Get Adobe Flash player

Lectures

www.tamilcatholicdaily.com/sundaySermon/MerinaSr/55.html
வழங்குவது :Sr.Merina O.S.M Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
நன்றி :தமிழ் ஆன்மீகப் பணியகம் செருமனி

ஓடு கால்களால் அல்ல இதயத்தால்.....

திருத்தூதர் பணி 10:34,37-43
பதிலுரைப்பாடல் திபா: 118: 1-2,16 – 17, 22-23
கொலோசையர் 3:1-4
யோவான் 20: 1-9

விதையொன்றினை, மடிந்தது என்றெண்ணி மறக்க நினைக்கும் தருணத்திலே,
வீழ்ந்ததும் நானல்ல வீரியமிழந்ததும் நானுமல்ல,
என்று வீறு கொண்டெழுந்து நம்மை மகிழ்விப்பது போல், மகிழ்வென்னும் பூச்சூடி மணம் வீசும் அனைவருக்கும் இனிய உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துகள்.

Lire la suite : உயிர்ப்புப் பெருவிழா-21.04.201வாசகங்கள்

புனித வெள்ளி (19.04.2019) வாசகங்கள்
Ecce homo
முதல்வாசகம்

அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்: கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்: ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்: கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52:13 - 53:12

இதோ, என் ஊழியர் சிறப்படைவார்: அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்: அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது: மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்: அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்: ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்: தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.

Lire la suite : புனித வெள்ளி (19.04.2019) வாசகங்கள்

18.04.2019 ஆண்டவரின் இறுதி இரவு உணவு - முதல் வாசகம்
ரழடல வரசளனயல 1ளவ சநயனப

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்;  உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!  இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.

Lire la suite : 18.04.2019 ஆண்டவரின் இறுதி இரவுஉணவு - முதல் வாசகம்

Holy Thursday Psalm

பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதே.

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.                                                            பல்லவி

Lire la suite : புனித வியாழன் - திருப்பாடல்

Holy Thursday 2nd Reading

 

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து,  கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.  அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.


ஆண்டவரின் அருள்வாக்கு
பதில் : இறைவனுக்கு நன்றி

 

18.04.2019 ஆண்டவரின் இறுதி இரவுஉணவு - நற்செய்தி
Holy Thursday Gospel

பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.  இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது.

Lire la suite : 18.04.2019 ஆண்டவரின் இறுதி இரவுஉணவு - நற்செய்தி

pope 15

முதல்வாசகம்
நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்: 50:4-7

நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்: காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்: கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை.

Lire la suite : திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (14.04.2019) வாசகங்கள்

தவக்காலத்தின் 5ம் ஞாயிறு (07.04.2019) வாசகங்கள்
jesus 09

முதல்வாசகம்
இதோ நாம் புதியன செய்கிறோம். நாம் மக்களின் தாகம் தீர்ப்போம்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 43:16-21

கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே. முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்: முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்: இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்: இப்பொழுதே அது தோன்றிவிட்டது: நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா?

Lire la suite : தவக்காலத்தின் 5ம் ஞாயிறு (07.04.2019) வாசகங்கள்

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா 25 03 2019
Marie 02

முதல் வாசகம்

 இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b

அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: ``உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்'' என்றார்.

Lire la suite : மரியாளுக்கு மங்கல வாழத்து வழங்கிய விழா 25.03.2019


jesus 07
முதல்வாசகம்

இருக்கின்றவராக இருக்கின்றவர் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்: 17: 3-7

அந்நாட்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார்.

Lire la suite : தவக்காலத்தின் 3ம் ஞாயிறு (24.03.2019) வாசகங்கள்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org