Get Adobe Flash player

புனிதர்கள் திருநாள் 01.11.2018 வாசகங்கள்
Jesus 41

முதல் வாசகம் : திருவெளிப்பாடு 7:2-4 ; 9-14

2 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, 3“எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார்.

4முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கைபற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.
 
இது ஆண்டவரின் அருள் வாக்கு
இறைவா உமக்கு நன்றி!
இரண்டாம் வாசகம் ! 1 யோவான் 3:1-3
1நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை.
2 என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். 3அவரை எதிர்நோக்கி இருக்இது ஆண்டவரின் அருள் வாக்கு

 இது ஆண்டவரின் அருள் வாக்கு
இறைவா உமக்கு நன்றி!
நற்செய்தி : புனித மத். 5:1-12

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;

ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

4துயருறுவோர் பேறுபெற்றோர்;

ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.✠

5கனிவுடையோர் பேறுபெற்றோர்;

ஏனெனில் அவர்கள் நாட்டை

உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.⁕✠

6நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர்

பேறுபெற்றோர்; ஏனெனில்

அவர்கள் நிறைவுபெறுவர்.✠

7இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;

ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

8தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;

ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.✠

9அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;

ஏனெனில் அவர்கள்

கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

10நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்

பேறு பெற்றோர்; ஏனெனில்

விண்ணரசு அவர்களுக்குரியது.✠
11என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!✠
12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.✠

இது கிறித்துவின் நற்செய்தி
கிறித்துவே உமக்குப் புகழ்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org