Get Adobe Flash player

Articles

4 ஜூன் 2017: தூய ஆவியானவர் பெருவிழா
வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர்: அருள்பணி இயேசு கருணாநிதி
I. திருத்தூதர் பணிகள் 2:1-11
II. 1 கொரிந்தியர் 12:3-7,12-13
III. யோவான் 20:19-21

'உடல்கள் பல – உயிர் ஒன்றே'

கடந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா நாள்களில் பள்ளி ஒன்றுக்கு கருத்தமர்வுக்குச் சென்றிருந்தேன். கருத்தமர்வின் ஒரு பகுதியாக பலூன்களைக் கொண்டு விளையாட்டு ஒன்று நடத்தினேன். எல்லாருக்கும் பழக்கமான விளையாட்டுதான் அது. ஒவ்வொருவருக்கும் காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றைக் கொடுத்து அதை அவர்கள் தங்கள் தலைக்கு மேலே விட்டு, தங்கள் கைகளைப் பயன்படுத்தாமல், தங்கள் வாயினால் ஊதியே பலூன்களை மேலே நிற்க வைக்க வேண்டும். மாணவர்கள் மிக உற்சாகமாக விளையாடினார்கள். சிலர் தங்கள் கைகளை பின்னால் கட்டிக் கொண்டனர். சிலர் தங்கள் கைகளை பாதி உயர்த்திக் கொண்டனர். சிலரின் பார்வை தங்களுக்கு அருகில் இருப்பவர்களின் பலூன்கள் மேல் இருந்தது. விறுவிறுப்பாக விளையாட்டு நடந்து கொண்டிருந்தது.

Lire la suite...

28 மே 2017: ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா
மறைதலே இறைமை
-28.05.2017 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி

I. திருத்தூதர் பணிகள் 11:1-11

II. எபேசியர் 1:17-23

III. மத்தேயு 28:16-20

'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,

பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,

வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.

இவ்வாறு அவர் சென்றது

எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.

மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்

முன்னரே சென்ற அவ்விடத்திற்கு

அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்

அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று 

நம்பிக்கை கொள்வதற்காகவே'

Lire la suite...

திக்கற்றவர்களாக விடமாட்டேன்!

ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி

21 மே 2017: உயிர்ப்புக் காலம் 6ஆம் ஞாயிறு

I. திப 8:5-8, 14-17

II. 1 பேது 3:15-18

III. யோவா 14:15-21

இக்கால நம் வாழ்க்கை ஒரு முரண். பெரிய கட்டடங்கள். ஆனால் சிறிய உள்ளங்கள். அகன்ற பாதைகள். ஆனால் குறுகிய கண்ணோட்டங்கள். அதிகமாகச் செலவழிக்கிறோம். ஆனால் குறைவாக வைத்திருக்கின்றோம். அதிகமாக வாங்குகின்றோம். ஆனால் அவற்றைக் குறைவாகவே பயன்படுத்துகின்றோம். பெரிய வீடுகள்.

Lire la suite...

என் வாழ்வின் எம்மாவு
30.04.2017 ஞாயிற்றுக் கிழமை வாசகங்களின் விளக்கங்கள்

தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி

'வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த ஊரின் பெயர் எம்மாவு' எனத் தொடங்குகிறது இன்றைய நற்செய்தி. இந்தச் சீடர்கள் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்கள் அல்லர். ஒருவேளை இயேசு தனக்கு முன் இருவர் இருவராய் அனுப்பிய 72 அல்லது 70 சீடர்களில் இருவராக இவர்கள் இருக்கலாம். அல்லது இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவரை மனதளவில் ஏற்றுக்கொண்ட நிக்கதேம், அரிமத்தியா நகர் யோசேப்பு போன்றவர்களாக இருக்கலாம். இந்த இருவரில் ஒருவர் பெயரை மட்டும் கிளயோப்பா என பதிவு செய்கிறார் லூக்கா. இருவர்தாம் சென்றார்களா அல்லது இருவர் சாட்சிக்குத் தேவை என்பதால் இருவரை லூக்கா தேர்ந்தெடுக்கிறாரா என்பது பற்றிய தெளிவு இல்லை.

Lire la suite...

