Lectures
திருவருகைக்காலம் 1ம் ஞாயிறு (03.12.2017) ஞாயிறு வாசகங்கள்
முதல்வாசகம்
நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 63: 16-17, 64:1,3-8
ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து `எம் மீட்பர்' என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வது ஏன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியது ஏன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்?
3 டிசம்பர் 2017 திருவருகைக்காலம் முதல் ஞாயிறு வாசகங்கள்
விளக்கங்கள் தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை
I. எசாயா 63:16-17, 64:1-3,8
II. 1 கொரிந்தியர் 1:3-9
III. மாற்கு 13:33-37
எல்லா வகையிலும் செல்வராக!
இன்று திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு. இன்று திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாள். வாசகப் புத்தகம், கட்டளை செபம், திருப்பலி புத்தகம் என அனைத்தும் புதிதாகத் தொடங்கும். திருவருகைக்காலத்தை திருஅவை மூன்று நிலைகளில் புரிந்துகொள்கிறது: ஒன்று,
இயேசு அரசர் பெருவிழா
26.11.2017)ஞாயிறு வாசகங்கள்
முதல்வாசகம்
என் மந்தையே, நான் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன்.
பொதுக்காலம் 33ஆம் வாரம் (19.11.2017) ஞாயிறு வாசகங்கள்
முதல்வாசகம்
திறமை வாய்ந்த பெண், தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31
திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள்.
முதல்வாசகம்
ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16
ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்;
பத்துக் கன்னியர் உவமை - ஒரு மறுவாசிப்பு
12 நவம்பர் 2017 ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு
வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி
I. சாலமோனின் ஞானம் 6:12-16
II. 1 தெசலோனிக்கர் 4:13-18
III. மத்தேயு 25:1-13
'குச்சி உங்கிட்ட இருக்கு என்பதற்காக எல்லாரையும் நீ குரங்கா நினைக்கக் கூடாது!'
- கீழிருப்பவர் ஒருவர் தனக்கு மேலிருப்பவரைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் சொல்லிக்கொள்ளும் வாக்கியம் இது என சில வாரங்களுக்கு முன் ஒருவர் டுவிட்டி இருந்தார்.
சரி இப்போ இது எதுக்கு இங்க?
நீ மணமகன் என்பதற்காக லேட்டா வந்துட்டு இருக்கிற எல்லாரையும் வெளிய அனுப்புவியா?'
ஆண்டின் பொதுக்காலம் நிறைவு பெற்று திருவருகைக்காலம் பிறக்க சில நாள்களே இருக்க, நற்செய்தி வாசகங்கள் மானிட மகன் என்னும் மணமகனின் வருகை பற்றி பேச ஆரம்பித்துவிட்டன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'பத்துக் கன்னியர் உவமை'யை வாசிக்கின்றோம். ஏற்கனவே நாம் கேட்ட, வாசித்த இந்த உவமையை கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம்:
என் பெயர் வெரோணிக்கா!
பொதுக்காலம் 31ஆம் வாரம் (05.11.2017)-ஞாயிறு வாசகங்கள்
முதல்வாசகம்
நெறிதவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள்.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 1: 14b-2: 1-2,8-10
`நானே மாவேந்தர்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ``இப்பொழுது, குருக்களே! உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்க வேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன்.
முதல் வாசகம்
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 23 - 3: 9
கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர். நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள்.
நவம்பர் 1 புனிதர் அனைவர் பெருவிழா - வாசகங்கள்
புனிதர் அனைவரின் மகிமைக்காக இன்று பெருவிழாக் கொண்டாடி நாம் எல்லோரும் ஆண்டவரில் அகமகிழ்வோம். அவர்களுடைய விழாவை முன்னிட்டு, வானதூதரும் மகிழ்ந்து இறைவனின் திருமகனை வாழ்த்துகின்றனர்.
முதல் வாசக முன்னுரை:
திருவெளிப்பாடு 7: 2-4, 9-14
இறப்புக்குப்பின் நிலைவாழ்வு ஒன்று உண்டு’ என்பது கிறிஸ்தவத்தின் தொன்மை வாய்ந்த நம்பிக்கைகளுள் ஒன்றாகும். அதன்படி உலக வாழ்வில் மேற் கொள்ளப்பட்ட செயல்களின்படி ஒருவருக்குத் தீர்ப்பு வழங்கப்படும். விண்ணகக் கொடையை உடனடியாகப் பெறுவது என்பது எதிர்பார்ப்பாகும். அதன்படி புதுவாழ்வு பெற்ற புனிதர் கூட்டத்தை தம் காட்சியில் கண்ட திருத்தூதர் யோவான் விவரிப்பதை
எடுத்துக்கூறும் முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்
பொதுக்காலம் 30ஆம் வாரம் (29.10.2017) ஞாயிறு வாசகங்கள்
முதல்வாசகம்
விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22: 21-27
ஆண்டவர் கூறியது: அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.