங்கள் இவை.

நன்றி : வத்திக்கான் வானொலி

பேராசிரியர் முனைவர் பா.வளனரசு அவர்கள்
இன்றுள்ள கத்தோலிக்கத் தமிழ் அறிஞர்களுள் மூத்தவர்.
பட்டங்கள் பல பெற்றவர் ;  சிறந்த மேடைப் பேச்சாளர் ;
வீரமாமுனிவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
அவருடைய கட்டுரைத் தொடரை நம் சர்வ வியாபி வெளியிடத் தொடங்கி உள்ளது.
 இங்குள்ளவர்கள் படித்துப் பயன் பெறவேண்டும் என்ற நோக்கில்
அதன் 2 -ஆம் பகுதியை இங்கே தருகிறோம்.
சர்வ வியாபியை நன்றியுடன் நினைவு  கூருகிறோம்.

கட்டுரையைக் காண 'Lire la suite' பட்டனை அழுத்துக.

 பி.கு : கட்டுரையைப் பெரிதாக்கிப் படிக்க Ctrl ஐ அழுத்திக்கொண்டு + ஐ அழுத்துக!

Lire la suite : 'அயல்நாட்டினர் வளர்த்த அருந்தமிழ் '-பேரா. முனைவர் பா. வளனரசு பகுதி 2 

பேராசிரியர் முனைவர் பா.வளனரசு அவர்கள்
இன்றுள்ள கத்தோலிக்கத் தமிழ் அறிஞர்களுள் மூத்தவர்.
பட்டங்கள் பல பெற்றவர் ;  சிறந்த மேடைப் பேச்சாளர் ;
வீரமாமுனிவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
அவருடைய கட்டுரைத் தொடரை நம் சர்வ வியாபி வெளியிடத் தொடங்கி உள்ளது.
அதனை இங்குள்ளவர்கள் படித்துப் பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் இங்கே தருகிறோம்.
சர்வ வியாபியை நன்றியுடன் நினைவு  கூருகிறோம்.

கட்டுரையைக் காண 'Lire la suite' பட்டனை அழுத்துக.

 பி.கு : கட்டுரையைப் பெரிதாக்கிப் படிக்க Ctrl ஐ அழுத்திக்கொண்டு + ஐ அழுத்துக!

Lire la suite : 'அயல்நாட்டினர் வளர்த்த அருந்தமிழ் '-பேரா. முனைவர் பா. வளனரசு 

பெருசு

புதுவை எழில்
(உண்மைக் கதை)

 ஒரே சிரிப்பு, ஒரே கும்மாளம் - இளமைக்கே  உரிய கலகல. லீல் (Lille)  புகைவண்டி நிலையமே அதிர்ந்துகொண்டிருந்தது - அவர்கள் ஆரவாரத்தால். பரி செல்லும் வண்டியில் இடம் தேடி அலைந்துகொண்டிந்த அந்த இளைஞர்கள் பட்டாளத்தின் தலைவன் கத்தினான் : 'டேய், டேய் வாங்கடா இங்க! நெறய இடம் இருக்கு. சன்னல் ஓரமா ஒரு 'பெருச்சாளி” தாண்டா. மத்தபடி வண்டி காலி. வாங்கடா சீக்கிரமா.”
இளைஞர்கள் கூட்டமாக  ஓடி வந்து முண்டி அடித்து அந்த வண்டியில் ஏறினார்கள். குப்குப் என்று புகை விட்டபடியே ரயில் வண்டியும் புறப்பட்டது. 'பெருச்சாளி” என்று தலைவன் கேலி செய்த அவர் தாடையில் சிறு நரை ஓடிய குறுந்தாடி ; சீப்புக்கு அடங்காமல் சிலிர்த்து இருந்தது தலை முடி ; கூரான மூக்கு ; பரந்த நெற்றிக்குக்; கீழே பளபளத்த கண்களில் அலாதியான அமைதி. வண்டி புறப்பட்ட உடனே அவர் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டார். 'என்னடாஇ பொருச்சாளி கொசு ஓட்டுது” - ஓருவன் கூறக் குபீர்ச் சிரிப்பு அலை. சக பயணிகளில் ஒரு சிலர் முகஞ்சுளித்தனர். இளைஞர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. நக்கலும் கேலியும் சிரிப்புமாக அவர்கள் அரட்டை தொடர்ந்தது.