முரண்படு வாழ்வு
09 ஏப்ரல் 2017: ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
வாசகங்களின் விளக்கம் தருபவர் :

அருள்பணி இயேசு கருணாநிதி

சென்னையின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 110 பேர் இந்த தொகுதியில் வேட்பாளர்களாக போராடுகின்றார்கள், போட்டியிடுகின்றார்கள். கட்சிகள் தங்கள் பெயர்கள் மற்றும் சின்னங்களை இழந்தது, புதிய கட்சிகள், புதிய சின்னங்கள், புதிய முகங்கள், புதிய வாக்குறுதிகள், புதிய வாகனங்கள், புதிய அன்பளிப்புகள் என எங்கும் கூட்டமாக இருக்கின்றது. ஒவ்வொரு தலைவரும் இந்தப் பகுதிக்குள் நுழையும்போது மக்கள் அளிக்கும் வரவேற்பு ஒவ்வொரு நிலையில் இருக்கிறது. மக்கள் கூட்டம் சில இடங்களில் தானாக சேர்கின்றது. பல இடங்களில் சேர்க்கப்படுகின்றது. பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற நிலையில் ஆட்டமும், ஓட்டமுமாக இருக்கிறது ஆர்.கே. நகர்.

Lire la suite...

குருத்து ஞாயிறு: மறக்க முடியாத வரலாறு
ஜெயந்தன்
நன்றி :
Hindurameaux 02

வெற்றிபெற்றால் வாகைப்பூக்களை சூடிக்கொண்டு தாயகம் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் சங்ககாலத் தமிழர்கள். ரோமானியர்கள் கொஞ்சம் மாறுபட்டு, வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் ஒலிவமரக் கிளைகளைக் கையில் எந்திக்கொண்டு, தங்கள் வெற்றியைப் பறைசாற்றும் விதமாக உற்றார், உறவினர் நண்பர்கள் கூட்டத்துடன் தெருக்களில் பவனியாக வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இப்படி வெற்றிக்களிப்போடு வருபவர்களை, வழிநெடுகிலும் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து வரவேற்று உற்சாகப்படுத்துவார்கள் ரோமானியக் குடிமக்கள்.

Lire la suite...

சர்வவியாபி 26 03 2017 இதழைப் படிக்க

இந்கப் படத்தில் சொடுக்குக
Viayabi 26 03 17

கல்லறைகளைத் திறந்து

02.04.201ஞாயிறு - வாசகங்களின் விளக்கங்கள்

தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி

ஆப்பிரிக்காவின் வடக்கு நாடுகளிலிருந்து படகுகளிலும், கப்பல்களிலும் ஏறி இத்தாலி நாடு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சம் புகும் கனவோடு புறப்பட்டவர்கள் பலருக்கு கடலே கல்லறை ஆகிவிட்டது என்பது கடந்த 4 மாதங்களுக்கு முன் நாம் அறிந்த செய்தி. இந்த செய்தியை வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவர்களின் இந்தப் பயணத்தை நாடுகடத்துதலுக்கு ஒப்பிட்டு, அப்படி நாடுகடத்தப்பட்டவர்கள் இறந்தபோது எசேக்கியேல் இறைவாக்கினர் வாயிலாக கடவுள் வழங்கிய செய்தியைச் சுட்டிக்காட்டி நம்பிக்கை ஊட்டினார். அந்த இறைவாக்குப் பகுதியைத்தான் நாம் இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசே 37:12-14) வாசிக்கின்றோம்.

Lire la suite...

நாங்களுமா பார்வையற்றோர்?

26 மார்ச் 2017: தவக்காலம் 4ஆம் ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

அளிப்பவர் ; அருள்பணி இயேசு கருணாநிதி

சில இறைவார்த்தை பகுதிகள் தாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை அப்படியே நம் கண்கள் முன்பாக நடத்திக்காட்டும் தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட இறைவார்த்தைப் பகுதிகளில் இருந்துதான் இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களை நாம் வாசிக்கின்றோம்.

Lire la suite...

காலிக்குடம்

19 03 2017 ஞாயிற்றுக் கிழமை வாசகங்களின் விளக்கங்கள்

அளிப்பவர் : அருளபணி இயேசு கருணாநிதி

எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை இறைவன் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்து வந்தபோது அவர்கள் கண்ணெதிரே செங்கடல். என்னதான் கடல் தண்ணீரால் நிறைந்திருந்தாலும் அதில் ஒரு வாய் குடிக்க முடியுமா? கடலைப் பிளந்து கட்டாந்தரையில் அவர்களை நடக்கச் செய்கின்றார் கடவுள். கடலையே வற்றச் செய்த அவர் தங்கள் தண்ணீர்க்குடங்களையும் வற்றச் செய்துவிட்டார் என முணுமுணுக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். 'எவ்ளோ பெரிய விடயம் செய்து கடவுள் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்? இனி அடிமைத்தனம் இல்லை. வன்முறை இல்லை' என கொண்டாடுவதற்குப் பதிலாக, 'தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை' என முணுமுணுக்க ஆரம்பிக்கின்றனர் மக்கள்.

Lire la suite...

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org