Get Adobe Flash player

Lectures

திருக்குடும்ப் பெருவிழா. (30.12.2018) - ஞாயிறு - வாசகங்கள்
Jesus 52

முதல்வாசகம்
அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம். 1:20-22.24-28

உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்'' என்று சொல்லி, அவர் அவனுக்குச் `சாமுவேல்' என்று பெயரிட்டார். எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள்.

Lire la suite : திருக்குடும்ப் பெருவிழா. (30.12.2018) - ஞாயிறு - வாசகங்கள் 

திருவருகைக் காலம் 3ம் ஞாயிறு. வாசகங்கள்
(16.12.2018)
jesus 51

முதல்வாசகம்
உன் பொருட்டு ஆண்டவர் மகிழ்ந்து களிகூருவார்.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

Lire la suite : திருவருகைக் காலம் 3ம் ஞாயிறு. -16.12.2018- வாசகங்கள் 

Annunciation 01

முதல் வாசகம்

 உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ``நீ எங்கே இருக்கின்றாய்?'' என்று கேட்டார். ``உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்'' என்றான் மனிதன்.

Lire la suite : அமலோற்பவ அன்னையின் திருவிழா 08 12 2018 வாசகங்கள் 

புனித பிரான்சிஸ் சவேரியார் 03 12 2018
 
மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா
 
முதல் வாசகம்
 
 ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். 
 
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3 
 
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். 

Lire la suite : புனித பிரான்சிஸ் சவேரியார் 03 12 2018

கிறித்து அரசர் விழா பெருநாள்

பொதுக்காலம் 34ம் வாரம் (25.11.2018) -  வாசகங்கள்
jesus 49

முதல்வாசகம்
மானிட மகனின் ஆட்சியுரிமை என்றுமுளதாகும்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம். 7:13-14

அந்நாட்களில் இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்: இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்: அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன: எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்: அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி

Lire la suite : பொதுக்காலம் 34ம் வாரம் (25.11.2018) -  வாசகங்கள் 

Jesus 43

முதல்வாசகம்
எலியா சொன்னபடியே கைம்பெண் செய்தார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம். 17:10-16

அந்நாட்களில், எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்த பொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, "ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்றார்.

Lire la suite : பொதுக்காலம் 32ம் வாரம் (11.11.2018) ஞாயிறு வாசகங்கள் 

பொதுக்காலம் 31ம் வாரம் (04.11.2018) ஞாயிறு வாசகங்கள்
Jesus 40

முதல்வாசகம்
உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6

மோசே மக்களை நோக்கிக் கூறியது: நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

Lire la suite : பொதுக்காலம் 31ம் வாரம் (04.11.2018) ஞாயிறு வாசகங்கள்

jesus 42

நவம்பர் 02

All Souls Day  - இறந்த அனைவர் நினைவு

முதல் வாசகம்

சாலமோனின் ஞானம் 3:1-9

 

நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.

Lire la suite : நவம்பர் 02  All Souls Day  - இறந்த அனைவர் நினைவு

புனிதர்கள் திருநாள் 01.11.2018 வாசகங்கள்
Jesus 41

முதல் வாசகம் : திருவெளிப்பாடு 7:2-4 ; 9-14

2 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, 3“எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார்.

Lire la suite : புனிதர்கள் திருநாள் 01.11.2018 வாசகங்கள்

பொதுக்காலம் 29ம் வாரம் (21.10.2018) ஞாயிறு வாசகங்கள்
jesus 39

முதல்வாசகம்
தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 53:10-11

அந்நாள்களில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்:

Lire la suite : பொதுக்காலம் 29ம் வாரம் (21.10.2018) ஞாயிறு  வாசகங்கள் 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org