Get Adobe Flash player

Articles

அறியாமையிலிருந்து விடுதலை
மறையுரை தருபவர் :அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி.

27 ஜனவரி 2019 ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு
I. நெகேமியா 8:2-4,5-6,8-10  II. 1 கொரிந்தியர் 12:12-30  III. லூக்கா 1:1-4, 4:14-21 - இம்முறையும் பரிச்சயமான ஒரு கதையுடன் தொடங்குவோம். ஜென் துறவி கிம்கானிடம் ஒரு இளைஞன் வருகிறான். 'சுவாமி! எனக்கு வாழ்க்கை ரொம்பக்கஷ்டமாக இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்து இருப்பது போல இருக்கிறது. யாரும் என்னைக் கண்டுகொள்வதில்லை. யாரைப் பார்த்தாலும் எனக்குப் பயமாக இருக்கிறது' என்று புலம்புகிறான்.

Lire la suite : அறியாமையிலிருந்து விடுதலை

மறை உரை : துணிவுள்ள இறைவாக்கினர்களாவோம்
அருள்பணி மரிய அந்தோணிராஜ் (அருள்வாக்கு)

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
-
(நெகேமியா 8:2-4,5-6,8-10; 1கொரிந்தியர் 12: 12-30; லூக்கா 1:1-4, 4:14-21)


விவேகானந்தர் அமெரிக்கா சென்றிருந்த தருணம், அங்கிருந்த பல இடங்களுக்குச் சென்று அவர் சொற்பொழிவு ஆற்றிவந்தார். அவ்வாறு அவர் சென்ற இடங்களிலெல்லாம், ‘இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும், அப்படி வாழ்கின்றபோது எதைக் குறித்தும் பயப்படத் தேவை யில்லை’ எனப் பேசிவந்தார்.  இதை நுட்பமாகக் கவனித்துவந்த ஒருசில இளைஞர்கள், ‘இந்த மனிதர் செல்லும் இடங்களிலெல்லாம் இறைவன் மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும், துணிவோடு இருக்கவேண்டும் என்று போதித்துக்கொண்டு வருகிறாரே, உண்மையில் இவர் துணிவுள்ள மனிதர்தானா? என்பதை சோதித்துப் பார்ப்போம்’ என்று அதற்கான வேலைகளில் அவர்கள் இறங்கினார்கள். 

Lire la suite : மறை உரை : துணிவுள்ள இறைவாக்கினர்களாவோம் 

13 ஜனவரி 2019 ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா

ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள் வழங்குபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி

 I. எசாயா 40:1-5,9-11 II. தீத்து 2:11-14, 3:4-7 III. லூக்கா 3:15-16,21-22

கரை சேர்க்கும், கரை சேரும் கடவுள்

ரொம்ப பரிச்சியமான ஒரு கதைதான். ஆனால், இன்றைய நாளுக்கு இது பொருந்துவதாக இருப்பதால், அக்கதையுடன் நம் சிந்தனையைத் தொடங்குவோம். ஒரு ஊரில் இருந்த 3 பேர் ஒரு நாள் மாலையில் குடிப்பதற்காக ஆற்றின் அக்கரையிலுள்ள ஓர் ஊருக்குச் செல்கின்றார்கள். பரிசல் ஒன்றை எடுத்து இவர்களே ஓட்டிக்கொண்டு போய் அக்கரையை அடைந்து வெகு நேரம் குடிக்கிறார்கள். நன்றாக இருட்டிவிட, அவர்கள் வீடு திரும்புவதற்காகத் தாங்கள் வந்த பரிசலில் மீண்டும் ஏறி ஊர் திரும்பும் முகத்தான் துடுப்புப் போடுகின்றனர். துடுப்புப் போட்டுக்கொண்டே இருக்க விடிந்து விடிகின்றது. ஆனால், அவர்கள் அக்கரையிலேயே இருக்கின்றனர். போதை தெளிந்த அவர்கள் சற்றே திரும்பிப் பார்க்கிறார்கள். மது மயக்கத்தில் தாங்கள் ஏறி அமர்ந்த பரிசலைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்காமலேயே விடிய விடிய தங்கள் ஆற்றலை வீணாக்கியிருப்பதை நினைத்து வருந்துகிறார்கள்.

Lire la suite : 13 ஜனவரி 2019 ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா

ஜீசஸ் வந்திருக்கார்  -  சிறு தொடர்கதை - பகுதி 1
டாக்டர் ஜான் பெனோ , சென்னை
(

கதை ஆசிரிய ர் டாக்டர் ஜான் பெனோவைப்  பற்றி :
சென்னை இராயபுரத்தில் உள்ள புகழ் பெற்ற  எம் வி நீரிழிவு மருத்துவ மனையில் தலைமைக் கண் மருத்துவராகப் பல்லாண்டு பணியாற்றியவர். பின்னர் பெரம்பூர் அருகே இருக்கும் கொளத்தூரில்,  'அன்னை கிளினிக்' என்ற பெயரில் கண் மருத்துவ மனை நடத்தி வருகிறார்.பரம்பரைக் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த இவர் ஏழை எளியவர்களுக்கு மிக்க குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவச்  சேவை செய்பவர் ; கத்தோலிக்கக் கன்னியர், குருக்கள், ஆயர்கள், பேராயர்களிடம்  பணம் வாங்குவது இல்லை என்பது இவர் வைத்திருக்கும் கொள்கை. சிறந்த நகைச்சுவை உணர்வும், எழுத்தாற்றலும் பேச்சாற்றலும்  கொண்டவர்.
 