Lire la suite : செபமாலை தொடர்பான (உண்மைச்) சிறு கதை

'Maram

திருச் சிலுலையின் மகிமை விழாவை ஒட்டி அது பற்றிய 'உள்ளத்தை உருக்கும்)சிறு கதை  இது.
இந்த மரத்தைப் போல் மாறினால் அது பெற்ற பேற்றை நாமும் பெறலாம் என்ற கருத்தை விளக்கும் கதை.

இறுதியில் 'மரம்' நம்மை நோக்கிக் கேள்வி ஒன்றை வீசுகிறது.அதற்கு நம் பதில் என்ன?

இனி,  கதையைப் படியுங்கள்...

 சலனமற்று நின்றிருந்தேன் - வெறும் மரமாக! திடுமென மெல்லிய பூங்காற்று - தொலைவில் அவர் வந்துகொண்டிருந்தார்!

பட்டுப்போன என் உடம்பில் எல்லாம் ஒரே புல்லரிப்பு . குச்சிக் கைகளை ஆட்டிவாருங்கள்என்று வரவேற்றேன்.

இன்றாவது அவர் என்னைத் தொடுவாரா? மறுபடி நைப்பாசை தலைகாட்டியது.

அருகே அவர் வந்தார். மரத்துப் போன என் உடல் கூடச் சிலிர்த்தது.

வழக்கம் போல் என் முன் மண்டியிட்டு அமர்ந்தார்.

அவர் மீது என் வரி நிழலைப் பரப்பினேன். அவர் கண்கள், கனிவோடு என்னை நோக்கின.

அவர் - செபத்திலும் தியானத்திலும் ஆழ்ந்தார்.

நான் -

Lire la suite : 'மரம்'  - சிறப்புச் சிறுகதை

Fête de la Nativité de la Vierge

 

http://www.liturgiecatholique.fr/8-septembre-Fete-de-la-Nativite-de.html

Avant même la naissance de Jean le Précurseur, celle de Marie est une annonce de la Nativité de Jésus, le prélude de la Bonne Nouvelle. La venue d’une fille au foyer d’Anne et de Joachim a fait "lever sur le monde l’espérance et l’aurore du salut". C’est pourquoi l’Eglise nous invite à la célébrer dans la joie.

 

 

Lire la suite : Fête de la Nativité de la Vierge

மரியா திருச்சபையின் முன்னோடி

அருள் முனைவர் இருதயராஜ்

நன்றி : விசுவாசக் குரல் -செப் 2014

http://www.anbinmadal.org/marythesymbolofchurch.html

 

அக்காவின் திருமணத்தைக் காணும் தங்கை தனக்கும் அப்பா மிகவும் சிறப்பாகத் திருமணம் நடத்துவார் என்ற எதிர்நோக்குடன் மகிழ்கின்றார். அவ்வாறே கடவுள் மரியாவை மகிமைப்படுத்தியது போல நம்மையும் மகிமைப்படுத்துவார் என்பது முற்றிலும் உறுதி.

திருத்தூதர் பவுல் கூறுகிறார். "கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை அவர் முன் குறித்து வைத்தார். அவர் முன் குறித்தவர்களை அழைத்தார். அவர் அழைத்தவர்களை தமக்கு ஏற்புடையவராக்கினார். தமக்கு ஏற்புடையவர்களாய் செய்தவர்களைத் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார். (உரோ 8:23-30)

Mother maryகடவுள் மரியாவை மீட்பின் தாயாக முன் குறித்தார். அவரை அழைத்தார். தமக்கு ஏற்புடையவராக்கினார். தம் மாட்சிமையில் பங்கு பெறச் செய்தார். மரியாவுக்குச் செய்தவற்றைக் கடவுள் நமக்கும் செய்தார். அதே கடவுள் நம்மையும் கிறிஸ்து வழியாகத் தெரிந்து கொண்டார். கிறிஸ்துவின் சாயலுக்கு ஏற்ப உருமாற்றமும் அடையும்படி அழைக்கிறார். நம் பாவங்களை மன்னித்து நம்மை அவருக்கு ஏற்புடையவராக்குகின்றார். நமக்கும் இறைமாட்சிமையில் பங்களிக்கிறார். எனவே மரியா நமது முழுமையான மீட்பின் முழு அடையாளம்.

