Get Adobe Flash player

Articles

காணிக்கை மாதா திருநாள் பற்றிய குறிப்பு

இந்தப் பட்டனை அழுத்தினால் குறிப்பைப் புத்தக வடிவில் காணலாம்.

பக்கத்தின் உள்ளே தட்டினால்

சிறிதாகவோ பெரிதாகவோ ஆக்கிப் படிக்கலாம்

பக்கத்தின் எந்த ஒரு மூலையில் தட்டினாலும்

பக்கம் தானாகவே திரும்பும்.

presentation of St Mary

சர்வ வியாபி 20.11.2016 இதழைப் படிக்க

இந்தப் படத்தைத் தட்டுக
Sarva viyabi 20.11 16

அவரும், நீங்களும், நானும் - அரசரே!

கிறித்து அரசர் திருநாள் வாசகங்களின் விளக்கங்கள்

அளிப்பவர் :அருள்பணி இயேசு கருணாநிதி

இன்றைய நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

அ. கடந்த ஆண்டு டிசம்பர் 8 அன்று நாம் தொடங்கிய இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு இன்று நிறைவு பெறுகிறது. உரோமை தூய பேதுரு பசிலிக்காவின் யூபிலி கதவுகளை மூடி யூபிலியை இன்று நிறைவு செய்கிறார் நம் திருத்தந்தை. 

ஆ. இன்று திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு. இந்த ஆண்டு முழுவதும் நாம் இரக்கத்தின் நற்செய்தியாளராம் லூக்கா நற்செய்தியாளரோடு இறைவாhத்தைப் பயணம் செய்தோம். அந்தப் பயணம் இன்று நிறைவு பெறுகிறது.

Lire la suite...

சொல்லிக்கொடுப்போம்
நன்றி : அருள்வாக்கு
jesus 38

அதிகாலையில் விழிக்கச் சொல்வோம்,
அருமை இயேசுவைத் துதிக்கச் சொல்வோம்

அக்கறையாய்ப் படிக்கச் சொல்வோம்,அத்துடன்
அன்பாய் வாழச் சொல்வோம்

Lire la suite...

'அவர்கள்' - 'நீங்கள்'

13.11.2016 ஞாயிறு வாசகங்களின் விளக்கம்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி

இரண்டு வாரங்களுக்கு முன் மத்திய இத்தாலியில் தெர்னி என்ற நகருக்கு அருகே பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்படுத்திய தாக்கத்தை ரோமிலும் மக்கள் உணர்ந்தனர். கடந்த நான்கு மாதங்களாக நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன இத்தாலியில். இதைப் பின்புலமாக வைத்து 'ரேடியோ மரியா' என்ற வானொலியில் மறையுரை ஆற்றிய அருள்தந்தை ஒருவர், 'நிலநடுக்கங்களுக்குக் காரணம் இத்தாலி நாடு செய்கின்ற பாவங்கள்தாம்!' என்றார். இதைக் கேட்ட அனைவரும் கொந்தளிக்க, விஷயம் போப் பிரான்சிஸ் வரை போக, அவர் அவரைக் கண்டிக்க, தான் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் அருள்தந்தை.

Lire la suite...

வீரமாமுனிவர்
நன்றி : விக்கிபீடியா
Veeramaamunivar 01

இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

Lire la suite...

வழியைப் பின்பற்றுகிறவர்கள்
அருள்பணி. முனைவர். சோ. பிலிப் சுதாகர்.
அசிசி நகர் பங்குப் பணியாளர். திண்டுக்கல் மறைமாவட்டம். பேசி: 9442134209
Marie

வழியைப் பின்பற்றுகிறவர்கள் என்றுதான் கிறித்தவர்கள் முதன்முதலாக அழைக்கப்பட்டனர். கிறித்தவம் மிகவும் போற்றுதலுக்குரியவரானவர் இயேசுவின் தாய் மரியாள் நம் அனைவரின் அன்னை. கடவுளின் விருப்பத்திற்கு ஆம் கூறியதால் மானுட வரலாற்றில் தனக்கெனத் தனியிடம் பிடித்துக் கொண்டவர் அன்னை மரியாள்.

Lire la suite...

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்

 Latran basilic புனித யோவான் கோவிலின் திருத்தூயகக் கூரைப்பகுதி. மகிமையில் விளங்கும் இயேசு.
கற்பதிகை ஓவியக் கலைஞர்: ஜாக்கோப்போ தொர்ரீத்தி. 13ஆம் நூற்றாண்டு.
19
ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org