Get Adobe Flash player

Lectures

ஆகஸ்டு 15 புதன் கிழமை

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா வாசகங்கள்
Marie 03

முதல் வாசகம்

பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19ய; 12: 1-6,10யb

விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.

Lire la suite : ஆகஸ்டு 15  தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா

12.08.2018 பொதுக் காலம் 19 ஆம் ஞாயிறு - வாசகங்கள்
Jesus 30

முதல்வாசகம்
அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8

அந்நாள்களில் எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.”

Lire la suite : 12.08.2018 பொதுக் காலம் 19 ஆம் ஞாயிறு - வாசகங்கள் 

Hostie

முதல்வாசகம்
நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 2-4,12-15

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். "இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கிää "இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்துää எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்!

Lire la suite : ஞாயிறு 05.08.2018 வாசகங்கள் 

jesus 29

முதல்வாசகம்
இம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம். 4: 42-44

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப்

Lire la suite : 29.07.2018 ஞாயிற்றுக் கிழமை வாசகங்கள் 

 

jesus 28

முதல் வாசகம்

ஆடுகளைக் கூட்டிச் சேர்த்து, அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம்: 23: 1-6

ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு! தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்:

Lire la suite : 22.07.2018 ஞாயிறு - 16 ஆம் வாரம்- வாசகங்கள் 


jesus 27முதல்வாசகம்

என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம். 7: 12-15

பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு: யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு: அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே: ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம் " என்று சொன்னான்.

Lire la suite : 15.07.2018 ஞாயிறு - பொதுக்காலம் 15 ஆம் வாரம்-வாசகங்கள் 

jesus 26

முதல் வாசகம்

 தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 2-5

அந்நாள்களில் ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன்.

அவர் என்னிடம், ``மானிடா! எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்'' என்றார்.

Lire la suite : 08.07.2018 ஞாயிறு வாசகங்கள் 

Jesus 24

முதல்வாசகம்
அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம். 1: 13-15, 2: 23-24

சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை: அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை: கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

Lire la suite : ஞாயிறு 01.07.2018 வாசகங்கள் 

Jean Baptiste 01

முதல்வாசகம்
நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்: தொலைவாழ் மக்களினங்களே, கவனி யுங்கள்: கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்: தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்: என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்: தம் அம்பறாத் துணியில் என்னை மறை த்துக் கொண்டார். அவர் என்னிடம், நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழி யாய் நான் மாட்சியுறுவேன் என்றார்.

Lire la suite : புனித திருமுழுக்கு யோவான்  திருநாள் 24.06.2018 வாசகங்கள்

Bible 03

முதல்வாசகம்
தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 17: 22-24

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன். இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன்.

Lire la suite : 17.06.2018 ஞாயிறு வாசகங்கள் 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org