Get Adobe Flash player

Articles

23 செப்டம்பர் 2018 ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு
 
I. சாலமோனின் ஞானம் 2:12, 17-20  II. யாக்கோபு 3:16-4:3  III. மாற்கு 9:30-37
 
யார் பெரியவர்?
 
'நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல நன்மை தீமை அறிவீர்கள்' (தொநூ 3:5) என்று அலகை 'உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாயான' ஏவாளிடம் சொன்ன முதல் வார்த்தைகள், அவருடைய உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழப் பதிந்துவிட்டது. எப்படி? அலகையின் இவ்வார்த்தைகள் பெண்ணின் வயிற்றுப் பசியைத் தூண்டுவதாக இல்லை. மாறாக, அவரின் உள்ளத்து வேட்கையை, உள்ளத்து உந்துணர்வைத் தட்டி எழுப்புவதாக இருக்கிறது.

Lire la suite : யார் பெரியவர்? - 23.09.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள் 

திருச்சிலுவை மகிமை விழா
அருள்பணி மரிய அந்தோணி ராசு
பாளையங்கோட்டை

 

புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்த துறவி ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் இறந்து மேலுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். மேலுலகில் அவர் இறுதித் தீர்ப்புக்காக கடவுளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டார். அவருக்குப் பக்கத்தில் சாத்தான் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதிலிருந்து துறவி செய்த தவறுககளை (?) அடுக்கிக்கொண்டே போனது.

Lire la suite : திருச்சிலுவை மகிமை விழா

தெரிவும் அர்ப்பணமும்
அருட்பணி. இயேசு கருணாநிதி

தெரிவும் அர்ப்பணமும் - 16.09.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
16 செப்டம்பர் 2018 ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு -
I. எசாயா 50:5-9  II. யாக்கோபு 2:14-18  III. மாற்கு 8:27-35

'இரு மான்களை விரட்டுகிறவன் ஒரு மானையும் பிடியான்' என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சரியானவற்றைத் தேர்வு செய்யவும், தேர்ந்து தெரிவு செய்ததற்கு முழுமையாக நம்மை அர்ப்பணம் செய்யவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது.

Lire la suite : தெரிவும் அர்ப்பணமும் - 16.09.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

மறை உரை : எல்லாருக்கும் இரங்கும் இறைவன்
-
அருட்பணி மரிய அந்தோணிராஜ் பாளையங்கோட்டை
பொதுக்காலம் இருபத்து மூன்றாம் ஞாயிறு 

நன்றி : அருள்வாக்கு இணையதளம்

ஒரு கற்பனைக் கதை. ஒருநாள் இரவு கலிலேயாக் கடலில் மூன்று மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு கடல்மீது நடந்து சென்று, அவர்களுடைய படகருகே நின்றார். இயேசுதான் கடல்மீது நடந்து வருகின்றார் என்பதை அறிந்த அந்த மூன்று மீனவர்களும் இயேசுவைத் தங்களுடைய படகில் ஏற்றிக்கொண்டார்கள். அவர்கள் மீன்பிடித்துக்கொண்டே போகும்போது அவர்கள் இயேசுவோடு பலவற்றைக் குறித்து பேசிக்கொண்டே போனார்கள். 

Lire la suite : மறை உரை : எல்லாருக்கும் இரங்கும் இறைவன்

19 ஆகஸ்ட் 2018 ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு
வாசகங்களின் விளக்கங்கள்

அளிப்பவர் ; அருட்பணி இயேசு கருருணாநிதி; திருச்சி

 I. நீதிமொழிகள் 9:1-6  II. எபேசியர் 5:15-20III. யோவான் 6:51-58

 இந்த ஆண்டு மே 15 முதல் ஆகஸ்ட் 15 வரை அமேசான் இந்தியா இணையதளத்தின் பேனர்களை நினைவுகூர்ந்தோம் என்றால், 'ஸ்கூல் இயர் ஸேல்,' 'ரம்ஸான் ஸேல்,' 'ப்ரன்ஷிப் டே ஸேல்,' 'இன்டிபென்டஸ் டே ஸே;' என நான்கு பேனர்களுக்குள் அதன் விற்பனையை அடக்கிவிடலாம். இதற்கிடையில், 'அமேஸான் ப்ரைம் ஸேல்' என்று ஒருநாள். இது அமேசான் இணையதளத்திற்கு மட்டுமல்ல. நாம் திறக்கின்ற செய்தித்தாள்கள், பார்க்கின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.

Lire la suite : வாங்கிவிட்டீர்களா? 19.08.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

நமக்குத் தெரியாதா?