“கம் லார்ட் ஜீசஸ்!” சோம்பல் முறித்தவாறு எழுந்திருக்கும்போதே, பிள்ளைகள் சத்தம் காதைக் கிழித்தது. “அப்பா! ஜீசஸ் வந்திருக்கார்! ஜீசஸ் வந்திருக்கார்!” என்று என் குட்டிப்பெண்ணும் பையனும் கையைப் பிடித்து இழுத்து ஹாலுக்குக் கூட்டி வந்தார்கள்.

Lire la suite : ஜீசஸ் வந்திருக்கார் (I) - டாக்டர் ஜான் பெனோ , சென்னை 

மறை உரை : எல்லாருக்குமான இறைவன்

அருள்பணி மரிய அந்தோணிராஜ் 

(அருள்வாக்கு
திருக்காட்சிப் பெருவிழா - (எசாயா  60: 1-6; எபேசியர் 3: 2-3, 5-6, மத் 2: 1-12)  

நிகழ்வு -  டோனி டி மெல்லோவின் கதை இது. ஓர் ஊரில் இறையடியார் ஒருவர் இருந்தார். அவர் இறைவனைத் தொழாத நாளில்லை. அப்படிப்பட்டவர் ஒருநாள் இறைவனிடம் மிக உருக்கமாக வேண்டிக்கொண்டிருக்கும்போது, இறைவன் அவருக்கு முன்பாகத் தோன்றினார். இறைவனின் தரிசனத்தை சிறிதும் எதிர்பார்த்திராத இறையடியார், அவருக்கு முன்பாக சாஷ்டாங் கமாக விழுந்து வணங்கினார்.  பின்னர் அவர் இறைவனைப் பார்த்து, “இறைவா! உன் கருணையோ கருணை. எளியவன் என்னைப் பார்க்க வந்திருக்கின்றாயே... சொல்லும் உமக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்கிறேன்” என்றார்.

Lire la suite : மறை உரை : எல்லாருக்குமான இறைவன்

01 ஜனவரி 2019 புத்தாண்டு நாள் - அன்னை மரியாள் இறைவனின் தாய்
 தாய்மையோடு புத்தாண்டில்
வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி
 
கிரகோரியன் காலண்டரின் படி இன்று ஆண்டின் முதல் நாள். கிரேக்க கடவுள் JJanus போல இரண்டு தலை கொண்டவர்களாக - பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக  இன்றைய நாளில் நிற்கின்றோம். ஆக, (1) இன்று புத்தாண்டுப் பெருநாள். (2) இந்த ஆண்டின் தலைநாளான இன்று திருஅவை மரியாளை இறைவனின் தாயாக (2) கொண்டாடுகிறது. மேலும், (3) இந்த நாள் தான் 'இயேசுவுக்கு' பெயர் சூட்டப்பட்ட நாள். (4) இந்த நாள் தான் கிறிஸ்துபிறப்பின் எட்டாம் திருநாள். ஆக, இது கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருவிழா. இவ்வாறாக, நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறும் இந்நாளில், 'தாய்மையோடு புத்தாண்டில்' என்ற தலைப்பில் உங்களோடு சிந்திக்க விழைகின்றேன்.
 

Lire la suite : 01 ஜனவரி 2019 புத்தாண்டு நாள் - அன்னை மரியாள் இறைவனின் தாய்   தாய்மையோடு புத்தாண்டில்

கலங்காத மகிழ்ச்சி - 16.12.2018
திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் ; இயேசு கருணாநிதி திருச்சி
 
 
 I. செப்பனியா 3:14-17  II. பிலிப்பியர் 4:4-7   III. லூக்கா 3:10-18

 மகிழ்ச்சியின் எதிரி என்ன?
 