Lire la suite : மரியா திருச்சபையின் முன்னோடி

 மாமரியின் பதம் சேருவோம்.
திருமதி அருள்சீலி அந்தோணி-சென்னை.
நன்றி :
http://www.anbinmadal.org/sep8marianday.html


செப்டம்பர் 8ஆம் நாள் அன்னையின் பிறப்பு விழா. அன்னையின் பிறப்பு மானிடர் அனைவருக்கும் சிறப்பு! இது திருச்சபையின் மாபெரும் சிறப்பு விழா. உலகின் பிறப்புகள் அனைத்திற்கும் மீட்பின் வித்திட்டநாள்! வாழ்வின் வித்தான விந்தைகளை நன்றி விதைகளாக தரணியில் முளைத்துள்ளாய். கருவின்போதே கறையொன்றும் படியாத இறைமகளாய் அழைப்பு பெற்றவளே மாமரி. அருள் நிறைந்த மரியே! என்று அன்று வானதூதரால் வாழ்த்துப் பெற்று அழகின் முழுமையானவள்.

Lire la suite : அன்னை மரியின் பிறப்பு விழா.

Nativité de la Vierge MarieFête

 

UCCELLO_Paolo_Birth_Of_The_Virgin

Tout est miracle dans l’histoire de la Sainte Vierge ; sa naissance ne fait point exception, et, bien que pauvre aux yeux du monde, elle apparaît aux yeux de la foi entourée des plus éclatantes merveilles.

Aussi est-ce avec raison que l’église s’écrie en ce jour : « Votre naissance, ô Marie, Mère de Dieu, a rempli tout le monde de consolation et d’allégresse, parce que le soleil de justice, Jésus-Christ, notre Dieu, est né de vous, Lui qui nous a tirés de la malédiction où nous étions plongés et nous a comblés de bénédictions ; Lui, qui, ayant ruiné l’empire de la mort, nous a introduits dans la vie éternelle. » Cette fête, en effet, doit être une réjouissance universelle ; ce n’est pas un heureux présage pour une ville ou pour un peuple, mais pour l’humanité tout entière.

Lire la suite : Nativité de la Vierge Marie – Fête

வேளாங்கண்ணி ஆரோக்கிய  மாதா பேராலய வரலாறு:
நன்றி : http://ourladyofvailankanni.blogspot.fr/2014/04/blog-post.html

 

வங்கக்கடலோரம் பனை மரச்சோலையில்  அமைதியான சூழலிலே அமைந்திருப்பதுதான் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம்.அனைத்துலகு  புகழ்பெற்ற இந்த மரியன்னையின் திருத்தலம் "கீழை நாடுகளின் லூர்து நகர் "என்று பெருமையோடு அழைக்கப்படுகிறது,இத்திருத்தலம் தஞ்சை மறை மாவட்டத்தின்  கலங்கரை தீபமாக திகழ்கிறது.இந்த திருத்தலத்திற்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல,எல்லா மதங்களையும் சார்ந்த லட்சகணக்கான  மக்கள் திரண்டு வந்து,அன்னையின் அன்பைப்  பருகி செல்கிறார்கள்.அவதியுறும் மக்களை அரவணைத்து தேற்றி வரும் அத்தாயின் பரிவையும் பாசத்தையும்  அனுபவித்து மகிழ்ந்து  நெகிழ்ந்து  போகிறார்கள்.நாகரீக பழமையும் ,ஆழ்ந்த ஆன்மீகமும் நிறைந்த  இந்திய திரு நாட்டில்  அமைந்திருக்கும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம்,பண்பாட்டினாலும் ,மொழியினாலும் ,சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும்  புண்ணிய பூமியாக திகழ்ந்து வருகிறது.மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஈடு இணையற்ற சான்றாக நின்று மிளிர்கிறது வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம்.

Lire la suite : வேளாங்கண்ணி ஆரோக்கிய  மாதா பேராலய வரலாறு:

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org