Get Adobe Flash player

Articles

அவரும், அவர்களும்! 24.09.17 -ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை

'அறிவோடு இருப்பதை விட அதிர்ஷ்டத்தோடு இருப்பது நன்று!' - இப்படி ஒரு குறுஞ்செய்தி நேற்று என் மொபைலுக்கு வந்தது. கொஞ்ச நாள்களாக நடக்கும் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த குறுஞ்செய்தி உண்மை எனவும் தோன்றுகிறது. இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 20:1-16) பின்புலத்தில் பார்க்கும்போது இதைக் கொஞ்சம் மாற்றிப் புரிந்துகொள்ளலாம்: 'உழைப்போடு இருப்பதை விட அதிர்ஷ்டத்தோடு இருப்பது நன்று!'

Lire la suite...

மன்னிக்கும் மனம்

ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை
Forgive

டெகார்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளரின், 'கோஜிட்டோ எர்கோ சும்' என்ற சொல்லாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. மறுமலர்ச்சி காலம் தொடங்கியபொழுது, 'நான் சிந்திக்கிறேன். எனவே நான்' என்று பொருள்கொள்ளும் இந்தச் சொல்லாடல் மெய்யியலின் போக்கையே மாற்றிப்போட்டது.

 

Lire la suite...

மனம் ஒத்திருத்தல் - கடமைகளும், உரிமைகளும், தடைகளும்
ஞாயுிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி மதுரை

சாலையில் செல்லும் ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை வாசிப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகை என்பது போல ஒவ்வொரு ஆட்டோவும் ஒரு வகை. எந்த இரண்டு ஆட்டோக்களும் ஒன்று போல இருக்க நான் பார்த்ததே இல்லை. ஆட்டோ வாசகங்களில் சில 'பெண்களின் திருமண வயது 21' என்று நாட்டின் நடைமுறையைச் சொல்வது போலவும், சில 'பிரசவத்திற்கு இலவசம்' என தன் விளம்பரம் செய்வது போலவும் இருக்கும். அண்மையில் என்னை ஒரு வாசகம் மிகவும் கவர்ந்தது. 

Lire la suite...

                                       தூய கன்னி மரியாவின் பிறப்பு
   https://www.facebook.com/Christian.Gate
Mary b day 03
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்று பாடுகிறாள் தமிழ்க் கவிஞன். “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன் நீ பிறக்கும் முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன் (எரே 1:5) என்று இறைவன் கருவிலேயே ஒவ்வொரு குழந்தையையும் திரு நிலைப்படுத்தி அருளுக்குரிய குழந்தையாக ஆக்கு நின்றார். அன்னை மரியாள் கருவாகி உருவான போதே இறைவன் அவருக்குத் தனது அருளை நிறைவாக வழங்கினார்.

Lire la suite...

உம்மீது கொள்ளும் அன்பால்! - ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை

போனவாரம் பூசைக்கு வந்துட்டு இந்த வாரமும் பூசைக்கு வந்தவங்க இன்றைய நற்செய்தியைக் கேட்டா ரொம்பவே ஷாக் ஆயிடுவாங்க. பேதுருவைப் பார்த்து போன வாரம், 'ஐயா, மகனே, ராசா, நீ பெரிய ஆளுப்பா, உன் மைன்ட் மனித மைன்ட் அல்ல, கடவுளோட மைன்ட்' என புகழாரம் சூட்டிய இயேசு, 'அப்பாலே போ சாத்தானே' என இரட்டைச் சொற்களில் (கிரேக்கத்தில்) முடித்துவிடுகிறார். 

Lire la suite...

27.08.17 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை.
Jesus 09

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஆனந்தவிகடனில் 'வலைபாயுதே' என்ற பக்கத்தில் இரசம் பற்றிய ஒரு துணுக்கு இருந்தது: 'நம் தட்டுக்களை எளிதாக கழுவுவதற்கு உதவியாக ஏதோ ஒரு தமிழ்ப்பெண் கண்டுபிடித்த கண்டுபிடிப்பே இரசம்.' அதாவது, இரசம் ஊற்றி சாப்பிட்ட தட்டைக் கழுவுவது எளிதாக இருக்கும். இதே இரசம் பற்றிய மற்றொரு பதிவில், 'இரசம் என்பது சாமானியர்களின் மதுபானம்' என எழுதியிருந்தது. தண்ணீர், மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, உப்பு என சேர்த்து நல்ல கொதிநிலையில் இறக்கி வைக்கும் இரசம் ஒன்றுதான். ஆனால், அதைக் குடிக்கும் அல்லது அதோடு உண்ணும் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக பார்க்கின்றோம்.

Lire la suite...

பிள்ளைகளும், நாய்க்குட்டிகளும்!

20.08.17 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி மதுரை

Jesus 08

'ஹோம் ஒர்க் செய்ய, காய்கறி நறுக்க, பால்கனியில் அமர்ந்து பேப்பர் பார்க்க, லேப்டாப் வச்சி வேலை பார்க்க, வயசானவங்க டிவி பார்த்துகிட்டே டிஃபன் சாப்பிட, 3 ஆங்கிள், 6 உயரம் என மொத்தம் 18 வகையாக பயன்படும் டேபிள் மேட் அவங்க வீட்டுல இருக்க, இவங்க வீட்டுல இருக்கு, உங்க வீட்டுல இருக்கா?' என்ற விளம்பரத்தை நாம் பார்த்திருப்போம்.

Lire la suite...

Fête de l'Assomption : quand Marie ouvre la voie du ciel
Merci :la vie
St Mary 04

Le 15 août, les catholiques fêtent l’Assomption. Que célèbrent-ils ce jour-là ? Les derniers instants de Marie sur Terre alors « élevée corps et âme à la gloire du ciel », selon le dogme défini en 1950. Alors que l’âme des autres humains se détacherait du corps pour rejoindre Dieu en attendant la résurrection de la chair. Auteur de Voici ta mère. Marie au cœur de notre foi (NDL éditions), le père André Cabes lève un coin du voile sur ce mystère.

Lire la suite...

தூய மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா 15 08 2017

பார் போற்றும் பரமனை பாவக்கறையில்லாமல் ஈந்த மரியன்னையின் விண்ணேற்புப் பெருநாளில், பாரதம் சுதந்திரம் பெற்ற நாளை நினைந்து, நன்றி கூற வந்துள்ள உங்கள் அனைவரையும் இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றோம்.

Lire la suite...

மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 15)

மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா
நன்றி : அருள்வாக்கு.காம்
St Mary 03

பிரபல பிரஞ்சு எழுத்தாளரான விக்டர் பூகோ என்பவர் சொல்லும் நிகழ்ச்சி இது.

1700 களின் தொடக்கத்தில் பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். ஒரு தாயானவள் தன்னுடைய இரண்டு மகன்களோடு வீட்டிலிருந்து வெளியே தப்பித்து ஓடினாள். கலகக்காரர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவள் ஒரு அடர்ந்த காடு வழியாகப் பயணமானாள். இரண்டு மூன்று நாட்களாக உணவு எதுவுமே சாப்பிடக் கிடைக்காததால் அவளும், அவளுடைய இரண்டு மகன்களும் உடல் தளர்ந்து காணப்பட்டார்கள்.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org