மகிழ்ச்சி ஒரு அமைதியான குளம் என வைத்துக்கொள்வோம். அந்த அமைதியான குளத்தின் நடுவில் விழும் ஒரு சிறிய கூழாங்கல் குளத்தில் கலங்கலை ஏற்படுத்திவிடுகிறது. அக்கல் விழுந்த இடத்தில் உருவாகும் சிற்றலை விரிந்து விரிந்து குளத்தின் கரையை மோதும்போது அங்கிருக்கும் கரையும் கலங்குகிறது. கலக்கம் குளத்தின் அமைதியைக் கெடுக்கிறது. நம் வாழ்விலும் கலக்கங்களே அமைதியைக் குலைக்கின்றன. ஒரு சொல்லாக, சிந்தனையாக, செயலாக விழும் கூழாங்கல் நம் மூளை, மனம், உடல் என அனைத்திலும் ஒரு சிறு அசைவையாவது ஏற்படுத்திவிடுகிறது. கூழாங்கல் ஏற்படுத்தும் கலக்கம் குளத்தின் மேற்பரப்பில் மட்டுமல்லாமல், குளத்தின் அடியில் சென்று தேங்கியிருக்கும் களிமண்ணையும் கலக்கிவிடுவது போல, கலங்கிய மூளை, மனம், உடல் சேமித்து வைத்த பழைய அழுக்குகளையும் கீறி விடுகிறது.

Lire la suite : கலங்காத மகிழ்ச்சி - 16.12.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

9 டிசம்பர் 2018: திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு
 வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
 
I. பாரூக்கு 5:1-9  II. பிலிப்பியர் 1:4-6,8-11  III. லூக்கா 3:1-6
 
புதிய பாதை
 
மதுவுக்கு அடிமையாகிக் கிடந்து, பின் ஒருநாள், 'இனி நான் குடிப்பதே இல்லை' என்ற முடிவெடுத்து, மதுவிலிருந்து விலகி நிற்கும் ஒரு இனியவரைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. 'ஃபாதர் நான் இன்னைக்கு ஒரு டிரைவரா இருக்கேன். கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் இப்படி இல்லை. ஒருமுறை இரவு ஊருக்குத் திரும்புமுன் பேருந்தில் ஏறுவதற்கு முன் நன்றாகக் குடித்தேன். கடையிலிருந்து பேருந்து நிலையம் தூரத்தில் தெரிந்தது. சீக்கிரம் போய் பேருந்து ஏற வேண்டும் என்று என் மனம் சொன்னாலும், கொஞ்ச நேரத்தில் என் கால்கள் தடுமாறுவதுபோல உணர்ந்தேன். ஒரே மயக்கமாக இருந்தது. அப்படியே விழுந்துவிட்டேன். நான் இறந்துவிட்டதாகவே நினைத்தேன். காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது மருத்துவமனையில் ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். நான் எப்படி இங்கே வந்தேன் என்று விசாரித்தேன். இரவில் ஒருவர் இங்கே கொண்டுவந்து சேர்த்ததாகச் சொன்னார்கள். கடவுளே எனக்கு இன்றைய இரண்டாம் வாழ்வைக் கொடுத்தார் என எண்ணினேன். அன்று குடியை நிறுத்தினேன்.' எல்லாம் முடிந்தது என்று நினைத்த அந்த நொடியில் ஒரு கனவுபோல எல்லாமே அவர் வாழ்வில் மாறிவிட்டது. போதையின் பாதை புதிய பாதையாக மாறியது.

Lire la suite : புதிய பாதை -09.12.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

இன்றைய (3 டிசம்பர் 2018) திருநாள் புனித சவேரியார்
அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி
 
தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் 'பெரிய தகப்பன்' என்று அன்போடு அறியப்படும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளை நாம் இங்கு கொண்டாடுகிறோம். ஏப்ரல் 7, 1506ல் ஸ்பெயின் நாட்டில் பிறந்து, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணிபுரிந்தபோது, புனித இஞ்ஞாசியார் மேற்கோள் காட்டிய நற்செய்தி வார்த்தைகளை - 'ஒருவர் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் அவர் தன் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன? - கேட்டு, மனம் மாறி, தன் பணியைத் துறந்துவிட்டு, இயேசு சபையின் அருள்பணியாளராக மாறி, ஆப்பிரிக்கா, ஆசியா கடற்கரைகளில் நற்செய்திப் பணி செய்து டிசம்பர் 3, 1552 அன்று இறந்தார்.

Lire la suite : இன்றைய (3 டிசம்பர் 2018) திருநாள் - புனித சவேரியார்

உம்மை நோக்கியே உள்ளம்
02 டிசம்பர் 2018: திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 
வாசகங்களின் விளக்கங்கள்.

அருளுபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, தூய பவுல் குருத்துவக் கல்லூரி திருச்சி -1,

I. எரேமியா 33:14-16  II. 1 தெசலோனிக்கர் 3:12-4:2  III. லூக்கா 21:25-28,34-36

கார்த்திகை மாதம் பாதி கடக்குமுன்னே மார்கழிக் குளிர் நம் உடலைத் தழுவ ஆரம்பித்துவிட்டது. குளிர்காலத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இலைகளை உதிர்த்து குளிரை எதிர்கொள்ள வேண்டிய மரங்கள், இலைகளை உதிர்க்கவா, தளிர்களைத் துளிர்க்கவா என்று குழம்பிக் கொண்டிருக்கின்றன.

Lire la suite : உம்மை நோக்கியே உள்ளம்  - 02.12.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள் 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org