Get Adobe Flash player

Articles

Fete de defunt

 

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் (All Souls' Day அல்லது The Commemoration of All the Faithful Departed) என்பது, சில கிறித்தவ சபைகள் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு விழா ஆகும். இதனைக் கல்லறைத் திருநாள் எனவும் அழைப்பர். கத்தோலிக்க திருச்சபை உட்பட பல கிறித்தவ சபைகள் இவ்விழாவை நவம்பர் மாதம் இரண்டாம் நாள் கொண்டாடுகின்றன.

Lire la suite...

தன்னலமே அன்பாய்!

29.10.2017 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் ; அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை.

கொரிந்து நகர திருச்சபைக்கு தான் எழுதும் முதல் கடிதத்தில் அன்பிற்குப் பாடல் இசைக்கும் தூய பவுல், அன்பின் ஒரு பண்பாய், 'அன்பு தன்னலம் நாடாது' (13:5) என்கிறார். ஆனால், 'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக!' மற்றும் 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் இயேசுவின் வார்த்தைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் முரண்பட்டு நிற்கின்றன. எப்படி?

Lire la suite...

கடவுளுக்கு உரியதும், உரியவர்களும்
ஞாயிறு வாசகங்ஙகளின் விளக்கங்கள்

தருபவர் : அருள்பணி  இயேசு கருணாநிதி

 

மனிதர்களுக்கு அதிகமாக பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துவதில் மூன்றாவது இடம் வகிப்பது கேடராக்ட் எனப்படும் கண்புரை நோய்;. முதல் இரண்டு இடங்களை சமயமும், அரசியலும் பிடித்துள்ளன.'

 

Lire la suite...

எல்லாம் தயாராய் உள்ளது! - ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் ; அருள்பணி இயேசு கருணாநிதி,  மதுரை

மேற்கத்திய நாடுகளில் உள்ள உணவகங்களுக்கு அல்லது நம் நகரங்களில் உள்ள நட்சத்திர அந்தஸ்து உணவகங்களுக்குள் செல்லும்போது, யாரும் உள்ளே இல்லை என்றாலும், நாம்தான் முதல் விருந்தினர்கள் என்றாலும், எல்லா மேசைகளிலும் நேர்த்தியாக விரிக்கப்பட்ட மேசைவிரிப்பு, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நாப்கின், ஸ்பூன், ஃபோக், கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி டம்ளர் ஆகிய அனைத்தும் நம்மிடம் ஏதோ பேசுவதுபோல இருக்கும். 'வா...என்னருகில் வா...இது எல்லாம் உனக்குத்தான்!' என்று தன்னையே விரித்துக்கொடுப்பது போல இருக்கும்.

 

Lire la suite...

C'est avec un grand plaisir que je voudrais partager un petit bouquin titulé
'Maximin et Mélanie - Les Bergers de La Salette'
par le père Jean Stern,
l'archiviste de la maison généralise des Missionaires de La Salette à Rome.
Un grand merci à mes amis Arpoudaradjou et son épouse Marthe
qui m'ont fait cadeau de ce livre magnifique.

Merci également à l'Association des pèlerins de la Salette, 38970 Corps.
Benjamin LE BEAU

Pour lire ce livre appuyez ICI

P.S : Télécharger le fichier et en utilisant l' Adobe Acrobat Reader DC faire tourner la page.

ஞாயிறு மறை உரை :
ஆண்டவரைத் தேடுங்கள், வாழ்வடைவீர்கள்
அருட்பணி மரிய அந்தோணி ராஜ்
(அக்டோபர் 15) பொதுக்காலம் இருபத்தி எட்டாம் ஞாயிறு
நன்றி / அருள்வாக்கு இணையதளம்

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த அந்த இரயிலில் டிக்கெட் பரிசோதகர் திடிரென வந்து, ஒவ்வொருவரிடமும் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தார். அப்போது ஒரு மூலையில் பழைய கோட் ஒன்று கிடந்தது. அவர் அதை எடுத்து, உள்ளே கையைவிட்டு யாருடையது துலாவிப் பார்த்தபோது அதில் முகவரி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அதில் நிறையப் பணமும் ஒரு இயேசுவின் படமும் இருந்தன. 

Lire la suite...

புனித செபமாலை அன்னை  திருவிழா 07.10.17
நன்றி : தமிழ் விக்கிபீடியா
OL Rosary

தூய செபமாலை அன்னை (Our Lady of the Rosary) என்ற பெயர், கத்தோலிக்க திருச்சபையின் பக்தி முயற்சிகளில் ஒன்றாகிய செபமாலையின் தாய் என்ற அடிப்படையில் அன்னை மரியாவுக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.

செபமாலை அன்னையின் திருவிழா அக்டோபர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Lire la suite...

தமக்குச் சேர வேண்டிய பழங்கள்!
8 அக்டோபர் 2017 ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

வாசகங்களின் விளக்கங்கள்

                         அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி


Vine yard 01
கடந்த மூன்று வாரங்களாக திராட்;சைத் தோட்டத்தை மையமாக வைத்தே இருக்கின்றன ஞாயிறு நற்செய்தி வாசகங்கள். மத்தேயு 20 மற்றும் 21ஆம் பிரிவுகளில் நாம் மூன்று திராட்சைத் தோட்ட எடுத்துக்காட்டுக்களைப் பார்க்கிறோம்:

Lire la suite...

திராட்சைச் செடி:

அருட்பணி. மி.ஜெகன்குமார் அமதி
நன்றி : தமிழ் ஆன:மீகப் பணியகம் யேர்மணிதெற்கு சிரியா மற்றும் வடக்கு இஸ்ராயேல் பகுதிகளில் திராட்சை பயிற்ச்செய்கை செப்புக்காலத்திலிருந்து நடந்திருப்பதாக தொல்பொருளியல் வரலாறுகள் காட்டுகின்றன. அதாவது இது கி.மு. 4000-3500 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்கிறது. மத்திய தரை பிரதேசத்தின் கிழக்கு பகுதிகளின் நில அமைவும், மண்ணும், காலநிலையும், திராட்சை பயிர்ச்செய்கைக்கு சாதகமாக இருந்திருக்கின்றன. மத்தியதரைக் கடல் பிரதேசத்தின் மேற்பகுதியில் இரண்டு வகையான திராட்சைகள் வளர்ச்சியில் இருந்திருக்கின்றன, அவை: விட்டிஸ் சில்வெஸ்ரிஸ் (Vitis silvestris),

Lire la suite...

29 septembre
Merci:

Croire.com

Qui sont les saints archanges?

annonciation

Les archanges, nous dit Saint Grégoire, sont plus que des anges "ils annoncent les plus grands mystères". En effet chacun de ces trois archanges a eu une mission tout a fait extraordinaire.

Gabriel : "Dieu s'est montré fort"

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org