12.08.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

தருபவர் :அருட்பணி இயேசு கருணாநிதி

12 ஆகஸ்ட் 2018 ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு
I. 1 அரசர்கள் 19:4-8 / II. எபேசியர் 4:30-5:2 /
III. யோவான் 6:41-51 -

'தெரியும்' என்ற தமிழ் வார்த்தை 'நம் கண்கள் பார்ப்பதையும்,' 'நம் மனம் அறிவதையும்' குறிக்கிறது. உளவியிலில் ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ளக் கற்பிக்கும் நுணுக்கத்தில் 'ஜோஹரி ஜன்னல்' (Johari Window) என்ற ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள்.

Lire la suite : நமக்குத் தெரியாதா?  - ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள் 

உங்கள் மனப்பாங்கு

ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி


5 ஆகஸ்ட் 2018 ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு

 I. விடுதலைப் பயணம் 16:2-4,12-15

II. எபேசியர் 4:17,20-24

III. யோவான் 6:24-35

 விவிலியத்தில் இயேசு கையாளும் ஓர் உருவகத்தோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம். விண்ணரசு பற்றிய பல உவமைகளைத் தன் சீடர்களுக்கு எடுத்துச் சொல்லும், விளக்கும் இயேசு, இறுதியாக, 'இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?' என்று கேட்க, அவர்களும், 'ஆம்,' என்கின்றனர். அந்நேரம் அவர், 'விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட அனைவரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளர்போல இருக்கின்றனர்' என்கிறார்.

Lire la suite : உங்கள் மனப்பாங்கு

எல்லார்க்குள்ளும், எல்லார் வழியாகவும் இறைவன்

ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி

29 ஜூலை 2018 ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

 I. 2 அரசர்கள் 4:42-44 II. எபேசியர் 4:1-6III. யோவான் 6:1-15

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து இப்போதுதான் சூடு ஆறியுள்ளது. போட்டிகள் நடந்து முடிந்த இரண்டு நாள்களில் தினமணி இணையதள வலைப்பூவில் கட்டுரை ஒன்று வந்தது. கட்டுரையின் தலைப்பு, 'வாய்ப்பு நம்மைத் தவறவிட்டால் அது துரதிர்ஷ்டம். வாய்ப்பை நாம் தவறவிட்டால் ... திமிர்.' கட்டுரை குரோஷிய அணியின் முன்னணி வீரர் நிக்கோலா காலிநிக் அவர்களைப் பற்றியது. இவர் குரோஷிய அணியின் மிகச் சிறந்த வீரர். குரோஷிய அணி தனது முதல் ஆட்டத்தில் நைஜீரிய அணியை சந்தித்தது. அந்த ஆட்டத்தில் நிக்கோலா காலிநிக் முதலில் களமிறக்கப்படவில்லை. ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்களே இருக்கும்போது, குரோஷிய பயிற்சியாளர் நிக்கோலா காலிநிக்கை மாற்று வீரராக களமிறங்கும்படி கேட்டுக்கொண்டார். முதலிலிலேயே தன்னை களமிறக்காமல்போனது தனக்கு நேர்ந்த அவமானமாக நினைத்தார் காலிநிக். அதனால் களமிறங்க மறுத்துவிட்டார்.

Lire la suite : எல்லார்க்குள்ளும், எல்லார் வழியாகவும் இறைவன்

பரிவின் பரிமாணங்கள்

 

அருட்பணி. இயேசு கருணாநிதி
22 ஜூலை 2018 ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு
I. எரேமியா 23:1-6 / II. எபேசியர் 2:13-18 / III. மாற்கு 6:30-34 /

'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள்ஒளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே, சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன், எங்கு எழுந்தருளுவது இனியே?'

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் வாசகங்களைப் படிக்கும்போது மேற்காணும் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்தான் (திருவாசகம், எட்டாம் திருமுறை, பாடல் எண் 9) நினைவிற்கு வருகிறது. இந்தப் பாடலின் பொருளறிந்து, பின் இதன் பொருத்தத்தை அறிவோம்.

Lire la suite : பரிவின் பரிமாணங்கள் 

உடலில் தைத்த முள்

08.07.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருட்பணி இயேசு கருணாநிதி

08 ஜூலை 2018 ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு
I. எசேக்கியேல் 2:2-5 / II. 2 கொரிந்தியர் 12;7-10 / III. மாற்கு 6:1-6

 

காலில் முள் குத்திய அனுபவம் உங்களுக்கு உண்டா? கிராமத்தில் பிறந்த எனக்கு நிறையவே உண்டு. உள்ளங்கால் என்றால் முள் குத்துவதும், முன்னங்கால் என்றால் கல் எத்துவதும், பின்னங்கால் என்றால் அம்மி உரசுவதும் சகஜம்தானே என்பது கிராமத்தில் வளர்ந்த குழந்தைகளுக்குத் தெரியும். செருப்பு அணியாதவர்களுக்கு இந்தப் பிரச்சினை என்றால், செருப்பு அணிந்தவர்களுக்கு மற்றொரு பிரச்சினை உண்டு.

Lire la suite : உடலில் தைத்த முள்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org